குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௦௫
Qur'an Surah Al-Anbya Verse 105
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ كَتَبْنَا فِى الزَّبُوْرِ مِنْۢ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصّٰلِحُوْنَ (الأنبياء : ٢١)
- walaqad
- وَلَقَدْ
- And verily
- திட்டவட்டமாக
- katabnā
- كَتَبْنَا
- We have written
- நாம் எழுதினோம்
- fī l-zabūri
- فِى ٱلزَّبُورِ
- in the Scripture
- வேதங்களில்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- after after
- பின்னர்
- l-dhik'ri
- ٱلذِّكْرِ
- the mention
- எழுதப்பட்டதற்கு
- anna
- أَنَّ
- that
- நிச்சயமாக
- l-arḍa
- ٱلْأَرْضَ
- the earth
- பூமி
- yarithuhā
- يَرِثُهَا
- will inherit it
- அதை அனந்தரமாக அடைவார்கள்
- ʿibādiya
- عِبَادِىَ
- My slaves
- எனது அடியார்கள்
- l-ṣāliḥūna
- ٱلصَّٰلِحُونَ
- the righteous
- நல்ல
Transliteration:
Wa laqad katabnaa fiz Zaboori mim ba'diz zikri annal arda yarisuhaa 'ibaadi yas saalihoon(QS. al-ʾAnbiyāʾ:105)
English Sahih International:
And We have already written in the book [of Psalms] after the [previous] mention that the land [of Paradise] is inherited by My righteous servants. (QS. Al-Anbya, Ayah ௧௦௫)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாம் "ஜபூர்" என்னும் வேதத்தில், நல்லுபதேசங் களுக்குப் பின்னர் எழுதியிருக்கிறோம். நிச்சயமாக பூமிக்கு என்னுடைய அடியார்களில் நன்நடத்தை உடையவர்கள்தாம் வாரிசாவார்கள் என்று. (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௦௫)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்| “நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“லவ்ஹுல் மஹ்ஃபூழ்”(-விதியின் தாய் நூலில்) எழுதப்பட்டதற்குப் பின்னர். (இறைத்தூதர்கள் மீது இறக்கப்பட்ட) வேதங்களில் திட்டவட்டமாக நாம் எழுதினோம். (விதித்தோம்). “நிச்சயமாக (சொர்க்கத்தின்) பூமி -அதை எனது நல்லடியார்கள் அனந்தரமாக அடைவார்கள்.