Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௭௪

Qur'an Surah Taha Verse 74

ஸூரத்து தாஹா [௨௦]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهٗ مَنْ يَّأْتِ رَبَّهٗ مُجْرِمًا فَاِنَّ لَهٗ جَهَنَّمَ ۗ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰى (طه : ٢٠)

innahu
إِنَّهُۥ
Indeed he
நிச்சயமாக விஷயமாவது
man
مَن
who
எவன்
yati
يَأْتِ
comes
வருகிறானோ
rabbahu
رَبَّهُۥ
(to) his Lord
தன் இறைவனிடம்
muj'riman
مُجْرِمًا
(as) a criminal
பாவியாக
fa-inna
فَإِنَّ
then indeed
நிச்சயமாக
lahu
لَهُۥ
for him
அவனுக்கு
jahannama
جَهَنَّمَ
(is) Hell
நரகம்தான்
lā yamūtu
لَا يَمُوتُ
Not he will die
அவன் மரணிக்க மாட்டான்
fīhā
فِيهَا
in it
அதில்
walā yaḥyā
وَلَا يَحْيَىٰ
and not live
வாழவும் மாட்டான்

Transliteration:

Innahoo mai yaati Rabbahoo mujriman fa inna lahoo Jahannama laa yamotu feehaa wa laa yahyaa (QS. Ṭāʾ Hāʾ:74)

English Sahih International:

Indeed, whoever comes to his Lord as a criminal – indeed, for him is Hell; he will neither die therein nor live. (QS. Taha, Ayah ௭௪)

Abdul Hameed Baqavi:

உண்மையாகவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகின்றானோ அவனுக்கு நிச்சயமாக நரகம்தான் கூலியாகும். அதில் அவன் சாகவும் மாட்டான்; (சுகத்துடன்) வாழவும் மாட்டான். (வேதனையை அனுபவித்துக் கொண்டு குற்றுயிராகவே கிடப்பான்.) (ஸூரத்து தாஹா, வசனம் ௭௪)

Jan Trust Foundation

நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது; அதில் அவன் மரணிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக விஷயமாவது, எவன் தன் இறைவனிடம் பாவியாக வருகிறானோ நிச்சயமாக அவனுக்கு நரகம்தான். அதில் அவன் மரணிக்கவும் மாட்டான். (நிம்மதியாக) வாழவும் மாட்டான்.