Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௯

Qur'an Surah Al-Anbya Verse 19

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَمَنْ عِنْدَهٗ لَا يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا يَسْتَحْسِرُوْنَ ۚ (الأنبياء : ٢١)

walahu
وَلَهُۥ
And to Him (belongs)
அவனுக்கே
man
مَن
whoever
எவர்கள்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
(is) in the heavens
வானங்களிலும்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth
பூமியிலும்
waman
وَمَنْ
And (those) who
இன்னும் எவர்கள்
ʿindahu
عِندَهُۥ
(are) near Him
அவனிடம்
lā yastakbirūna
لَا يَسْتَكْبِرُونَ
not they are arrogant
பெருமையடிக்க மாட்டார்கள்
ʿan ʿibādatihi
عَنْ عِبَادَتِهِۦ
to worship Him
அவனை வணங்குவதைவிட்டு
walā yastaḥsirūna
وَلَا يَسْتَحْسِرُونَ
and not they tire
இன்னும் சோர்வடைய மாட்டார்கள்

Transliteration:

Wa lahoo man fis samaawaati wal ard; wa man 'indahoo laa yastakbiroona 'an 'ibaada tihee wa laa yastahsiroon (QS. al-ʾAnbiyāʾ:19)

English Sahih International:

To Him belongs whoever is in the heavens and the earth. And those near Him [i.e., the angels] are not prevented by arrogance from His worship, nor do they tire. (QS. Al-Anbya, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

வானங்களிலும் பூமியிலுமுள்ள யாவும் அவனுக்குரியனவே! அவனுடைய சந்நிதியில் இருக்கக்கூடிய (முகர்ரபான மலக்குகளாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமையடிக்கவும் சோர்வுறவும் மாட்டார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௯)

Jan Trust Foundation

வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அவனுக்கே (உரிமையானவர்கள்). அவனிடம் இருப்பவர்கள் (-வானவர்கள்) அவனை வணங்குவதைவிட்டு பெருமை அடிக்க மாட்டார்கள். இன்னும் சோர்வடைய மாட்டார்கள்.