Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௭௮

Qur'an Surah Taha Verse 78

ஸூரத்து தாஹா [௨௦]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُوْدِهٖ فَغَشِيَهُمْ مِّنَ الْيَمِّ مَا غَشِيَهُمْ ۗ (طه : ٢٠)

fa-atbaʿahum
فَأَتْبَعَهُمْ
Then followed them
அவர்களைப் பின்தொடர்ந்தான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
Firaun
ஃபிர்அவ்ன்
bijunūdihi
بِجُنُودِهِۦ
with his forces
தனது படைகளைக்கொண்டு
faghashiyahum
فَغَشِيَهُم
but covered them
ஆகவே, அவர்களை சூழவேண்டியது
mina l-yami
مِّنَ ٱلْيَمِّ
from the sea
கடலில் இருந்து
mā ghashiyahum
مَا غَشِيَهُمْ
what covered them
எது/ சூழ்ந்தது/அவர்களை

Transliteration:

Fa atba'ahum Fir'awnu bijunoodihee faghashiyahum minal yammmi maa ghashi yahum (QS. Ṭāʾ Hāʾ:78)

English Sahih International:

So Pharaoh pursued them with his soldiers, and there covered them from the sea that which covered them, (QS. Taha, Ayah ௭௮)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறே மூஸா நபி இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிடவே) ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின்பற்றிச் சென்றான். (சென்ற அவன் கடலில் அவர்களைப் பின்பற்றிச் செல்லவே) கடலும் (இவர்களில் ஒருவரும் தப்பாது) இவர்களை மூழ்கடிக்க வேண்டியவாறு மூழ்கடித்து விட்டது. (ஸூரத்து தாஹா, வசனம் ௭௮)

Jan Trust Foundation

மேலும் ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின் தொடர்ந்தான்; ஆனால் கடல் அவர்களை முற்றாக மூழ்கடித்து விட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்ன் தனது படைகளைக் கொண்டு அவர்களை (இஸ்ரவேலர்களை) பின்தொடர்ந்தான். ஆகவே, அவர்களை (ஃபிர்அவ்னையும் அவனுடைய படைகளையும்) சூழவேண்டியது கடலில் இருந்து அவர்களை சூழ்ந்து கொண்டது.