குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௦௯
Qur'an Surah Al-Anbya Verse 109
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ اٰذَنْتُكُمْ عَلٰى سَوَاۤءٍۗ وَاِنْ اَدْرِيْٓ اَقَرِيْبٌ اَمْ بَعِيْدٌ مَّا تُوْعَدُوْنَ (الأنبياء : ٢١)
- fa-in tawallaw
- فَإِن تَوَلَّوْا۟
- But if they turn away
- அவர்கள் விலகிச் சென்றால்
- faqul
- فَقُلْ
- then say
- நீர் கூறிவிடுவீராக
- ādhantukum
- ءَاذَنتُكُمْ
- "I (have) announced to you
- உங்களுக்கு நான் அறிவித்து விட்டேன்
- ʿalā sawāin
- عَلَىٰ سَوَآءٍۖ
- equally equally
- மிகத் தெளிவாக
- wa-in adrī
- وَإِنْ أَدْرِىٓ
- And not I know
- நான் அறியமாட்டேன்
- aqarībun
- أَقَرِيبٌ
- whether is near
- சமீபமாக உள்ளதா
- am
- أَم
- or
- அல்லது
- baʿīdun
- بَعِيدٌ
- far
- தூரமாக உள்ளதா
- mā tūʿadūna
- مَّا تُوعَدُونَ
- what you are promised
- நீங்கள் வாக்களிக்கப்பட்டது
Transliteration:
Fa in tawallaw faqul aazantukum 'alaa sawaaa'; wa in adreee aqareebun am ba'eedum maa too'adoon(QS. al-ʾAnbiyāʾ:109)
English Sahih International:
But if they turn away, then say, "I have announced to [all of] you equally. And I know not whether near or far is that which you are promised. (QS. Al-Anbya, Ayah ௧௦௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டாலோ (அவர்களை நோக்கி) "நான் (என்னுடைய தூதை) உங்கள் அனைவருக்கும் சமமாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை (வந்தே தீரும். எனினும், அது) சமீபத்தில் இருக்கிறதா தூரத்திலிருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்" என்று கூறிவிடுங்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௦௯)
Jan Trust Foundation
ஆனால், அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் “நான் உங்கள் (எல்லோருக்கும்) சமமாக அறிவித்துவிட்டேன்; இன்னும், உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட (வேதனையான)து சமீபத்திலிருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே!) நீர் சொல்லிவிடுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் விலகிச் சென்றால் நீர் கூறிவிடுவீராக! மிகத் தெளிவாக உங்களுக்கு நான் அறிவித்து விட்டேன், (“நமக்கும் உங்களுக்கும் இடையில் எவ்வித உடன்பாடும் இல்லை என்று”). நீங்கள் வாக்களிக்கப்பட்டது சமீபமாக உள்ளதா அல்லது தூரமாக உள்ளதா என்று நான் அறியமாட்டேன். (என்பதையும் அறிவித்து விடுவீராக!).