Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்பியா - Page: 3

Al-Anbya

(al-ʾAnbiyāʾ)

௨௧

اَمِ اتَّخَذُوْٓا اٰلِهَةً مِّنَ الْاَرْضِ هُمْ يُنْشِرُوْنَ ٢١

ami ittakhadhū
أَمِ ٱتَّخَذُوٓا۟
எடுத்துக் கொண்டார்களா?
ālihatan
ءَالِهَةً
கடவுள்களை
mina l-arḍi
مِّنَ ٱلْأَرْضِ
பூமியில்
hum
هُمْ
அவர்கள்
yunshirūna
يُنشِرُونَ
உயிர்ப்பிக்கின்ற கடவுள்களை
பூமியில் உள்ளவற்றை இவர்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரே அவை (மரணித்தவர்களை) உயிர்ப்பிக்குமா? ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௨௧)
Tafseer
௨௨

لَوْ كَانَ فِيْهِمَآ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَفَسَدَتَاۚ فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُوْنَ ٢٢

law kāna
لَوْ كَانَ
இருந்திருந்தால்
fīhimā
فِيهِمَآ
அவை இரண்டிலும்
ālihatun
ءَالِهَةٌ
கடவுள்கள்
illā l-lahu
إِلَّا ٱللَّهُ
அல்லாஹ்வைத் தவிர
lafasadatā
لَفَسَدَتَاۚ
அவை இரண்டும் சீரழிந்து இருக்கும்
fasub'ḥāna
فَسُبْحَٰنَ
மகாத் தூயவன்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
rabbi
رَبِّ
அதிபதியான
l-ʿarshi
ٱلْعَرْشِ
அர்ஷுடைய
ʿammā
عَمَّا
விட்டு
yaṣifūna
يَصِفُونَ
அவர்கள் வர்ணிப்பதை
வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௨௨)
Tafseer
௨௩

لَا يُسْـَٔلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْـَٔلُوْنَ ٢٣

lā yus'alu
لَا يُسْـَٔلُ
அவன் கேள்வி கேட்கப்பட மாட்டான்
ʿammā
عَمَّا
பற்றி
yafʿalu
يَفْعَلُ
அவன் செய்வதை
wahum
وَهُمْ
அவர்கள்தான்
yus'alūna
يُسْـَٔلُونَ
கேள்வி கேட்கப்படுவார்கள்
அவன் செய்பவைகளைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது. (அவ்வளவு சர்வ சுதந்திரமும், வல்லமையும் உள்ளவன்.) எனினும், அவனோ அனைவரையும் (அவரவர்களுடைய செயலைப் பற்றிக்) கேட்கக் கூடியவன். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௨௩)
Tafseer
௨௪

اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اٰلِهَةً ۗقُلْ هَاتُوْا بُرْهَانَكُمْۚ هٰذَا ذِكْرُ مَنْ مَّعِيَ وَذِكْرُ مَنْ قَبْلِيْۗ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَۙ الْحَقَّ فَهُمْ مُّعْرِضُوْنَ ٢٤

ami ittakhadhū
أَمِ ٱتَّخَذُوا۟
அவர்கள் எடுத்துக் கொண்டார்களா?
min dūnihi
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
ālihatan
ءَالِهَةًۖ
கடவுள்களை
qul
قُلْ
கூறுவீராக
hātū
هَاتُوا۟
கொண்டு வாருங்கள்
bur'hānakum
بُرْهَٰنَكُمْۖ
உங்கள் ஆதாரத்தை
hādhā
هَٰذَا
இது
dhik'ru
ذِكْرُ
பேச்சாகும்
man maʿiya
مَن مَّعِىَ
என்னுடன் உள்ளவர்களைப் பற்றி
wadhik'ru
وَذِكْرُ
இன்னும் பேச்சாகும்
man qablī
مَن قَبْلِىۗ
எனக்கு முன் உள்ளவர்களைப் பற்றி
bal
بَلْ
மாறாக
aktharuhum
أَكْثَرُهُمْ
அவர்களில் அதிகமானவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
l-ḥaqa
ٱلْحَقَّۖ
சத்தியத்தை
fahum
فَهُم
ஆகவே, அவர்கள்
muʿ'riḍūna
مُّعْرِضُونَ
புறக்கணிக்கிறார்கள்
(நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளைத் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) "என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்னுள்ளவர்களின் வேதமும் இதோ இருக்கின்றன. (இவற்றிலிருந்து இதற்கு) உங்களுடைய அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்" என்று கூறுங்கள். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையை அறிந்துகொள்ள சக்தி அற்றவர்கள். ஆதலால் அவர்கள் (இவ்வேதத்தையும்) புறக்கணிக்கின்றனர். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௨௪)
Tafseer
௨௫

وَمَآ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِيْٓ اِلَيْهِ اَنَّهٗ لَآ اِلٰهَ اِلَّآ اَنَا۠ فَاعْبُدُوْنِ ٢٥

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
min qablika
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
min rasūlin
مِن رَّسُولٍ
எந்த தூதரையும்
illā
إِلَّا
தவிர
nūḥī
نُوحِىٓ
நாம் வஹீ அறிவித்தே(£ம்)
ilayhi
إِلَيْهِ
அவர்களுக்கு
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக விஷயமாவது
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā anā
إِلَّآ أَنَا۠
என்னைத் தவிர
fa-uʿ'budūni
فَٱعْبُدُونِ
ஆகவே, என்னையே வணங்குங்கள்
உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம் "நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவனில்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௨௫)
Tafseer
௨௬

وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا سُبْحٰنَهٗ ۗبَلْ عِبَادٌ مُّكْرَمُوْنَ ۙ ٢٦

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறுகின்றனர்
ittakhadha
ٱتَّخَذَ
எடுத்துக் கொண்டான்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
waladan
وَلَدًاۗ
ஒரு குழந்தையை
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥۚ
அவன் மகா தூயவன்
bal
بَلْ
மாறாக
ʿibādun
عِبَادٌ
அடியார்கள்
muk'ramūna
مُّكْرَمُونَ
அவனுடைய கண்ணியமான
(அவ்வாறிருந்தும்) இவர்கள் ரஹ்மான் (மலக்குகளை தனக்குப் பெண்) சந்ததியாக்கிக் கொண்டான் என்று கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். (மலக்குகள் அவனுடைய சந்ததிகளன்று, எனினும், அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௨௬)
Tafseer
௨௭

لَا يَسْبِقُوْنَهٗ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهٖ يَعْمَلُوْنَ ٢٧

lā yasbiqūnahu
لَا يَسْبِقُونَهُۥ
அவர்கள் அவனை முந்தமாட்டார்கள்
bil-qawli
بِٱلْقَوْلِ
பேச்சில்
wahum
وَهُم
அவர்கள்
bi-amrihi
بِأَمْرِهِۦ
அவனுடைய கட்டளைக் கொண்டே
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கின்றனர்
(அவன் சந்நிதியில்) இ(வ்வான)வர்கள் யாதொரு வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவன் இட்ட கட்டளையை இவர்கள் செய்து கொண்டு இருப்பார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௨௭)
Tafseer
௨௮

يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُوْنَۙ اِلَّا لِمَنِ ارْتَضٰى وَهُمْ مِّنْ خَشْيَتِهٖ مُشْفِقُوْنَ ٢٨

yaʿlamu
يَعْلَمُ
அவன் நன்கறிவான்
mā bayna aydīhim
مَا بَيْنَ أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன் உள்ளதையும்
wamā khalfahum
وَمَا خَلْفَهُمْ
அவர்களுக்குப் பின் உள்ளதையும்
walā yashfaʿūna
وَلَا يَشْفَعُونَ
அவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள்
illā
إِلَّا
தவிர
limani ir'taḍā
لِمَنِ ٱرْتَضَىٰ
அவன் விரும்பியவர்களுக்கே
wahum
وَهُم
அவர்கள்
min khashyatihi
مِّنْ خَشْيَتِهِۦ
அவனுடைய அச்சத்தால்
mush'fiqūna
مُشْفِقُونَ
பயப்படுகிறார்கள்
அவர்களுக்கு முன்னிருப்பவைகளையும், பின்னிருப்ப லிவைகளையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர் லிகளுக்கன்றி மற்றெவருக்கும் இவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள். அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௨௮)
Tafseer
௨௯

۞ وَمَنْ يَّقُلْ مِنْهُمْ اِنِّيْٓ اِلٰهٌ مِّنْ دُوْنِهٖ فَذٰلِكَ نَجْزِيْهِ جَهَنَّمَۗ كَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ ࣖ ٢٩

waman yaqul
وَمَن يَقُلْ
யார் கூறுவாரோ
min'hum
مِنْهُمْ
அவர்களில்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்தான்
ilāhun
إِلَٰهٌ
கடவுள்
min dūnihi
مِّن دُونِهِۦ
அவனையன்றி
fadhālika
فَذَٰلِكَ
அவர்
najzīhi
نَجْزِيهِ
அவருக்கு கூலியாக கொடுப்போம்
jahannama
جَهَنَّمَۚ
நரகத்தையே
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
கூலி கொடுப்போம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
அவர்களில் எவரேனும் "அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் ஒரு வணக்கத்திற்குரிய இறைவன்தான்" என்று (அந்த மலக்குகள்) கூறினால், அவர்களுக்கும் நரகத்தையே நாம் கூலியாக்குவோம். அநியாயக்காரர்களுக்கு நாம் கூலி கொடுக்கும் அவ்வாறே (அவர்களுக்கும் கூலி) கொடுப்போம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௨௯)
Tafseer
௩௦

اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْٓا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَاۗ وَجَعَلْنَا مِنَ الْمَاۤءِ كُلَّ شَيْءٍ حَيٍّۗ اَفَلَا يُؤْمِنُوْنَ ٣٠

awalam yara
أَوَلَمْ يَرَ
அவர்கள் அறியவேண்டாமா
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பவர்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியும்
kānatā
كَانَتَا
அவ்விரண்டும் இருந்தன
ratqan
رَتْقًا
சேர்ந்து
fafataqnāhumā
فَفَتَقْنَٰهُمَاۖ
நாம்தான் அவற்றைப் பிளந்தோம்
wajaʿalnā
وَجَعَلْنَا
ஏற்படுத்தினோம்
mina l-māi
مِنَ ٱلْمَآءِ
தண்ணீரிலிருந்து
kulla shayin
كُلَّ شَىْءٍ
எல்லாவஸ்துகளையும்
ḥayyin
حَىٍّۖ
உயிருள்ள
afalā yu'minūna
أَفَلَا يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்களா
(ஆரம்பத்தில்) வானம் (என்றும்) பூமி (என்றும் தனித்தனியாக) இல்லாமல் இருந்ததை நாமே பிரித்தமைத்து (வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அந்த மழை) நீரைக் கொண்டு (உயிருள்ள) ஒவ்வொன்றையும் வாழ்ந்திருக்கச் செய்தோம் என்பதையும் இந்நிராகரிப்பவர்கள் பார்த்தேனும் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா? ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௩௦)
Tafseer