Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்பியா - Word by Word

Al-Anbya

(al-ʾAnbiyāʾ)

bismillaahirrahmaanirrahiim

اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِيْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَ ۚ ١

iq'taraba
ٱقْتَرَبَ
நெருங்கிவிட்டது
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
ḥisābuhum
حِسَابُهُمْ
அவர்களின் விசாரணை
wahum
وَهُمْ
அவர்களோ
fī ghaflatin
فِى غَفْلَةٍ
அலட்சியத்தில்
muʿ'riḍūna
مُّعْرِضُونَ
புறக்கணிக்கின்றனர்
மனிதர்களை (நாம்) கேள்வி கணக்கு(க் கேட்கும் நாள்) நெருங்கிக் கொண்டே வருகின்றது; எனினும், அவர்களோ அதனைப் புறக்கணித்துக் கவலை அற்றவர்களாக இருக்கின்றனர். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧)
Tafseer

مَا يَأْتِيْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنْ رَّبِّهِمْ مُّحْدَثٍ اِلَّا اسْتَمَعُوْهُ وَهُمْ يَلْعَبُوْنَ ۙ ٢

mā yatīhim
مَا يَأْتِيهِم
அவர்களுக்கு வராது
min dhik'rin
مِّن ذِكْرٍ
அறிவுரை ஏதும்
min rabbihim
مِّن رَّبِّهِم
அவர்களுடைய இறைவனிடமிருந்து
muḥ'dathin
مُّحْدَثٍ
புதிய
illā
إِلَّا
தவிர
is'tamaʿūhu
ٱسْتَمَعُوهُ
அதை அவர்கள் செவிமடுத்தே
wahum
وَهُمْ
அவர்கள்
yalʿabūna
يَلْعَبُونَ
விளையாடுபவர்களாக
தங்கள் இறைவனிடமிருந்து புதிதாக யாதொரு நல்லுபதேசம் வரும்போதெல்லாம் அதனை அவர்கள் (நம்பாது) பரிகாசம் செய்துகொண்டே கேட்கின்றார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௨)
Tafseer

لَاهِيَةً قُلُوْبُهُمْۗ وَاَسَرُّوا النَّجْوَىۖ الَّذِيْنَ ظَلَمُوْاۖ هَلْ هٰذَآ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْۚ اَفَتَأْتُوْنَ السِّحْرَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ٣

lāhiyatan
لَاهِيَةً
அலட்சியம் செய்கின்றன
qulūbuhum
قُلُوبُهُمْۗ
அவர்களது உள்ளங்கள்
wa-asarrū
وَأَسَرُّوا۟
பகிரங்கப்படுத்திக் கொண்டனர்
l-najwā
ٱلنَّجْوَى
பேச்சை
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்கள்
hal hādhā
هَلْ هَٰذَآ
இவர் இல்லை
illā basharun
إِلَّا بَشَرٌ
மனிதரே தவிர
mith'lukum
مِّثْلُكُمْۖ
உங்களைப் போன்ற
afatatūna
أَفَتَأْتُونَ
ஏற்றுக்கொள்கிறீர்களா
l-siḥ'ra
ٱلسِّحْرَ
சூனியத்தை
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
tub'ṣirūna
تُبْصِرُونَ
அறிந்துகொண்டே
அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச்) சிந்திப்பதே இல்லை. அன்றி, இத்தகைய அநியாயக்காரர்கள் (நம்முடைய தூதரைப் பற்றி) "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறென்ன? நீங்கள் பார்த்துக்கொண்டே (அவருடைய) சூனியத்தில் சிக்க வருகின்றீர்களா?" என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௩)
Tafseer

قٰلَ رَبِّيْ يَعْلَمُ الْقَوْلَ فِى السَّمَاۤءِ وَالْاَرْضِۖ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٤

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbī
رَبِّى
என் இறைவன்
yaʿlamu
يَعْلَمُ
அறிகிறான்
l-qawla
ٱلْقَوْلَ
பேச்சுகளை
fī l-samāi
فِى ٱلسَّمَآءِ
வானத்திலும்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
பூமியிலும்
wahuwa l-samīʿu
وَهُوَ ٱلسَّمِيعُ
அவன்தான் நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கு அறிபவன்
"வானங்களிலோ பூமியிலோ (ரகசியமாகவும், வெளிப்படை யாகவும் பேசப்படும்) எல்லா வாக்கியங்களையும் என் இறைவன் நன்கறிவான். ஏனென்றால், அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்" என்று (நமது தூதர்) பதில் கூறினார். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௪)
Tafseer

بَلْ قَالُوْٓا اَضْغَاثُ اَحْلَامٍۢ بَلِ افْتَرٰىهُ بَلْ هُوَ شَاعِرٌۚ فَلْيَأْتِنَا بِاٰيَةٍ كَمَآ اُرْسِلَ الْاَوَّلُوْنَ ٥

bal
بَلْ
மாறாக
qālū
قَالُوٓا۟
கூறினர்
aḍghāthu
أَضْغَٰثُ
பயமுறுத்துகின்ற
aḥlāmin
أَحْلَٰمٍۭ
கனவுகள்
bali
بَلِ
மாறாக
if'tarāhu
ٱفْتَرَىٰهُ
இதை இட்டுக்கட்டுகிறார்
bal
بَلْ
மாறாக
huwa
هُوَ
இவர்
shāʿirun
شَاعِرٌ
ஒரு கவிஞர்
falyatinā
فَلْيَأْتِنَا
ஆகவே எங்களிடம் கொண்டு வரட்டும்
biāyatin
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியை
kamā
كَمَآ
போன்று
ur'sila
أُرْسِلَ
அனுப்பப்பட்டது
l-awalūna
ٱلْأَوَّلُونَ
முந்தியவர்கள்
(தவிர, அவர்கள் நம்முடைய வசனங்களைப் பற்றி) "இவை சிதறிய சிந்தனை(யால் ஏற்பட்ட வாக்கியங்கள்) என்றும், நம்முடைய தூதர் இதனைப் பொய்யாகத் தாமே கற்பனை செய்துகொண்டார் என்றும், இவர் ஒரு கவிஞர்தான்; (தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை) என்றும் (கூறுவதுடன்) முற்காலத்தில் வந்த தூதர்கள் (கொண்டு வந்ததைப்) போல இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும் கூறுகின்றனர்! ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௫)
Tafseer

مَآ اٰمَنَتْ قَبْلَهُمْ مِّنْ قَرْيَةٍ اَهْلَكْنٰهَاۚ اَفَهُمْ يُؤْمِنُوْنَ ٦

mā āmanat
مَآ ءَامَنَتْ
நம்பிக்கை கொள்ளவில்லை
qablahum
قَبْلَهُم
இவர்களுக்கு முன்னர்
min qaryatin
مِّن قَرْيَةٍ
எந்த சமுதாயமும்
ahlaknāhā
أَهْلَكْنَٰهَآۖ
ஆகவே, அவர்களை அழித்தோம்
afahum
أَفَهُمْ
?/எனவே, இவர்கள்
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொண்டு விடுவார்கள்
இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்ட ஊராரில் ஒருவருமே (அவர்கள் விரும்பிய அத்தாட்சிகளைக் கண்ட பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. (அவ்வாறிருக்க) இவர்கள்தாமா நம்பிக்கை கொள்ளப் போகின்றனர்! ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௬)
Tafseer

وَمَآ اَرْسَلْنَا قَبْلَكَ اِلَّا رِجَالًا نُّوْحِيْٓ اِلَيْهِمْ فَسْـَٔلُوْٓا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ٧

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
qablaka
قَبْلَكَ
உமக்கு முன்னர்
illā
إِلَّا
தவிர
rijālan
رِجَالًا
ஆடவர்களை
nūḥī
نُّوحِىٓ
வஹீ அறிவிப்போம்
ilayhim
إِلَيْهِمْۖ
அவர்களுக்கு
fasalū
فَسْـَٔلُوٓا۟
ஆகவே, கேட்டறிந்து கொள்ளுங்கள்
ahla l-dhik'ri
أَهْلَ ٱلذِّكْرِ
வேதத்தையுடையவர்களிடம்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
அறியாதவர்களாக
(நபியே!) உங்களுக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை. (உங்களுக்கு அறிவிப்பது போன்றே நம்முடைய கட்டளைகளை) அவர்களுக்கும் வஹீ (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்: இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் முன்னுள்ள வேதத்தை உடையவரிடத்தில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௭)
Tafseer

وَمَا جَعَلْنٰهُمْ جَسَدًا لَّا يَأْكُلُوْنَ الطَّعَامَ وَمَا كَانُوْا خٰلِدِيْنَ ٨

wamā jaʿalnāhum
وَمَا جَعَلْنَٰهُمْ
நாம் அவர்களை ஆக்கவில்லை
jasadan
جَسَدًا
உடல்களாக
lā yakulūna
لَّا يَأْكُلُونَ
சாப்பிடாத
l-ṭaʿāma
ٱلطَّعَامَ
உணவு
wamā kānū
وَمَا كَانُوا۟
இன்னும் இருக்கவில்லை
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தர தன்மை உள்ளவர்களாக
அன்றி, அவர்களுக்கு நாம் உணவே உட்கொள்ளாத உடலைக் கொடுக்கவில்லை. தவிர, அவர்கள் (பூமியில் என்றுமே மரணிக்காத) நிரந்தரம் பெற்றவர்களாகவும் இருக்கவில்லை. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௮)
Tafseer

ثُمَّ صَدَقْنٰهُمُ الْوَعْدَ فَاَنْجَيْنٰهُمْ وَمَنْ نَّشَاۤءُ وَاَهْلَكْنَا الْمُسْرِفِيْنَ ٩

thumma
ثُمَّ
பிறகு
ṣadaqnāhumu
صَدَقْنَٰهُمُ
நாம் அவர்களுக்கு உண்மைப்படுத்தினோம்
l-waʿda
ٱلْوَعْدَ
வாக்கை
fa-anjaynāhum
فَأَنجَيْنَٰهُمْ
நாம் பாதுகாத்தோம்
waman nashāu
وَمَن نَّشَآءُ
நாம் நாடியவர்களையும்
wa-ahlaknā
وَأَهْلَكْنَا
நாம் அழித்தோம்
l-mus'rifīna
ٱلْمُسْرِفِينَ
வரம்பு மீறியவர்களை
பின்னர், (அவர்களை பாதுகாத்துக் கொள்வதாக நாம்) அவர்களுக்களித்த வாக்குறுதியை உண்மையாக்கும் பொருட்டு அவர்களையும், நாம் விரும்பிய மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டு வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௯)
Tafseer
௧௦

لَقَدْ اَنْزَلْنَآ اِلَيْكُمْ كِتٰبًا فِيْهِ ذِكْرُكُمْۗ اَفَلَا تَعْقِلُوْنَ ࣖ ١٠

laqad
لَقَدْ
திட்டமாக
anzalnā
أَنزَلْنَآ
இறக்கி இருக்கிறோம்
ilaykum
إِلَيْكُمْ
உங்களுக்கு
kitāban
كِتَٰبًا
ஒரு வேதத்தை
fīhi dhik'rukum
فِيهِ ذِكْرُكُمْۖ
அதில்/உங்களைப் பற்றிய சிறப்பு இருக்கிறது
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
உங்களுக்கு(ப் போதுமான) நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கின்றோம். இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦)
Tafseer