Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௮௭

Qur'an Surah Taha Verse 87

ஸூரத்து தாஹா [௨௦]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا مَآ اَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلٰكِنَّا حُمِّلْنَآ اَوْزَارًا مِّنْ زِيْنَةِ الْقَوْمِ فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَى السَّامِرِيُّ ۙ (طه : ٢٠)

qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
mā akhlafnā
مَآ أَخْلَفْنَا
"Not we broke
நாங்கள் மாறுசெய்யவில்லை
mawʿidaka
مَوْعِدَكَ
promise to you
உமது குறிப்பிட்டநேரத்திற்கு
bimalkinā
بِمَلْكِنَا
by our will
எங்கள் விருப்பப்படி
walākinnā
وَلَٰكِنَّا
but we
என்றாலும்
ḥummil'nā
حُمِّلْنَآ
[we] were made to carry
நாங்கள் சுமத்தப்பட்டோம்
awzāran
أَوْزَارًا
burdens
பலசுமைகளை
min zīnati
مِّن زِينَةِ
from ornaments
ஆபரணங்களில்
l-qawmi
ٱلْقَوْمِ
(of) the people
மக்களின்
faqadhafnāhā
فَقَذَفْنَٰهَا
so we threw them
ஆகவே அவற்றை நாங்கள் எறிந்தோம்
fakadhālika
فَكَذَٰلِكَ
and thus
அவ்வாறே
alqā
أَلْقَى
threw
எறிந்தான்
l-sāmiriyu
ٱلسَّامِرِىُّ
the Samiri"
சாமிரி

Transliteration:

Qaaloo maaa akhlafnaa maw'idaka bimalkinna wa laakinna hummilnaaa awzaaram min zeenatil qawmi faqazafnaahaa fakazaalika alqas Saamiriyy (QS. Ṭāʾ Hāʾ:87)

English Sahih International:

They said, "We did not break our promise to you by our will, but we were made to carry burdens from the ornaments of the people [of Pharaoh], so we threw them [into the fire], and thus did the Samiri throw." (QS. Taha, Ayah ௮௭)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "நாங்கள் உங்களுக்குச் செய்த வாக்குறுதிக்கு எங்கள் இஷ்டப்படி மாறு செய்யவில்லை. ஆனால், நாங்கள் சுமந்துகொண்டு வந்த (ஃபிர்அவ்னுடைய) மக்களின் நகைகளை (நெருப்பில் எறியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு அதில் அவைகளை) நாங்கள் எறிந்தோம். அவ்வாறே ஸாமிரீயும் (தன்னிடமிருந்த நகைகளை) எறிந்தான். (ஸூரத்து தாஹா, வசனம் ௮௭)

Jan Trust Foundation

“உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை; ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்” என்று அவர்கள் கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினார்கள்: “உமது குறிப்பிட்ட நேரத்திற்கு நாங்கள் எங்கள் விருப்பப்படி மாறுசெய்யவில்லை. என்றாலும் நாங்கள் (ஃபிர்அவ்னுடைய) மக்களின் ஆபரணங்களில் பலசுமைகளை நாங்கள் சுமத்தப்பட்டோம். ஆகவே, அவற்றை நாங்கள் (நெருப்பில்) எறிந்தோம். அவ்வாறே சாமிரியும் எறிந்தான்.