Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்பியா - Page: 8

Al-Anbya

(al-ʾAnbiyāʾ)

௭௧

وَنَجَّيْنٰهُ وَلُوْطًا اِلَى الْاَرْضِ الَّتِيْ بٰرَكْناَ فِيْهَا لِلْعٰلَمِيْنَ ٧١

wanajjaynāhu
وَنَجَّيْنَٰهُ
இன்னும் நாம் பாதுகாத்தோம்/அவரை
walūṭan
وَلُوطًا
லூத்தையும்
ilā
إِلَى
பக்கம்
l-arḍi
ٱلْأَرْضِ
பூமியின்
allatī bāraknā
ٱلَّتِى بَٰرَكْنَا
அருள்வளம் புரிந்த
fīhā
فِيهَا
அதில்
lil'ʿālamīna
لِلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு
அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்துக் கொண்டு, மனிதர்கள் பெரும் பாக்கியம் அடையக் கூடியதாக நாம் செய்திருக்கும் (பைத்துல் முகத்தஸ் என்னும்) ஊரளவில் கொண்டு வந்து சேர்த்தோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௭௧)
Tafseer
௭௨

وَوَهَبْنَا لَهٗٓ اِسْحٰقَ وَيَعْقُوْبَ نَافِلَةً ۗوَكُلًّا جَعَلْنَا صٰلِحِيْنَ ٧٢

wawahabnā
وَوَهَبْنَا
நாம் வழங்கினோம்
lahu
لَهُۥٓ
அவருக்கு
is'ḥāqa
إِسْحَٰقَ
இஸ்ஹாக்கையும்
wayaʿqūba
وَيَعْقُوبَ
யஃகூபையும்
nāfilatan
نَافِلَةًۖ
கொடையாக
wakullan
وَكُلًّا
அனைவரையும்
jaʿalnā
جَعَلْنَا
ஆக்கினோம்
ṣāliḥīna
صَٰلِحِينَ
நல்லவர்களாக
அன்றி, நாம் அவருக்கு (அவருடைய) கோரிக்கைக்கு அதிகமாக இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நல்லடியார்களாகவும் நாம் ஆக்கினோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௭௨)
Tafseer
௭௩

وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَيْنَآ اِلَيْهِمْ فِعْلَ الْخَيْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِيْتَاۤءَ الزَّكٰوةِۚ وَكَانُوْا لَنَا عٰبِدِيْنَ ۙ ٧٣

wajaʿalnāhum
وَجَعَلْنَٰهُمْ
இன்னும் அவர்களை ஆக்கினோம்
a-immatan
أَئِمَّةً
தலைவர்களாக
yahdūna
يَهْدُونَ
நேர்வழி காட்டுகின்றார்கள்
bi-amrinā
بِأَمْرِنَا
நமது கட்டளையின்படி
wa-awḥaynā
وَأَوْحَيْنَآ
இன்னும் நாம் வஹீ அறிவித்தோம்
ilayhim
إِلَيْهِمْ
அவர்களுக்கு
fiʿ'la
فِعْلَ
செய்வதற்கும்
l-khayrāti
ٱلْخَيْرَٰتِ
நன்மைகளை
wa-iqāma
وَإِقَامَ
இன்னும் நிலைநிறுத்துவதற்கு
l-ṣalati
ٱلصَّلَوٰةِ
தொழுகையை
waītāa
وَإِيتَآءَ
இன்னும் கொடுப்பதற்கு
l-zakati
ٱلزَّكَوٰةِۖ
ஸகாத்தை
wakānū
وَكَانُوا۟
அவர்கள் இருந்தார்கள்
lanā
لَنَا
நம்மை
ʿābidīna
عَٰبِدِينَ
வணங்குபவர்களாக
அன்றி, நம் கட்டளைகளை (மக்களுக்கு) ஏவி நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். அன்றி, நன்மையான காரியங்களைச் செய்யும்படியும், தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், "ஜகாத்" கொடுத்து வரும்படியாகவும் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௭௩)
Tafseer
௭௪

وَلُوْطًا اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّيْنٰهُ مِنَ الْقَرْيَةِ الَّتِيْ كَانَتْ تَّعْمَلُ الْخَبٰۤىِٕثَ ۗاِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فٰسِقِيْنَۙ ٧٤

walūṭan
وَلُوطًا
இன்னும் லூத்தை நினைவு கூர்வீராக!
ātaynāhu
ءَاتَيْنَٰهُ
அவருக்கு நாம் கொடுத்தோம்
ḥuk'man
حُكْمًا
தீர்ப்பளிக்கின்ற ஆற்றலை(யும்)
waʿil'man
وَعِلْمًا
கல்வி ஞானத்தையும்
wanajjaynāhu
وَنَجَّيْنَٰهُ
நாம் அவரை பாதுகாத்தோம்
mina l-qaryati
مِنَ ٱلْقَرْيَةِ
ஊரிலிருந்து
allatī kānat
ٱلَّتِى كَانَت
இருந்தார்கள்
taʿmalu
تَّعْمَلُ
செய்துகொண்டு
l-khabāitha
ٱلْخَبَٰٓئِثَۗ
அசிங்கங்களை
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
qawma
قَوْمَ
மக்களாக
sawin fāsiqīna
سَوْءٍ فَٰسِقِينَ
கெட்ட/பாவிகளாக
லூத்தையும் (நபியாக்கி) அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் கொடுத்துத் தீய காரியங்களைச் செய்து கொண்டிருந்த ஊர் மக்களிலிருந்தும் நாம் அவரை பாதுகாத்துக் கொண்டோம். நிச்சயமாக அவ்வூரார் (மனிதர்களில்) மிகக்கெட்ட மனிதர்களாகவும் பெரும் பாவிகளாகவும் இருந்தனர். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௭௪)
Tafseer
௭௫

وَاَدْخَلْنٰهُ فِيْ رَحْمَتِنَاۗ اِنَّهٗ مِنَ الصّٰلِحِيْنَ ࣖ ٧٥

wa-adkhalnāhu
وَأَدْخَلْنَٰهُ
இன்னும் அவரை நாம் நுழைத்தோம்
fī raḥmatinā
فِى رَحْمَتِنَآۖ
நமது அருளில்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
mina l-ṣāliḥīna
مِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில் உள்ளவர்
நாம் அவரை நம்முடைய அருளில் புகுத்தினோம். நிச்சயமாக அவர் நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௭௫)
Tafseer
௭௬

وَنُوْحًا اِذْ نَادٰى مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ ۚ ٧٦

wanūḥan
وَنُوحًا
இன்னும் நூஹையும் நினைவு கூர்வீராக
idh nādā
إِذْ نَادَىٰ
அவர் அழைத்தபோது
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
fa-is'tajabnā
فَٱسْتَجَبْنَا
பதிலளித்தோம்
lahu
لَهُۥ
அவருக்கு
fanajjaynāhu
فَنَجَّيْنَٰهُ
பாதுகாத்தோம்
wa-ahlahu
وَأَهْلَهُۥ
இன்னும் அவருடைய குடும்பத்தாரை
mina l-karbi
مِنَ ٱلْكَرْبِ
தண்டனையிலிருந்து
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
பெரிய
நூஹையும் (நபியாக அனுப்பி வைத்தோம்.) அவர் இதற்கு முன்னர் செய்துகொண்டிருந்த பிரார்த்தனையை அவருக்காக நாம் அங்கீகரித்துக் கொண்டு, அவரையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் கஷ்டத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௭௬)
Tafseer
௭௭

وَنَصَرْنٰهُ مِنَ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَاۗ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِيْنَ ٧٧

wanaṣarnāhu
وَنَصَرْنَٰهُ
இன்னும் அவருக்கு நாம் உதவி செய்தோம்
mina l-qawmi
مِنَ ٱلْقَوْمِ
மக்களிடமிருந்து
alladhīna kadhabū
ٱلَّذِينَ كَذَّبُوا۟
எவர்கள்/ பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَآۚ
நமது அத்தாட்சிகளை
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தனர்
qawma
قَوْمَ
மக்களாக
sawin
سَوْءٍ
கெட்ட
fa-aghraqnāhum
فَأَغْرَقْنَٰهُمْ
ஆகவே நாம் மூழ்கடித்தோம்/அவர்களை
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிய மக்களுக்கு விரோதமாக அவருக்கு நாம் உதவி செய்தோம். நிச்சயமாக அவர்களும் மிகக் கெட்ட மக்களாகவே இருந்தனர். ஆதலால், அவர்கள் அனைவரையும் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௭௭)
Tafseer
௭௮

وَدَاوٗدَ وَسُلَيْمٰنَ اِذْ يَحْكُمٰنِ فِى الْحَرْثِ اِذْ نَفَشَتْ فِيْهِ غَنَمُ الْقَوْمِۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِيْنَ ۖ ٧٨

wadāwūda
وَدَاوُۥدَ
இன்னும் தாவூது
wasulaymāna
وَسُلَيْمَٰنَ
இன்னும் ஸுலைமானை
idh yaḥkumāni
إِذْ يَحْكُمَانِ
அவ்விருவரும் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக
fī l-ḥarthi
فِى ٱلْحَرْثِ
விவசாயத்தின் விளைச்சலில்
idh nafashat
إِذْ نَفَشَتْ
நுழைந்த போது
fīhi ghanamu
فِيهِ غَنَمُ
அதில்/ஆடுகள்
l-qawmi
ٱلْقَوْمِ
மக்களுடைய
wakunnā
وَكُنَّا
இருந்தோம்
liḥuk'mihim
لِحُكْمِهِمْ
அவர்களின் தீர்ப்பை
shāhidīna
شَٰهِدِينَ
நாம் அறிந்தவர்களாக
தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பி வைத்தோம்.) ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்துவிட்டது பற்றி (தாவூத், சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்புக் கூற இருந்த சமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் (கவனித்துப்) பார்த்துக் கொண்டிருந்தோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௭௮)
Tafseer
௭௯

فَفَهَّمْنٰهَا سُلَيْمٰنَۚ وَكُلًّا اٰتَيْنَا حُكْمًا وَّعِلْمًاۖ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَۗ وَكُنَّا فٰعِلِيْنَ ٧٩

fafahhamnāhā
فَفَهَّمْنَٰهَا
அதை புரிய வைத்தோம்
sulaymāna
سُلَيْمَٰنَۚ
சுலைமானுக்கு
wakullan
وَكُلًّا
எல்லோருக்கும்
ātaynā
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
ḥuk'man
حُكْمًا
ஞானத்தை(யும்)
waʿil'man
وَعِلْمًاۚ
இன்னும் கல்வியை
wasakharnā
وَسَخَّرْنَا
இன்னும் வசப்படுத்தினோம்
maʿa dāwūda
مَعَ دَاوُۥدَ
தாவூதுடன்
l-jibāla
ٱلْجِبَالَ
மலைகளை
yusabbiḥ'na
يُسَبِّحْنَ
துதிக்கின்றவையாக
wal-ṭayra
وَٱلطَّيْرَۚ
இன்னும் பறவைகளை
wakunnā
وَكُنَّا
இன்னும் நாம் இருந்தோம்
fāʿilīna
فَٰعِلِينَ
முடிவு செய்தவர்களாக
தீர்ப்புக் கூறுவதில் இவர்கள் இருவருக்குமே கல்வியையும் ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும், ஸுலைமானுக்கு நியாயத்தை விளக்கிக் காண்பித்தோம். மலைகளையும் பறவைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் அல்லாஹ்வை தஸ்பீஹ் (துதி) செய்தன. நாமேதான் இவைகளை எல்லாம் செய்தோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௭௯)
Tafseer
௮௦

وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْۢ بَأْسِكُمْۚ فَهَلْ اَنْتُمْ شَاكِرُوْنَ ٨٠

waʿallamnāhu
وَعَلَّمْنَٰهُ
நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம்
ṣanʿata
صَنْعَةَ
செய்வதை
labūsin
لَبُوسٍ
ஆயுதங்களை
lakum
لَّكُمْ
உங்களுக்காக
lituḥ'ṣinakum
لِتُحْصِنَكُم
உங்களை பாதுகாப்பதற்காக
min basikum
مِّنۢ بَأْسِكُمْۖ
உங்கள் போரில்
fahal antum
فَهَلْ أَنتُمْ
ஆகவே ?/நீங்கள்
shākirūna
شَٰكِرُونَ
நன்றி செலுத்துவீர்கள்
(போரில் ஈட்டி, கத்தி ஆகியவைகளின்) காயத்தில் இருந்து உங்களை பாதுகாக்கக் கூடிய கவசங்கள் செய்வதை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களா? ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௮௦)
Tafseer