Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்பியா - Page: 6

Al-Anbya

(al-ʾAnbiyāʾ)

௫௧

۞ وَلَقَدْ اٰتَيْنَآ اِبْرٰهِيْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَكُنَّا بِهٖ عٰلِمِيْنَ ٥١

walaqad ātaynā
وَلَقَدْ ءَاتَيْنَآ
நாம் கொடுத்தோம்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுக்கு
rush'dahu
رُشْدَهُۥ
அவருடைய நேர்வழியை
min qablu
مِن قَبْلُ
முன்னர்
wakunnā
وَكُنَّا
நாம் இருந்தோம்
bihi
بِهِۦ
அவரை
ʿālimīna
عَٰلِمِينَ
நன்கறிந்தவர்களாக
நிச்சயமாக நாம் இப்ராஹீமுக்கு இதற்கு முன்னரே நல்லறிவைக் கொடுத்திருந்தோம். (அதற்குரிய) அவருடைய தன்மையை நன்கறிந்தோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௫௧)
Tafseer
௫௨

اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِيْلُ الَّتِيْٓ اَنْتُمْ لَهَا عَاكِفُوْنَ ٥٢

idh
إِذْ
சமயத்தை
qāla
قَالَ
கூறினார்
li-abīhi
لِأَبِيهِ
தனது தந்தைக்கு
waqawmihi
وَقَوْمِهِۦ
இன்னும் தனது சமுதாயத்திற்கு
mā hādhihi
مَا هَٰذِهِ
என்ன/இந்த
l-tamāthīlu
ٱلتَّمَاثِيلُ
உருவங்கள்
allatī
ٱلَّتِىٓ
எது
antum
أَنتُمْ
நீங்கள்
lahā
لَهَا
இதன்மீது
ʿākifūna
عَٰكِفُونَ
நிலையாக இருக்கின்ற
அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி "நீங்கள் (மிக்க உற்சாகத்தோடு) வணங்கிவரும் இச்சிலைகள் என்ன? (எதற்காக நீங்கள் இவைகளைப் வணங்குகிறீர்கள்)" என்று கேட்டதற்கு, ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௫௨)
Tafseer
௫௩

قَالُوْا وَجَدْنَآ اٰبَاۤءَنَا لَهَا عٰبِدِيْنَ ٥٣

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
wajadnā
وَجَدْنَآ
கண்டோம்
ābāanā
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை
lahā
لَهَا
அவற்றை
ʿābidīna
عَٰبِدِينَ
வணங்குபவர்களாக
அவர்கள் "எங்கள் மூதாதைகள் இவைகளை வணங்கிக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம். (ஆதலால் நாங்களும் அவைகளைப் வணங்குகிறோம்)" என்று கூறினார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௫௩)
Tafseer
௫௪

قَالَ لَقَدْ كُنْتُمْ اَنْتُمْ وَاٰبَاۤؤُكُمْ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٥٤

qāla
قَالَ
கூறினார்
laqad
لَقَدْ
திட்டமாக
kuntum
كُنتُمْ
இருக்கின்றீர்கள்
antum
أَنتُمْ
நீங்களும்
waābāukum
وَءَابَآؤُكُمْ
மூதாதைகளும் உங்கள்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
அதற்கவர் "நீங்களும் உங்கள் மூதாதைகளும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றீர்கள்" என்று கூறினார். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௫௪)
Tafseer
௫௫

قَالُوْٓا اَجِئْتَنَا بِالْحَقِّ اَمْ اَنْتَ مِنَ اللّٰعِبِيْنَ ٥٥

qālū
قَالُوٓا۟
கூறினர்
aji'tanā
أَجِئْتَنَا
நீர் எங்களிடம் வந்தீரா?
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
am
أَمْ
அல்லது
anta
أَنتَ
நீரும் ஒருவரா
mina l-lāʿibīna
مِنَ ٱللَّٰعِبِينَ
விளையாட்டாக பேசுபவர்களில்
அதற்கவர்கள் "நீங்கள் ஏதும் உண்மையான செய்தியை நம்மிடம் கொண்டு வந்திருக்கின்றீரா? அல்லது (இவ்வாறு கூறி நம்முடன்) நீங்கள் விளையாடுகிறீரா?" என்று கேட்டனர். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௫௫)
Tafseer
௫௬

قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِيْ فَطَرَهُنَّۖ وَاَنَا۠ عَلٰى ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ ٥٦

qāla
قَالَ
அவர் கூறினார்
bal
بَل
மாறாக
rabbukum
رَّبُّكُمْ
உங்களுக்கும் இறைவன்
rabbu
رَبُّ
இறைவன்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியின்
alladhī
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
faṭarahunna
فَطَرَهُنَّ
அவற்றைப்படைத்தான்
wa-anā
وَأَنَا۠
நானும் ஒருவன்
ʿalā dhālikum
عَلَىٰ ذَٰلِكُم
இதற்கு
mina l-shāhidīna
مِّنَ ٱلشَّٰهِدِينَ
சாட்சி கூறுபவர்களில்
அதற்கவர் "(நான் விளையாடுபவன்) இல்லை. உங்கள் (உண்மையான) இறைவன் வானங்களையும், பூமியையும் படைத்து வளர்ப்பவன்தான். (இந்த சிலைகளன்று.) இதற்கு நானே உங்களுக்குச் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௫௬)
Tafseer
௫௭

وَتَاللّٰهِ لَاَكِيْدَنَّ اَصْنَامَكُمْ بَعْدَ اَنْ تُوَلُّوْا مُدْبِرِيْنَ ٥٧

watal-lahi
وَتَٱللَّهِ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
la-akīdanna
لَأَكِيدَنَّ
நிச்சயமாக நான் சதி செய்வேன்
aṣnāmakum
أَصْنَٰمَكُم
உங்கள் சிலைகளுக்கு
baʿda
بَعْدَ
பின்னர்
an tuwallū mud'birīna
أَن تُوَلُّوا۟ مُدْبِرِينَ
நீங்கள் திரும்பிச் சென்ற
(அன்றி, இங்கிருந்து) "நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளைப் பங்கப்படுத்தி விடுவேன்" (என்றும் கூறினார்.) ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௫௭)
Tafseer
௫௮

فَجَعَلَهُمْ جُذَاذًا اِلَّا كَبِيْرًا لَّهُمْ لَعَلَّهُمْ اِلَيْهِ يَرْجِعُوْنَ ٥٨

fajaʿalahum
فَجَعَلَهُمْ
அவற்றை ஆக்கிவிட்டார்
judhādhan
جُذَٰذًا
சிறுசிறு துண்டுகளாக
illā
إِلَّا
தவிர
kabīran
كَبِيرًا
பெரிய சிலை
lahum
لَّهُمْ
அவர்களுக்குரிய
laʿallahum
لَعَلَّهُمْ
அவர்கள்
ilayhi
إِلَيْهِ
அதனளவில்
yarjiʿūna
يَرْجِعُونَ
திரும்ப வருவதற்காக
(அவ்வாறே அவர்கள் சென்ற பின்னர்) அவற்றில் பெரிய சிலையைத் தவிர (மற்ற) அனைத்தையும் துண்டு துண்டாக உடைத்துத் தள்ளிவிட்டார். அவர்கள் (திரும்ப வந்த பின்னர் இதைப் பற்றி விசாரிப்பதற்காகப்) பெரிய சிலையிடம் செல்லக்கூடும் (என்று அதனை மட்டும் உடைக்கவில்லை). ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௫௮)
Tafseer
௫௯

قَالُوْا مَنْ فَعَلَ هٰذَا بِاٰلِهَتِنَآ اِنَّهٗ لَمِنَ الظّٰلِمِيْنَ ٥٩

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
man faʿala
مَن فَعَلَ
யார்?/செய்தார்
hādhā
هَٰذَا
இதை
biālihatinā
بِـَٔالِهَتِنَآ
எனவே கடவுள்களுக்கு
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
lamina l-ẓālimīna
لَمِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில் ஒருவர் ஆவார்
அவர்கள் (திரும்ப வந்து இக்காட்சியைக் கண்டதும்) "எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவன் எவன்? நிச்சயமாக அவன் மகா அநியாயக்காரன்" என்று கூறினார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௫௯)
Tafseer
௬௦

قَالُوْا سَمِعْنَا فَتًى يَّذْكُرُهُمْ يُقَالُ لَهٗٓ اِبْرٰهِيْمُ ۗ ٦٠

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
samiʿ'nā
سَمِعْنَا
நாங்கள் செவியுற்றோம்
fatan
فَتًى
ஒரு வாலிபரை
yadhkuruhum
يَذْكُرُهُمْ
விமர்சிக்கின்றார் அவற்றை
yuqālu
يُقَالُ
சொல்லப்படும்
lahu
لَهُۥٓ
அவருக்கு
ib'rāhīmu
إِبْرَٰهِيمُ
இப்றாஹீம்
அதற்கு (அவர்களில் சிலர்) "ஒரு வாலிபர் இவைகளைப் பற்றி(க் குறை) கூறிக் கொண்டிருப்பதை நாங்கள் செவியுற்று இருக்கின்றோம். அவருக்கு "இப்ராஹீம்" என்று பெயர் கூறப்படுகின்றது" என்று கூறினார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௬௦)
Tafseer