Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்பியா - Page: 2

Al-Anbya

(al-ʾAnbiyāʾ)

௧௧

وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَّاَنْشَأْنَا بَعْدَهَا قَوْمًا اٰخَرِيْنَ ١١

wakam
وَكَمْ
எத்தனையோ
qaṣamnā
قَصَمْنَا
நாம் அழித்தோம்
min qaryatin
مِن قَرْيَةٍ
பல ஊர்களை
kānat
كَانَتْ
அவை இருந்தன
ẓālimatan
ظَالِمَةً
தீயவையாக
wa-anshanā
وَأَنشَأْنَا
உருவாக்கினோம்
baʿdahā
بَعْدَهَا
அவற்றுக்குப் பின்னர்
qawman ākharīna
قَوْمًا ءَاخَرِينَ
வேறு மக்களை
அநியாயக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்) வேறு மக்களை உற்பத்தி செய்தோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௧)
Tafseer
௧௨

فَلَمَّآ اَحَسُّوْا بَأْسَنَآ اِذَا هُمْ مِّنْهَا يَرْكُضُوْنَ ۗ ١٢

falammā aḥassū
فَلَمَّآ أَحَسُّوا۟
அவர்கள் உணர்ந்தபோது
basanā
بَأْسَنَآ
நமது வேதனையை
idhā hum
إِذَا هُم
அப்போது அவர்கள்
min'hā
مِّنْهَا
அதிலிருந்து
yarkuḍūna
يَرْكُضُونَ
விரைந்து ஓடினர்
அவர்களும் நம்முடைய வேதனையின் அறிகுறியை உணர்ந்துகொண்ட மாத்திரத்தில் தங்கள் ஊரைவிட்டு ஓட ஆரம்பித்தார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௨)
Tafseer
௧௩

لَا تَرْكُضُوْا وَارْجِعُوْٓا اِلٰى مَآ اُتْرِفْتُمْ فِيْهِ وَمَسٰكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْـَٔلُوْنَ ١٣

lā tarkuḍū
لَا تَرْكُضُوا۟
விரைந்து ஓடாதீர்கள்
wa-ir'jiʿū
وَٱرْجِعُوٓا۟
திரும்புங்கள்
ilā mā
إِلَىٰ مَآ
எதன் பக்கம்
ut'rif'tum
أُتْرِفْتُمْ
நீங்கள் பெரும் இன்பம் கொடுக்கப்பட்டீர்கள்
fīhi
فِيهِ
அதில்
wamasākinikum
وَمَسَٰكِنِكُمْ
உங்கள் இல்லங்களின்
laʿallakum tus'alūna
لَعَلَّكُمْ تُسْـَٔلُونَ
நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்
(அச்சமயம் நாம் அவர்களை நோக்கி) "நீங்கள் ஓடாதீர்கள்! நீங்கள் மிக்க ஆடம்பரமாக அனுபவித்து வந்த செல்வத்தின் பக்கமும், வசித்திருந்த உங்கள் வீடுகளுக்கும் நீங்கள் திரும்புங்கள். அங்கு நீங்கள் அதுபற்றி கேட்கப்படுவீர்கள்" (என்று கூறினோம்.) ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௩)
Tafseer
௧௪

قَالُوْا يٰوَيْلَنَآ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ ١٤

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
yāwaylanā
يَٰوَيْلَنَآ
எங்கள் நாசமே
innā kunnā
إِنَّا كُنَّا
நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
ẓālimīna
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக
அதற்கவர்கள் "எங்களுடைய கேடே! நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறி (பாவிகளாகி) விட்டோம்" என்று கூக்குரலிட்டார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௪)
Tafseer
௧௫

فَمَا زَالَتْ تِّلْكَ دَعْوٰىهُمْ حَتّٰى جَعَلْنٰهُمْ حَصِيْدًا خَامِدِيْنَ ١٥

famā zālat
فَمَا زَالَت
நீடித்திருந்தது
til'ka
تِّلْكَ
அதுவே
daʿwāhum
دَعْوَىٰهُمْ
அவர்களது கூப்பாடாக
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
jaʿalnāhum
جَعَلْنَٰهُمْ
அவர்களை நாம் ஆக்கிவிட்டோம்
ḥaṣīdan
حَصِيدًا
வெட்டப்பட்டவர்களாக
khāmidīna
خَٰمِدِينَ
அழிந்தவர்களாக
அவர்களுடைய அக்கூக்குரல் அவர்களை நாம் அழித்துச் சாம்பலாக்கும் வரையில் நீங்காதிருந்தது. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௫)
Tafseer
௧௬

وَمَا خَلَقْنَا السَّمَاۤءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ ١٦

wamā khalaqnā
وَمَا خَلَقْنَا
நாம் படைக்கவில்லை
l-samāa
ٱلسَّمَآءَ
வானத்தையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும்
lāʿibīna
لَٰعِبِينَ
விளையாடுபவர்களாக
வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் வீண் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௬)
Tafseer
௧௭

لَوْ اَرَدْنَآ اَنْ نَّتَّخِذَ لَهْوًا لَّاتَّخَذْنٰهُ مِنْ لَّدُنَّآ ۖاِنْ كُنَّا فٰعِلِيْنَ ١٧

law aradnā
لَوْ أَرَدْنَآ
நாம் நாடி இருந்தால்
an nattakhidha
أَن نَّتَّخِذَ
நாம் ஏற்படுத்திக் கொள்ள
lahwan
لَهْوًا
வேடிக்கையை
la-ittakhadhnāhu
لَّٱتَّخَذْنَٰهُ
அதை ஏற்படுத்திக் கொண்டிருப்போம்
min ladunnā
مِن لَّدُنَّآ
நம்மிடமிருந்தே
in kunnā
إِن كُنَّا
நாம் இல்லை
fāʿilīna
فَٰعِلِينَ
செய்பவர்களாக
நாம் வீண் விளையாட்டுக்காரனாக இருந்து விளையாட வேண்டும் என்று நாம் கருதியும் இருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்து (விளையாடி)க் கொண்டிருப்போம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௭)
Tafseer
௧௮

بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌۗ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُوْنَ ١٨

bal
بَلْ
மாறாக
naqdhifu
نَقْذِفُ
எறிகிறோம்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியத்தை
ʿalā l-bāṭili
عَلَى ٱلْبَٰطِلِ
அசத்தியத்தின் மீது
fayadmaghuhu
فَيَدْمَغُهُۥ
அது அதை உடைத்து விடுகிறது
fa-idhā
فَإِذَا
அப்போது
huwa
هُوَ
அது
zāhiqun
زَاهِقٌۚ
அழிந்து விடுகிறது
walakumu
وَلَكُمُ
உங்களுக்கு
l-waylu
ٱلْوَيْلُ
நாசம்தான்
mimmā taṣifūna
مِمَّا تَصِفُونَ
வர்ணிப்பதால்
அவ்வாறன்று; மெய்யைப் பொய்யின் மீது எறிகின்றோம். அது (அதன் தலையை) உடைத்து விடுகின்றது. பின்னர் அது அழிந்தும் விடுகின்றது. (ஆகவே, இறைவனைப் பற்றி அவனுக்கு மனைவி உண்டென்றும், சந்ததி உண்டென்றும்) நீங்கள் கூறுபவற்றின் காரணமாக உங்களுக்குக் கேடுதான். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௮)
Tafseer
௧௯

وَلَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَمَنْ عِنْدَهٗ لَا يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا يَسْتَحْسِرُوْنَ ۚ ١٩

walahu
وَلَهُۥ
அவனுக்கே
man
مَن
எவர்கள்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
பூமியிலும்
waman
وَمَنْ
இன்னும் எவர்கள்
ʿindahu
عِندَهُۥ
அவனிடம்
lā yastakbirūna
لَا يَسْتَكْبِرُونَ
பெருமையடிக்க மாட்டார்கள்
ʿan ʿibādatihi
عَنْ عِبَادَتِهِۦ
அவனை வணங்குவதைவிட்டு
walā yastaḥsirūna
وَلَا يَسْتَحْسِرُونَ
இன்னும் சோர்வடைய மாட்டார்கள்
வானங்களிலும் பூமியிலுமுள்ள யாவும் அவனுக்குரியனவே! அவனுடைய சந்நிதியில் இருக்கக்கூடிய (முகர்ரபான மலக்குகளாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமையடிக்கவும் சோர்வுறவும் மாட்டார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௯)
Tafseer
௨௦

يُسَبِّحُوْنَ الَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُوْنَ ٢٠

yusabbiḥūna
يُسَبِّحُونَ
அவர்கள் துதிக்கின்றனர்
al-layla
ٱلَّيْلَ
இரவு
wal-nahāra
وَٱلنَّهَارَ
பகலாக
lā yafturūna
لَا يَفْتُرُونَ
பலவீனப்படுவதில்லை
அவர்கள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாது அவனைப் போற்றி புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௨௦)
Tafseer