குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௮௮
Qur'an Surah Taha Verse 88
ஸூரத்து தாஹா [௨௦]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَآ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰى ەۙ فَنَسِيَ ۗ (طه : ٢٠)
- fa-akhraja
- فَأَخْرَجَ
- Then he brought forth
- உருவாக்கினான்
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- ʿij'lan
- عِجْلًا
- a calf's
- ஒரு காளைக் கன்றை
- jasadan
- جَسَدًا
- body
- ஓர் உடலை
- lahu
- لَّهُۥ
- it had
- அதற்கு
- khuwārun
- خُوَارٌ
- a lowing sound
- மாட்டின் சப்தத்தை உடைய
- faqālū
- فَقَالُوا۟
- and they said
- கூறினர்
- hādhā
- هَٰذَآ
- "This
- இதுதான்
- ilāhukum
- إِلَٰهُكُمْ
- (is) your god
- உங்களது தெய்வமும்
- wa-ilāhu
- وَإِلَٰهُ
- and the god
- தெய்வமும்
- mūsā
- مُوسَىٰ
- (of) Musa
- மூஸாவுடைய
- fanasiya
- فَنَسِىَ
- but he forgot"
- ஆனால் மறந்து விட்டார்
Transliteration:
Fa akhraja lahum 'ijlan jasadal lahoo khuwaarun faqaaloo haazaaa ilaahukum wa ilaahu Moosaa fanasee(QS. Ṭāʾ Hāʾ:88)
English Sahih International:
And he extracted for them [the statue of] a calf which had a lowing sound, and they said, "This is your god and the god of Moses, but he forgot." (QS. Taha, Ayah ௮௮)
Abdul Hameed Baqavi:
பின்னர், அவன் ஒரு காளை கன்றின் சிலையை (மக்கள் முன்) வெளியாக்கினான். அதற்கு(க் காளை மாட்டின் சப்தத்தைப் போல் அர்த்தமற்ற) சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர், இதுதான் உங்களுக்கும் மூஸாவுக்கும் இறைவனாகும். (இதனை) மறந்து விட்டு (மூஸா மலைக்குச் சென்று) விட்டார்" என்று கூறினார்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௮௮)
Jan Trust Foundation
பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் அவர்களுக்கு ஒரு காளைக் கன்றை அதற்கு -மாட்டின் சப்தத்தை உடைய ஓர் உடலை- உருவாக்கினான். (இதைப் பார்த்த சில மக்கள்) கூறினர்: “இதுதான் உங்களது தெய்வமும் மூஸாவுடைய தெய்வமும் ஆகும். ஆனால் அவர் மறந்து (எங்கே சென்று) விட்டார்.