குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௨௨
Qur'an Surah Al-Anbya Verse 22
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَوْ كَانَ فِيْهِمَآ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَفَسَدَتَاۚ فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُوْنَ (الأنبياء : ٢١)
- law kāna
- لَوْ كَانَ
- If (there) were
- இருந்திருந்தால்
- fīhimā
- فِيهِمَآ
- in both of them
- அவை இரண்டிலும்
- ālihatun
- ءَالِهَةٌ
- gods
- கடவுள்கள்
- illā l-lahu
- إِلَّا ٱللَّهُ
- besides Allah
- அல்லாஹ்வைத் தவிர
- lafasadatā
- لَفَسَدَتَاۚ
- surely they (would) have been ruined
- அவை இரண்டும் சீரழிந்து இருக்கும்
- fasub'ḥāna
- فَسُبْحَٰنَ
- So glorified
- மகாத் தூயவன்
- l-lahi
- ٱللَّهِ
- (is) Allah
- அல்லாஹ்
- rabbi
- رَبِّ
- Lord
- அதிபதியான
- l-ʿarshi
- ٱلْعَرْشِ
- (of) the Throne
- அர்ஷுடைய
- ʿammā
- عَمَّا
- (above) what
- விட்டு
- yaṣifūna
- يَصِفُونَ
- they attribute
- அவர்கள் வர்ணிப்பதை
Transliteration:
Law kaana feehimaaa aalihatun illal laahu lafasadataa; fa-Subhaanal laahi Rabbil 'Arshi 'ammaa yasifoon(QS. al-ʾAnbiyāʾ:22)
English Sahih International:
Had there been within them [i.e., the heavens and earth] gods besides Allah, they both would have been ruined. So exalted is Allah, Lord of the Throne, above what they describe. (QS. Al-Anbya, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௨௨)
Jan Trust Foundation
(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவை இரண்டிலும் (வானங்களிலும் பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர (வேறு) கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டும் சீரழிந்து இருக்கும். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அர்ஷுடைய அதிபதியான அல்லாஹ் மகாத்தூயவன்.