Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௮௬

Qur'an Surah Taha Verse 86

ஸூரத்து தாஹா [௨௦]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَرَجَعَ مُوْسٰٓى اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ەۚ قَالَ يٰقَوْمِ اَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ەۗ اَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ اَمْ اَرَدْتُّمْ اَنْ يَّحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِّنْ رَّبِّكُمْ فَاَخْلَفْتُمْ مَّوْعِدِيْ (طه : ٢٠)

farajaʿa
فَرَجَعَ
Then Musa returned
திரும்பினார்
mūsā
مُوسَىٰٓ
Then Musa returned
மூஸா
ilā qawmihi
إِلَىٰ قَوْمِهِۦ
to his people
தனது சமுதாயத்திடம்
ghaḍbāna
غَضْبَٰنَ
angry
கோபமானவராக
asifan
أَسِفًاۚ
(and) sorrowful
கவலையடைந்தவராக
qāla
قَالَ
He said
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
"O my people!
என் சமுதாயமே
alam
أَلَمْ
Did not
வாக்களிக்கவில்லையா
yaʿid'kum
يَعِدْكُمْ
promise you
வாக்களிக்கவில்லையா உங்களுக்கு
rabbukum
رَبُّكُمْ
your Lord
உங்கள் இறைவன்
waʿdan ḥasanan
وَعْدًا حَسَنًاۚ
a promise good?
அழகிய வாக்கை
afaṭāla
أَفَطَالَ
Then, did seem long
தூரமாகிவிட்டதா
ʿalaykumu
عَلَيْكُمُ
to you
உங்களுக்கு
l-ʿahdu am
ٱلْعَهْدُ أَمْ
the promise or
காலம்/அல்லது
aradttum
أَرَدتُّمْ
did you desire
நீங்கள் நாடுகிறீர்களா
an yaḥilla
أَن يَحِلَّ
that descend
இறங்குவதை
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
ghaḍabun
غَضَبٌ
(the) Anger
கோபம்
min rabbikum
مِّن رَّبِّكُمْ
of your Lord
உங்கள் இறைவன் புறத்திலிருந்து
fa-akhlaftum
فَأَخْلَفْتُم
so you broke
அதனால் மாறு செய்தீர்களா
mawʿidī
مَّوْعِدِى
(the) promise to me?"
எனது குறிப்பிட்ட நேரத்திற்கு

Transliteration:

Faraja's Moosaaa ilaa qawmihee ghadbaana asifaa; qaala yaa qawmi alam ya'idkum Rabbukum wa'dan hasanaa; afataala 'alaikumul 'ahdu am arattum ai yahilla 'alaikum ghadabum mir Rabbikum fa akhlaftum maw'idee (QS. Ṭāʾ Hāʾ:86)

English Sahih International:

So Moses returned to his people, angry and grieved. He said, "O my people, did your Lord not make you a good promise? Then, was the time [of its fulfillment] too long for you, or did you wish that wrath from your Lord descend upon you, so you broke your promise [of obedience] to me?" (QS. Taha, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

(உடனே) மூஸா பெரும் துக்கத்துடன் கோபம் கொண்டவராகத் தன்னுடைய மக்களிடம் திரும்பி வந்து "என்னுடைய மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு(த் தவ்றாத் என்னும் வேதத்தைத் தருவதாக) அழகான வாக்குறுதி அளிக்க வில்லையா? அவன் வாக்குறுதி அளித்து அதிக நாள்களாகி விட்டனவா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனின் கோபம் இறங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியே எனக்குச் செய்த வாக்குறுதிக்கு நீங்கள் மாறு செய்தீர்களா?" என்று கேட்டார். (ஸூரத்து தாஹா, வசனம் ௮௬)

Jan Trust Foundation

ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து| “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உடனே தனது சமுதாயத்திடம் கோபமானவராக, கவலையடைந்தவராக மூஸா திரும்பினார். என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகிய வாக்கை வாக்களிக்கவில்லையா? (என்னை விட்டுப் பிரிந்த) காலம் உங்களுக்கு தூரமாகிவிட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவன் புறத்திலிருந்து கோபம் இறங்குவதை நீங்கள் நாடுகிறீர்களா? அதனால் எனது குறிப்பிட்ட நேரத்திற்கு (வராமல்) மாறு செய்தீர்களா? என்று (மூஸா) கூறினார்.