Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௩

Qur'an Surah Al-Anbya Verse 3

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَاهِيَةً قُلُوْبُهُمْۗ وَاَسَرُّوا النَّجْوَىۖ الَّذِيْنَ ظَلَمُوْاۖ هَلْ هٰذَآ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْۚ اَفَتَأْتُوْنَ السِّحْرَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ (الأنبياء : ٢١)

lāhiyatan
لَاهِيَةً
Distracted
அலட்சியம் செய்கின்றன
qulūbuhum
قُلُوبُهُمْۗ
their hearts
அவர்களது உள்ளங்கள்
wa-asarrū
وَأَسَرُّوا۟
And they conceal
பகிரங்கப்படுத்திக் கொண்டனர்
l-najwā
ٱلنَّجْوَى
the private conversation
பேச்சை
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوا۟
those who [they] wronged
அநியாயக்காரர்கள்
hal hādhā
هَلْ هَٰذَآ
"Is this
இவர் இல்லை
illā basharun
إِلَّا بَشَرٌ
except a human being
மனிதரே தவிர
mith'lukum
مِّثْلُكُمْۖ
like you?
உங்களைப் போன்ற
afatatūna
أَفَتَأْتُونَ
So would you approach
ஏற்றுக்கொள்கிறீர்களா
l-siḥ'ra
ٱلسِّحْرَ
the magic
சூனியத்தை
wa-antum
وَأَنتُمْ
while you
நீங்கள்
tub'ṣirūna
تُبْصِرُونَ
see (it)?"
அறிந்துகொண்டே

Transliteration:

Laahiyatan quloobuhum; wa asarrun najwal lazeena zalamoo hal haazaa illaa basharum mislukum afataa toonas sihra wa antum tubsiroon (QS. al-ʾAnbiyāʾ:3)

English Sahih International:

With their hearts distracted. And those who do wrong conceal their private conversation, [saying], "Is this [Prophet] except a human being like you? So would you approach magic while you are aware [of it]?" (QS. Al-Anbya, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச்) சிந்திப்பதே இல்லை. அன்றி, இத்தகைய அநியாயக்காரர்கள் (நம்முடைய தூதரைப் பற்றி) "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறென்ன? நீங்கள் பார்த்துக்கொண்டே (அவருடைய) சூனியத்தில் சிக்க வருகின்றீர்களா?" என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௩)

Jan Trust Foundation

அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன; இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக| “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை; நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?” என்று கூறிக்கொள்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களது உள்ளங்கள் (அறிவுரையை) அலட்சியம் செய்கின்றன. அநியாயக்காரர்கள் (தங்களுக்கு மத்தியில்) பேச்சை பகிரங்கப்படுத்திக் கொண்டனர். (அதில்) “இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர வேறில்லை. நீங்கள் அறிந்துகொண்டே சூனியத்தை (-இந்தக் குர்ஆனை) ஏற்றுக் கொள்கிறீர்களா?” (என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.)