Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்பியா - Page: 4

Al-Anbya

(al-ʾAnbiyāʾ)

௩௧

وَجَعَلْنَا فِى الْاَرْضِ رَوَاسِيَ اَنْ تَمِيْدَ بِهِمْۖ وَجَعَلْنَا فِيْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُوْنَ ٣١

wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் நாம் ஏற்படுத்தினோம்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
rawāsiya
رَوَٰسِىَ
மலைகளை
an tamīda
أَن تَمِيدَ
அது சாய்ந்து விடாமல் இருப்பதற்காக
bihim
بِهِمْ
அவர்களுடன்
wajaʿalnā
وَجَعَلْنَا
ஏற்படுத்தினோம்
fīhā fijājan
فِيهَا فِجَاجًا
அதில்/விசாலமான
subulan
سُبُلًا
பாதைகளை
laʿallahum yahtadūna
لَّعَلَّهُمْ يَهْتَدُونَ
அவர்கள் வழிபெறுவதற்காக
பூமி மனிதர்களுடன் சாய்ந்துவிடாதிருக்கும் பொருட்டு அதில் மலைகளை நாம்தான் நாட்டினோம். அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லும் பொருட்டு அதில் விசாலமான வழிகளையும் நாம் ஏற்படுத்தினோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௩௧)
Tafseer
௩௨

وَجَعَلْنَا السَّمَاۤءَ سَقْفًا مَّحْفُوْظًاۚ وَهُمْ عَنْ اٰيٰتِهَا مُعْرِضُوْنَ ٣٢

wajaʿalnā
وَجَعَلْنَا
நாம் ஆக்கினோம்
l-samāa
ٱلسَّمَآءَ
வானத்தை
saqfan
سَقْفًا
ஒரு முகடாக
maḥfūẓan
مَّحْفُوظًاۖ
பாதுகாக்கப்பட்ட
wahum
وَهُمْ
அவர்கள்
ʿan āyātihā
عَنْ ءَايَٰتِهَا
அதன் அத்தாட்சிகளை
muʿ'riḍūna
مُعْرِضُونَ
புறக்கணிக்கின்றார்கள்
வானத்தைப் பத்திரமான ஒரு முகட்டைப் போலும் நாம் அமைத்தோம். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவைகளிலுள்ள அத்தாட்சிகளையும் அவர்கள் புறக்கணிக்கின்றனர். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௩௨)
Tafseer
௩௩

وَهُوَ الَّذِيْ خَلَقَ الَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَۗ كُلٌّ فِيْ فَلَكٍ يَّسْبَحُوْنَ ٣٣

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
khalaqa
خَلَقَ
படைத்தான்
al-layla wal-nahāra
ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
இரவையும் பகலையும்
wal-shamsa
وَٱلشَّمْسَ
சூரியனையும்
wal-qamara
وَٱلْقَمَرَۖ
சந்திரனையும்
kullun
كُلٌّ
ஒவ்வொன்றும்
fī falakin
فِى فَلَكٍ
சுற்று வட்டத்தில்
yasbaḥūna
يَسْبَحُونَ
நீந்துகின்றன
அவனே இரவையும் பகலையும் (படைத்தான்.) சூரியனையும் சந்திரனையும் படைத்தான். இவை வானத்தில் நீந்திச் செல்(வதைப் போல் செல்)கின்றன. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௩௩)
Tafseer
௩௪

وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُلْدَۗ اَفَا۟ىِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰلِدُوْنَ ٣٤

wamā jaʿalnā
وَمَا جَعَلْنَا
நாம் ஆக்கவில்லை
libasharin
لِبَشَرٍ
எந்த மனிதருக்கும்
min qablika
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
l-khul'da
ٱلْخُلْدَۖ
நிரந்தரத்தை
afa-in
أَفَإِي۟ن
இருந்து விடுவார்களா
mitta
مِّتَّ
நீர்மரணித்துவிட்டால்
fahumu l-khālidūna
فَهُمُ ٱلْخَٰلِدُونَ
அவர்கள் நிரந்தரமானவர்களாக
(நபியே!) உங்களுக்கு முன்னரும் எந்த மனிதனுக்குமே நாம் மரணமற்ற வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே, நீங்கள் இறந்துவிட்ட பின்னர் இவர்கள் என்றென்றும் வாழப் போகிறார்களா? ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௩௪)
Tafseer
௩௫

كُلُّ نَفْسٍ ذَاۤىِٕقَةُ الْمَوْتِۗ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۗوَاِلَيْنَا تُرْجَعُوْنَ ٣٥

kullu
كُلُّ
ஒவ்வோர்
nafsin
نَفْسٍ
ஆன்மாவும்
dhāiqatu
ذَآئِقَةُ
சுவைக்கக் கூடியது
l-mawti
ٱلْمَوْتِۗ
மரணத்தை
wanablūkum
وَنَبْلُوكُم
நாம் சோதிப்போம் உங்களை
bil-shari
بِٱلشَّرِّ
துன்பத்தைக் கொண்டு
wal-khayri
وَٱلْخَيْرِ
இன்னும் இன்பத்தைக்கொண்டு
fit'natan
فِتْنَةًۖ
சோதிப்பதற்காக
wa-ilaynā
وَإِلَيْنَا
நம்மிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிக்கிறோம். பின்னர் நீங்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௩௫)
Tafseer
௩௬

وَاِذَا رَاٰكَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ يَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًاۗ اَهٰذَا الَّذِيْ يَذْكُرُ اٰلِهَتَكُمْۚ وَهُمْ بِذِكْرِ الرَّحْمٰنِ هُمْ كٰفِرُوْنَ ٣٦

wa-idhā raāka
وَإِذَا رَءَاكَ
உம்மைப் பார்த்தால்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பாளர்கள்
in yattakhidhūnaka
إِن يَتَّخِذُونَكَ
உம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள்
illā
إِلَّا
தவிர
huzuwan
هُزُوًا
பரிகாசமாகவே
ahādhā
أَهَٰذَا
இவரா
alladhī yadhkuru
ٱلَّذِى يَذْكُرُ
விமர்ச்சிக்கிறார்
ālihatakum
ءَالِهَتَكُمْ
உங்களது கடவுள்களை
wahum
وَهُم
அவர்களோ
bidhik'ri
بِذِكْرِ
பெயர் கூறுவதையும்
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனின்
hum
هُمْ
அவர்கள்
kāfirūna
كَٰفِرُونَ
மறுக்கின்றனர்
(நபியே!) நிராகரிப்பவர்கள் உங்களைக் கண்டால் (தங்களுக்குள் ஒருவர் ஒருவரை நோக்கி) "உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் இவர்தானா?" என்று உங்களை(ச் சுட்டிக் காண்பித்து)ப் பரிகாசம் செய்யாதிருப்பதில்லை. எனினும், அவர்களோ ரஹ்மா(ன் என்று இறைவ)னின் பெயரைக் கூறுவதையும் மறுக்கின்றனர். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௩௬)
Tafseer
௩௭

خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍۗ سَاُورِيْكُمْ اٰيٰتِيْ فَلَا تَسْتَعْجِلُوْنِ ٣٧

khuliqa
خُلِقَ
படைக்கப்பட்டான்
l-insānu min ʿajalin
ٱلْإِنسَٰنُ مِنْ عَجَلٍۚ
மனிதன்/விரைவாக
sa-urīkum
سَأُو۟رِيكُمْ
உங்களுக்குக் காண்பிப்போம்
āyātī
ءَايَٰتِى
எனது அத்தாட்சிகளை
falā tastaʿjilūni
فَلَا تَسْتَعْجِلُونِ
என்னிடம் அவசரப்படாதீர்கள்
மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். (ஆகவே, அவர்களை நோக்கி நபியே! நீங்கள் கூறுங்கள்: "வேதனைகளாகிய) என்னுடைய அத்தாட்சிகளை நான் அதிசீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பேன். நீங்கள் அவசரப்பட வேண்டாம்." ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௩௭)
Tafseer
௩௮

وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٣٨

wayaqūlūna
وَيَقُولُونَ
அவர்கள் கூறுகிறார்கள்
matā
مَتَىٰ
எப்போது
hādhā
هَٰذَا
இந்த
l-waʿdu
ٱلْوَعْدُ
வாக்குறுதி
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
(அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி "வேதனை வரும் என்று) நீங்கள் கூறுவதில் உண்மையானவர்களாக இருந்தால் இந்த மிரட்டல் எப்பொழுது வரும்" என்று அவர்கள் கேட்கிறார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௩௮)
Tafseer
௩௯

لَوْ يَعْلَمُ الَّذِيْنَ كَفَرُوْا حِيْنَ لَا يَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ يُنْصَرُوْنَ ٣٩

law yaʿlamu
لَوْ يَعْلَمُ
அறிந்து கொண்டால்...
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
ḥīna
حِينَ
(அந்த) நேரத்தை
lā yakuffūna
لَا يَكُفُّونَ
தடுக்க மாட்டார்களே
ʿan wujūhihimu
عَن وُجُوهِهِمُ
தங்களது முகங்களை விட்டும்
l-nāra
ٱلنَّارَ
நரக நெருப்பை
walā
وَلَا
இன்னும்
ʿan
عَن
முதுகுகளை விட்டும்
ẓuhūrihim
ظُهُورِهِمْ
முதுகுகளை விட்டும் தங்களது
walā hum yunṣarūna
وَلَا هُمْ يُنصَرُونَ
இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்களே
அவர்கள் தங்கள் முகங்களிலிருந்தும், தங்கள் முதுகுகளில் இருந்தும் நரக நெருப்பைத் தட்டிக்கொள்ள முடியாமலும், அவர்களுக்கு உதவி செய்ய ஒருவரும் கிடைக்காமலும் போகக் கூடிய (ஒரு) காலம் வருமென்பதை இந்த நிராகரிப்பவர்கள் அறிந்திருந்தால் (அது இவர்களுக்கே நன்று). ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௩௯)
Tafseer
௪௦

بَلْ تَأْتِيْهِمْ بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا يَسْتَطِيْعُوْنَ رَدَّهَا وَلَا هُمْ يُنْظَرُوْنَ ٤٠

bal
بَلْ
மாறாக
tatīhim
تَأْتِيهِم
அது அவர்களிடம் வரும்
baghtatan
بَغْتَةً
திடீரென
fatabhatuhum
فَتَبْهَتُهُمْ
அது அவர்களை திடுக்கிடச் செய்யும்
falā yastaṭīʿūna
فَلَا يَسْتَطِيعُونَ
அவர்கள் இயலமாட்டார்கள்
raddahā
رَدَّهَا
அதை தடுப்பதற்கு
walā hum yunẓarūna
وَلَا هُمْ يُنظَرُونَ
இன்னும் அவர்கள் தாமதிக்கப்பட மாட்டார்கள்
அது இவர்களிடம் திடுகூறாகவே வந்து அவர்களைத் தட்டுக் கெட்டுத் தடுமாறும்படிச் செய்து விடும்; அதனைத் தட்டிக் கழித்துவிட இவர்களால் முடியாது. இவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டாது. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௪௦)
Tafseer