Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௭௬

Qur'an Surah Taha Verse 76

ஸூரத்து தாஹா [௨௦]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

جَنّٰتُ عَدْنٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ۗوَذٰلِكَ جَزٰۤؤُا مَنْ تَزَكّٰى ࣖ (طه : ٢٠)

jannātu
جَنَّٰتُ
Gardens
சொர்க்கங்கள்
ʿadnin
عَدْنٍ
(of) Eden
அத்ன்
tajrī
تَجْرِى
flows
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
from underneath them
அவற்றின் கீழே
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
the rivers
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
abiding forever
அவர்கள் நிரந்தரமானவர்களாக
fīhā
فِيهَاۚ
in it
அதில்
wadhālika
وَذَٰلِكَ
And that
இதுதான்
jazāu
جَزَآءُ
(is) the reward
கூலியாகும்
man tazakkā
مَن تَزَكَّىٰ
(for him) who purifies himself
எவர்/பரிசுத்தமானார்

Transliteration:

Jannaatu 'Adnin tajree min tahtihal anhaaru khaalideena feehaa; wa zaalika jazaaa'ua man tazakka (QS. Ṭāʾ Hāʾ:76)

English Sahih International:

Gardens of perpetual residence beneath which rivers flow, wherein they abide eternally. And that is the reward of one who purifies himself. (QS. Taha, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

(மறுமையிலோ அவர்களுக்கு) "அத்ன்" என்ற நிலையான சுவனபதிகள் உள்ளன. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இதுதான் பரிசுத்தவான்களுடைய கூலியாகும். (ஸூரத்து தாஹா, வசனம் ௭௬)

Jan Trust Foundation

(அத்தகையவர்க்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர்; இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதன் சொர்க்கங்கள் (அவர்களுக்கு உண்டு). அவற்றின் கீழே நதிகள் ஓடும். அதில் அவர்கள் நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். இதுதான் பரிசுத்தமானவருடைய கூலியாகும்.