குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௭௩
Qur'an Surah Taha Verse 73
ஸூரத்து தாஹா [௨௦]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّآ اٰمَنَّا بِرَبِّنَا لِيَغْفِرَ لَنَا خَطٰيٰنَا وَمَآ اَكْرَهْتَنَا عَلَيْهِ مِنَ السِّحْرِۗ وَاللّٰهُ خَيْرٌ وَّاَبْقٰى (طه : ٢٠)
- innā
- إِنَّآ
- Indeed [we]
- நிச்சயமாக நாங்கள்
- āmannā
- ءَامَنَّا
- we believe
- நம்பிக்கை கொண்டோம்
- birabbinā
- بِرَبِّنَا
- in our Lord
- எங்கள் இறைவனை
- liyaghfira
- لِيَغْفِرَ
- that He may forgive
- அவன் மன்னிப்பதற்காக
- lanā
- لَنَا
- for us
- எங்களுக்கு
- khaṭāyānā
- خَطَٰيَٰنَا
- our sins
- எங்கள் பாவங்களை
- wamā akrahtanā
- وَمَآ أَكْرَهْتَنَا
- and what you compelled us
- இன்னும் எது/நீ எங்களை நிர்ப்பந்தித்தாய்
- ʿalayhi
- عَلَيْهِ
- on it
- அதை செய்வதற்கு
- mina l-siḥ'ri
- مِنَ ٱلسِّحْرِۗ
- of the magic
- சூனியத்தில்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்தான்
- khayrun
- خَيْرٌ
- (is) Best
- மிகச் சிறந்தவன்
- wa-abqā
- وَأَبْقَىٰٓ
- and Ever Lasting"
- மிக நிரந்தரமானவன்
Transliteration:
Innaaa aamannaa bi Rabbinaa liyaghfira lanaa khataayaanaa wa maaa akrahtanaa 'alaihi minas sihr; wallaahu khairunw waabqaa(QS. Ṭāʾ Hāʾ:73)
English Sahih International:
Indeed, we have believed in our Lord that He may forgive us our sins and what you compelled us [to do] of magic. And Allah is better and more enduring." (QS. Taha, Ayah ௭௩)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாங்கள் (மெய்யான) எங்கள் இறைவனையே நம்பிக்கை கொள்வோம். எங்களுடைய குற்றங்களையும் உன்னுடைய நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ்தான் (உன்னைவிட) மிக்க மேலானவனும், என்றும் நிலைத்திருப்பவனும் ஆவான்" என்று கூறினார்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௭௩)
Jan Trust Foundation
“எங்களின் தவறுகளையும், எங்களை நீ கட்டாயப் படுத்தியதினால் (நாங்கள் செய்ய நேர்ந்த) சூனியத்தையும், எங்களுக்கு மன்னிப்பதற்காக எங்கள் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும், அல்லாஹ் தான் மிக்க மேலானவனாகவும், (என்றும்) நிலைத்திருப்பவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனை நம்பிக்கை கொண்டோம், எங்களுக்கு எங்கள் பாவங்களையும் சூனியத்தில் எதை செய்வதற்கு நீ எங்களை நிர்ப்பந்தித்தாயோ அதையும் அவன் மன்னிப்பதற்காக. அல்லாஹ்தான் (நற்கூலி கொடுப்பதில்) மிகச் சிறந்தவன். (தண்டிப்பதில்) மிக நிரந்தரமானவன்.