Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்பியா - Page: 7

Al-Anbya

(al-ʾAnbiyāʾ)

௬௧

قَالُوْا فَأْتُوْا بِهٖ عَلٰٓى اَعْيُنِ النَّاسِ لَعَلَّهُمْ يَشْهَدُوْنَ ٦١

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
fatū
فَأْتُوا۟
கொண்டு வாருங்கள்
bihi
بِهِۦ
அவரை
ʿalā aʿyuni
عَلَىٰٓ أَعْيُنِ
கண்களுக்கு முன்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களின்
laʿallahum yashhadūna
لَعَلَّهُمْ يَشْهَدُونَ
அவர்கள் பார்ப்பதற்காக
அதற்கவர்கள் "(அவ்வாறாயின்) அவரை மக்கள் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள். (அவர் கூறும் பதிலுக்கு) அனைவரும் சாட்சியாக இருக்கட்டும்" என்று கூறினார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௬௧)
Tafseer
௬௨

قَالُوْٓا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا يٰٓاِبْرٰهِيْمُ ۗ ٦٢

qālū
قَالُوٓا۟
கூறினர்
a-anta
ءَأَنتَ
நீர்தான்
faʿalta
فَعَلْتَ
செய்தீரா
hādhā
هَٰذَا
இதை
biālihatinā
بِـَٔالِهَتِنَا
எங்கள் கடவுள்களுடன்
yāib'rāhīmu
يَٰٓإِبْرَٰهِيمُ
இப்றாஹீமே
(அவ்வாறு இப்ராஹீமை கொண்டு வந்து அவரை நோக்கி) "இப்ராஹீமே! எங்களுடைய தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீங்கள்தானோ?" என்று கேட்டனர். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௬௨)
Tafseer
௬௩

قَالَ بَلْ فَعَلَهٗ كَبِيْرُهُمْ هٰذَا فَسْـَٔلُوْهُمْ اِنْ كَانُوْا يَنْطِقُوْنَ ٦٣

qāla
قَالَ
அவர்கள் கூறினர்
bal
بَلْ
மாறாக
faʿalahu
فَعَلَهُۥ
இதை செய்தது
kabīruhum
كَبِيرُهُمْ
பெரிய சிலைதான் அவற்றில்
hādhā
هَٰذَا
அவை
fasalūhum
فَسْـَٔلُوهُمْ
ஆகவே கேளுங்கள் அவற்றிடம்
in kānū
إِن كَانُوا۟
இருந்தால்
yanṭiqūna
يَنطِقُونَ
பேசுபவர்களாக
அதற்கவர் "இல்லை. இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே! இதுதான் செய்திருக்கலாம்! (உடைப்பட்ட) இவை பேசக் கூடியவையாக இருந்தால் அவைகளையே கேளுங்கள்" என்றார். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௬௩)
Tafseer
௬௪

فَرَجَعُوْٓا اِلٰٓى اَنْفُسِهِمْ فَقَالُوْٓا اِنَّكُمْ اَنْتُمُ الظّٰلِمُوْنَ ۙ ٦٤

farajaʿū
فَرَجَعُوٓا۟
அவர்கள் திரும்பினர்
ilā
إِلَىٰٓ
பக்கமே
anfusihim
أَنفُسِهِمْ
தங்கள்
faqālū
فَقَالُوٓا۟
கூறினர்
innakum antumu
إِنَّكُمْ أَنتُمُ
நிச்சயமாக நீங்கள்தான்
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
அவர்கள் (இதற்குப் பதில் கூறமுடியாமல் நாணமுற்றுத்) தங்களுக்குள் (ஒருவர் மற்றவரை நோக்கி) "நிச்சயமாக நீங்கள்தான் (இவற்றைத் தெய்வமெனக் கூறி) அநியாயம் செய்து விட்டீர்கள்" என்று கூறிக்கொண்டார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௬௪)
Tafseer
௬௫

ثُمَّ نُكِسُوْا عَلٰى رُءُوْسِهِمْۚ لَقَدْ عَلِمْتَ مَا هٰٓؤُلَاۤءِ يَنْطِقُوْنَ ٦٥

thumma
ثُمَّ
பிறகு
nukisū
نُكِسُوا۟
மாறினர்
ʿalā ruūsihim
عَلَىٰ رُءُوسِهِمْ
அவர்கள் தலைகீழாக
laqad
لَقَدْ
திட்டவட்டமாக
ʿalim'ta
عَلِمْتَ
நீர் அறிவீர்
mā hāulāi yanṭiqūna
مَا هَٰٓؤُلَآءِ يَنطِقُونَ
இவை பேசாது என்பதை
பின்னர், அவர்கள் (வெட்கத்தால் சிறிது நேரம்) தலை குனிந்திருந்து (இப்ராஹீமை நோக்கி) "இவை பேசாது என்பதை நிச்சயமாக நீங்கள் அறிவீரே! (அவ்வாறிருக்க இவற்றைக் கேட்கும்படி எங்களிடம் எவ்வாறு கூறுகிறீர்?)" என்று கூறினார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௬௫)
Tafseer
௬௬

قَالَ اَفَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكُمْ شَيْـًٔا وَّلَا يَضُرُّكُمْ ۗ ٦٦

qāla
قَالَ
அவர் கூறினார்
afataʿbudūna
أَفَتَعْبُدُونَ
வணங்குகிறீர்களா?
min dūni
مِن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வை
mā lā yanfaʿukum shayan
مَا لَا يَنفَعُكُمْ شَيْـًٔا
எவற்றை/பலனளிக்காது/உங்களுக்கு/அறவே
walā yaḍurrukum
وَلَا يَضُرُّكُمْ
இன்னும் உங்களுக்கு தீங்கிழைக்காது
அதற்கவர் "உங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாத (இ)வைகளையா நீங்கள் வணங்குகிறீர்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௬௬)
Tafseer
௬௭

اُفٍّ لَّكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۗاَفَلَا تَعْقِلُوْنَ ٦٧

uffin
أُفٍّ
சீச்சி
lakum
لَّكُمْ
உங்களுக்கு
walimā taʿbudūna
وَلِمَا تَعْبُدُونَ
இன்னும் நீங்கள் வணங்குபவர்களுக்கு
min dūni
مِن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வை
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
நிச்சயமாக சிந்தித்து புரியமாட்டீர்களா?
சீச்சி! (கேவலம் நீங்களென்ன) உங்களுக்கும் கேடுதான்; நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைக(ளென்ன இவை)களுக்கும் கேடுதான். என்னே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறினார். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௬௭)
Tafseer
௬௮

قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْٓا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ ٦٨

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
ḥarriqūhu
حَرِّقُوهُ
அவரை எரித்து விடுங்கள்
wa-unṣurū
وَٱنصُرُوٓا۟
இன்னும் உதவி செய்யுங்கள்
ālihatakum
ءَالِهَتَكُمْ
உங்கள் கடவுள்களுக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
fāʿilīna
فَٰعِلِينَ
(உதவி)செய்பவர்களாக
அதற்கவர்கள் (தங்கள் மனிதர்களை நோக்கி,) "நீங்கள் ஏதும் செய்ய வேண்டுமென்றிருந்தால் இவரை நெருப்பில் எரித்து உங்கள் தெய்வங்களுக்காக இவரிடம் பழி வாங்குங்கள்" என்று கூறினார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௬௮)
Tafseer
௬௯

قُلْنَا يَا نَارُ كُوْنِيْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰٓى اِبْرٰهِيْمَ ۙ ٦٩

qul'nā
قُلْنَا
நாம் கூறினோம்
yānāru
يَٰنَارُ
நெருப்பே
kūnī
كُونِى
ஆகிவிடு
bardan
بَرْدًا
குளிர்ச்சியாகவும்
wasalāman
وَسَلَٰمًا
பாதுகாப்பாகவும்
ʿalā ib'rāhīma
عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுக்கு
(அவ்வாறே அவர்கள் இப்ராஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) "நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!" என்று நாம் கூறினோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௬௯)
Tafseer
௭௦

وَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِيْنَ ۚ ٧٠

wa-arādū bihi
وَأَرَادُوا۟ بِهِۦ
அவருக்கு நாடினர்
kaydan
كَيْدًا
ஒரு சூழ்ச்சியை
fajaʿalnāhumu
فَجَعَلْنَٰهُمُ
அவர்களையே ஆக்கிவிட்டோம்
l-akhsarīna
ٱلْأَخْسَرِينَ
நஷ்டவாளிகளாக
அவர்கள் இப்ராஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௭௦)
Tafseer