Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௩

Qur'an Surah Al-Anbya Verse 13

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا تَرْكُضُوْا وَارْجِعُوْٓا اِلٰى مَآ اُتْرِفْتُمْ فِيْهِ وَمَسٰكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْـَٔلُوْنَ (الأنبياء : ٢١)

lā tarkuḍū
لَا تَرْكُضُوا۟
Flee not Flee not
விரைந்து ஓடாதீர்கள்
wa-ir'jiʿū
وَٱرْجِعُوٓا۟
but return
திரும்புங்கள்
ilā mā
إِلَىٰ مَآ
to what
எதன் பக்கம்
ut'rif'tum
أُتْرِفْتُمْ
you were given luxury
நீங்கள் பெரும் இன்பம் கொடுக்கப்பட்டீர்கள்
fīhi
فِيهِ
in it
அதில்
wamasākinikum
وَمَسَٰكِنِكُمْ
and to your homes
உங்கள் இல்லங்களின்
laʿallakum tus'alūna
لَعَلَّكُمْ تُسْـَٔلُونَ
so that you may be questioned
நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்

Transliteration:

Laa tarkudoo warji'ooo ilaa maaa utriftum feehe wa masaakinikum la'allakum tus'aloon (QS. al-ʾAnbiyāʾ:13)

English Sahih International:

[Some angels said], "Do not flee but return to where you were given luxury and to your homes – perhaps you will be questioned." (QS. Al-Anbya, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(அச்சமயம் நாம் அவர்களை நோக்கி) "நீங்கள் ஓடாதீர்கள்! நீங்கள் மிக்க ஆடம்பரமாக அனுபவித்து வந்த செல்வத்தின் பக்கமும், வசித்திருந்த உங்கள் வீடுகளுக்கும் நீங்கள் திரும்புங்கள். அங்கு நீங்கள் அதுபற்றி கேட்கப்படுவீர்கள்" (என்று கூறினோம்.) (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௩)

Jan Trust Foundation

“விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக” (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

விரைந்து ஓடாதீர்கள். நீங்கள் எதில் பெரும் இன்பம் கொடுக்கப்பட்டீர்களோ அதன் பக்கமும் உங்கள் இல்லங்களின் பக்கமும் திரும்புங்கள், நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.