Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௦௪

Qur'an Surah Al-Anbya Verse 104

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ نَطْوِى السَّمَاۤءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِۗ كَمَا بَدَأْنَآ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗۗ وَعْدًا عَلَيْنَاۗ اِنَّا كُنَّا فٰعِلِيْنَ (الأنبياء : ٢١)

yawma
يَوْمَ
(The) Day
நாளில்
naṭwī
نَطْوِى
We will fold
நாம் சுருட்டுவோம்
l-samāa
ٱلسَّمَآءَ
the heaven
வானத்தை
kaṭayyi
كَطَىِّ
like (the) folding
சுருட்டுவதைப் போன்று
l-sijili
ٱلسِّجِلِّ
(of) a scroll
ஏடுகளை
lil'kutubi
لِلْكُتُبِۚ
for records
புத்தகங்களின் மீது
kamā
كَمَا
As
போன்றே
badanā
بَدَأْنَآ
We began
நாம் தொடங்கியது
awwala
أَوَّلَ
(the) first
முதலாவதை
khalqin
خَلْقٍ
creation
படைப்பின்
nuʿīduhu
نُّعِيدُهُۥۚ
We will repeat it
அதை திருப்பி விடுவோம்
waʿdan
وَعْدًا
a promise
இது வாக்காகும்
ʿalaynā
عَلَيْنَآۚ
upon Us
நம்மீது கடமையான
innā
إِنَّا
Indeed We -
நிச்சயமாக நாம்
kunnā
كُنَّا
We are
இருக்கிறோம்
fāʿilīna
فَٰعِلِينَ
(the) Doers
செய்பவர்களாகவே

Transliteration:

Yawma natwis samaaa'a kataiyis sijilli lilkutub; kamaa badaanaa awwala khalqin nu'eeduh; wa'dan 'alainaa; innaa kunna faa'ileen (QS. al-ʾAnbiyāʾ:104)

English Sahih International:

The Day when We will fold the heaven like the folding of a [written] sheet for the records. As We began the first creation, We will repeat it. [That is] a promise binding upon Us. Indeed, We will do it. (QS. Al-Anbya, Ayah ௧௦௪)

Abdul Hameed Baqavi:

எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீள வைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௧௦௪)

Jan Trust Foundation

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!); முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமக நாம் இதனை செய்வோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஏடுகளை புத்தகங்களின் மீது சுருட்டுவதைப் போன்று வானத்தை நாம் சுருட்டுகின்ற நாளில்... (திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது.) படைப்பின் முதலாவதை நாம் தொடங்கியது போன்றே அதை மீண்டும் (பழைய நிலைக்கே -இல்லாமைக்கே) திருப்பி விடுவோம். (அனைத்தையும் அழித்து விடுவோம்.) இது நம்மீது கடமையான வாக்காகும். நிச்சயமாக நாம் (இதை) செய்(து முடிப்)பவர்களாகவே இருக்கிறோம்.