Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்பியா - Page: 5

Al-Anbya

(al-ʾAnbiyāʾ)

௪௧

وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِيْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ࣖ ٤١

walaqadi us'tuh'zi-a
وَلَقَدِ ٱسْتُهْزِئَ
பரிகசிக்கப்பட்டுள்ளது
birusulin
بِرُسُلٍ
பல தூதர்களை
min qablika
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
faḥāqa
فَحَاقَ
வந்து இறங்கியது
bi-alladhīna sakhirū
بِٱلَّذِينَ سَخِرُوا۟
ஏளனம் செய்தவர்களை
min'hum
مِنْهُم
அவர்களில்
مَّا
எது
kānū
كَانُوا۟
இருந்தார்களோ
bihi
بِهِۦ
அதை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
பரிகசித்தார்கள்
உங்களுக்கு முன்னர் வந்த நம்முடைய தூதர்களும் (இவ்வாறே எதிரிகளால்) பரிகாசம் செய்யப்பட்டனர். ஆகவே, பரிகாசம் செய்து கொண்டிருந்த அந்த வேதனை அவர்களை வந்து சூழ்ந்து கொண்டது. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௪௧)
Tafseer
௪௨

قُلْ مَنْ يَّكْلَؤُكُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمٰنِۗ بَلْ هُمْ عَنْ ذِكْرِ رَبِّهِمْ مُّعْرِضُوْنَ ٤٢

qul
قُلْ
கூறுவீராக
man
مَن
யார்
yakla-ukum
يَكْلَؤُكُم
பாதுகாப்பவர் உங்களை
bi-al-layli
بِٱلَّيْلِ
இரவிலும்
wal-nahāri
وَٱلنَّهَارِ
பகலிலும்
mina l-raḥmāni
مِنَ ٱلرَّحْمَٰنِۗ
ரஹ்மானிடமிருந்து
bal
بَلْ
மாறாக
hum
هُمْ
அவர்கள்
ʿan dhik'ri
عَن ذِكْرِ
அறிவுரையை
rabbihim
رَبِّهِم
தங்கள் இறைவனின்
muʿ'riḍūna
مُّعْرِضُونَ
புறக்கணிக்கிறார்கள்
(நபியே! இவர்களை நோக்கி) "இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையிலிந்து உங்களை பாதுகாப்பவர் யார்?" என்று நீங்கள் கேளுங்கள். எனினும் இவர்களோ தங்கள் இறைவனை நினைப்பதையே முற்றிலும் புறக்கணித்து விட்டனர். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௪௨)
Tafseer
௪௩

اَمْ لَهُمْ اٰلِهَةٌ تَمْنَعُهُمْ مِّنْ دُوْنِنَاۗ لَا يَسْتَطِيْعُوْنَ نَصْرَ اَنْفُسِهِمْ وَلَا هُمْ مِّنَّا يُصْحَبُوْنَ ٤٣

am lahum
أَمْ لَهُمْ
அவர்களுக்கு உண்டா
ālihatun
ءَالِهَةٌ
கடவுள்கள்
tamnaʿuhum
تَمْنَعُهُم
பாதுகாக்கின்ற/ அவர்களை
min dūninā
مِّن دُونِنَاۚ
நம்மை அன்றி
lā yastaṭīʿūna
لَا يَسْتَطِيعُونَ
இயலமாட்டார்கள்
naṣra
نَصْرَ
உதவுவதற்கே
anfusihim
أَنفُسِهِمْ
தங்களுக்கு
walā
وَلَا
இன்னும்
hum
هُم
அவர்கள்
minnā
مِّنَّا
நம்மிடமிருந்து
yuṣ'ḥabūna
يُصْحَبُونَ
பாதுகாக்கப்பட மாட்டார்கள்
இவர்களை (நம்முடைய வேதனையிலிருந்து) தடுக்கக்கூடிய தெய்வங்கள் நம்மையன்றி இருக்கின்றனவா? (இவர்கள் தெய்வமெனக் கூறும்) அவை (இவர்களுக்கு உதவி செய்வதென்ன!) தமக்குத்தாமே உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவை. ஆகவே, நமக்கெதிராக அவை அவர்களுக்குத் துணைபுரியாது. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௪௩)
Tafseer
௪௪

بَلْ مَتَّعْنَا هٰٓؤُلَاۤءِ وَاٰبَاۤءَهُمْ حَتّٰى طَالَ عَلَيْهِمُ الْعُمُرُۗ اَفَلَا يَرَوْنَ اَنَّا نَأْتِى الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَاۗ اَفَهُمُ الْغٰلِبُوْنَ ٤٤

bal
بَلْ
மாறாக
mattaʿnā
مَتَّعْنَا
சுகமளித்தோம்
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்களுக்கு
waābāahum
وَءَابَآءَهُمْ
இன்னும் மூதாதைகளுக்கு இவர்களின்
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
ṭāla
طَالَ
நீண்டது
ʿalayhimu
عَلَيْهِمُ
இவர்களுக்கு
l-ʿumuru
ٱلْعُمُرُۗ
வாழ்க்கை
afalā yarawna
أَفَلَا يَرَوْنَ
அவர்கள் பார்க்கவில்லையா
annā
أَنَّا
நிச்சயமாக நாம்
natī
نَأْتِى
வருகிறோம்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
nanquṣuhā
نَنقُصُهَا
அதை அழிக்கிறோம்
min aṭrāfihā
مِنْ أَطْرَافِهَآۚ
அதன் சுற்றுப்புறங்களிலிருந்து
afahumu
أَفَهُمُ
ஆகவே, இவர்கள்
l-ghālibūna
ٱلْغَٰلِبُونَ
மிகைத்து விடுவார்களா
இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் (நீண்ட காலம் வரை) சுகமனுபவிக்கச் செய்தோம். அதனால் அவர்களின் ஆயுளும் அதிகரித்தது. (அவர்கள் கர்வம்கொண்டு விட்டார்களா?) நிச்சயமாக நாம் இவர்களைச் சூழவும் உள்ள பூமியை(ப் படிப்படியாக)க் குறைத்து (இவர்களை நெருக்கி)க் கொண்டே வருவதை இவர்கள் காணவில்லையா? இவர்களா நம்மை வெல்வார்கள்? ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௪௪)
Tafseer
௪௫

قُلْ اِنَّمَآ اُنْذِرُكُمْ بِالْوَحْيِۖ وَلَا يَسْمَعُ الصُّمُّ الدُّعَاۤءَ اِذَا مَا يُنْذَرُوْنَ ٤٥

qul
قُلْ
கூறுவீராக
innamā
إِنَّمَآ
எச்சரிப்பதெல்லாம்
undhirukum
أُنذِرُكُم
எச்சரிப்பதெல்லாம் உங்களை
bil-waḥyi
بِٱلْوَحْىِۚ
வஹீ ன் மூலமாகத்தான்
walā yasmaʿu
وَلَا يَسْمَعُ
செவிசாய்க்க மாட்டார்கள்
l-ṣumu
ٱلصُّمُّ
செவிடர்கள்
l-duʿāa
ٱلدُّعَآءَ
அழைப்புக்கு
idhā
إِذَا
போது
mā yundharūna
مَا يُنذَرُونَ
எச்சரிக்கப்படும்
(நபியே! அவர்களை நோக்கி "வேதனையைக் கொண்டு) நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீயின் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டவைகளையே! (நான் சுயமாக ஒன்றும் கூறவில்லை)" என்று நீங்கள் கூறுங்கள். (எனினும், இவர்கள் செவிடர்களைப்போல் இருக்கின்றனர். ஆகவே) இந்த செவிடர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தால் அதனை அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௪௫)
Tafseer
௪௬

وَلَىِٕنْ مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَيَقُوْلُنَّ يٰوَيْلَنَآ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ ٤٦

wala-in
وَلَئِن
massathum
مَّسَّتْهُمْ
அவர்களை அடைந்தால்
nafḥatun
نَفْحَةٌ
ஒரு பகுதி
min ʿadhābi
مِّنْ عَذَابِ
தண்டனையிலிருந்து
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
layaqūlunna
لَيَقُولُنَّ
நிச்சயமாக கூறுவார்கள்
yāwaylanā
يَٰوَيْلَنَآ
எங்கள் நாசமே
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
kunnā
كُنَّا
இருந்தோம்
ẓālimīna
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக
உங்கள் இறைவனுடைய வேதனையின் வாடை இவர்கள் மீது பட்டாலே போதும் "நாங்கள் கெட்டோம்; நிச்சயமாக நாங்களே எங்களுக்குத் தீங்கு இழைத்துக் கொண்டோம்!" என்று கூச்சல் இடுவார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௪௬)
Tafseer
௪௭

وَنَضَعُ الْمَوَازِيْنَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْـًٔاۗ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَيْنَا بِهَاۗ وَكَفٰى بِنَا حَاسِبِيْنَ ٤٧

wanaḍaʿu
وَنَضَعُ
நாம் வைப்போம்
l-mawāzīna
ٱلْمَوَٰزِينَ
தராசுகளை
l-qis'ṭa
ٱلْقِسْطَ
நீதமான
liyawmi l-qiyāmati
لِيَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
falā tuẓ'lamu
فَلَا تُظْلَمُ
அநீதி இழைக்கப்படாது
nafsun
نَفْسٌ
ஓர் ஆன்மாவுக்கு
shayan
شَيْـًٔاۖ
அறவே
wa-in kāna
وَإِن كَانَ
இருந்தாலும்
mith'qāla
مِثْقَالَ
அளவு
ḥabbatin
حَبَّةٍ
விதை
min khardalin
مِّنْ خَرْدَلٍ
கடுகின்
ataynā bihā
أَتَيْنَا بِهَاۗ
அதை நாம் கொண்டு வருவோம்
wakafā binā
وَكَفَىٰ بِنَا
நாமே போதுமானவர்கள்
ḥāsibīna
حَٰسِبِينَ
விசாரிப்பவர்களாக
மறுமை நாளில் சரியான தராசையே நாம் நாட்டுவோம். யாதொரு ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் (நிறுக்க) அதனையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.) ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௪௭)
Tafseer
௪௮

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسٰى وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِيَاۤءً وَّذِكْرًا لِّلْمُتَّقِيْنَ ۙ ٤٨

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
mūsā
مُوسَىٰ
மூஸா
wahārūna
وَهَٰرُونَ
இன்னும் ஹாரூனுக்கு
l-fur'qāna
ٱلْفُرْقَانَ
பிரித்தறிவிக்கக்கூடிய
waḍiyāan
وَضِيَآءً
வெளிச்சத்தை
wadhik'ran
وَذِكْرًا
ஓர் அறிவுரையை
lil'muttaqīna
لِّلْمُتَّقِينَ
இறையச்ச முள்ளவர்களுக்குரிய
மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக் கூடிய வேதத்தையே நாம் கொடுத்திருந்தோம். அது பிரகாசமாகவும், இறை அச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௪௮)
Tafseer
௪௯

الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ ٤٩

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yakhshawna
يَخْشَوْنَ
பயப்படுவார்கள்
rabbahum
رَبَّهُم
தங்கள் இறைவனை
bil-ghaybi
بِٱلْغَيْبِ
மறைவில்
wahum
وَهُم
இன்னும் அவர்கள்
mina l-sāʿati
مِّنَ ٱلسَّاعَةِ
மறுமையைப் பற்றி
mush'fiqūna
مُشْفِقُونَ
அஞ்சுவார்கள்
(இறை அச்சமுடையவர்கள்) தங்கள் இறைவனைத் தங்கள் கண்ணால் பார்க்காவிடினும் அவனுக்குப் பயப்படுவதுடன், மறுமையைப் பற்றியும் அவர்கள் (எந்நேரமும்) பயந்து நடுங்கிக் கொண்டிருப்பார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௪௯)
Tafseer
௫௦

وَهٰذَا ذِكْرٌ مُّبٰرَكٌ اَنْزَلْنٰهُۗ اَفَاَنْتُمْ لَهٗ مُنْكِرُوْنَ ࣖ ٥٠

wahādhā
وَهَٰذَا
இது
dhik'run
ذِكْرٌ
அறிவுரையாகும்
mubārakun
مُّبَارَكٌ
அருள்மிகுந்த
anzalnāhu
أَنزَلْنَٰهُۚ
இதை இறக்கினோம்
afa-antum
أَفَأَنتُمْ
?/நீங்கள்
lahu
لَهُۥ
இதை
munkirūna
مُنكِرُونَ
மறுக்கின்றீர்கள்
இந்தக் குர்ஆன் மிக்க பாக்கியமுடைய நல்லுபதேசமாகும். இதனை நாமே இறக்கி வைத்தோம். இதனை நீங்கள் நிராகரித்து விடுவீர்களா? ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௫௦)
Tafseer