Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௨௩

Qur'an Surah Al-Anbya Verse 23

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا يُسْـَٔلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْـَٔلُوْنَ (الأنبياء : ٢١)

lā yus'alu
لَا يُسْـَٔلُ
Not He (can) be questioned
அவன் கேள்வி கேட்கப்பட மாட்டான்
ʿammā
عَمَّا
about what
பற்றி
yafʿalu
يَفْعَلُ
He does
அவன் செய்வதை
wahum
وَهُمْ
but they
அவர்கள்தான்
yus'alūna
يُسْـَٔلُونَ
will be questioned
கேள்வி கேட்கப்படுவார்கள்

Transliteration:

Laa yus'alu 'ammaa yaf'alu wa hum yus'aloon (QS. al-ʾAnbiyāʾ:23)

English Sahih International:

He is not questioned about what He does, but they will be questioned. (QS. Al-Anbya, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

அவன் செய்பவைகளைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது. (அவ்வளவு சர்வ சுதந்திரமும், வல்லமையும் உள்ளவன்.) எனினும், அவனோ அனைவரையும் (அவரவர்களுடைய செயலைப் பற்றிக்) கேட்கக் கூடியவன். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௨௩)

Jan Trust Foundation

அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் செய்வதைப் பற்றி அவன் கேள்வி கேட்கப்பட மாட்டான். அவர்கள்தான் (-அடியார்கள்தான்) கேள்வி கேட்கப்படுவார்கள்.