Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௭௨

Qur'an Surah Taha Verse 72

ஸூரத்து தாஹா [௨௦]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا لَنْ نُّؤْثِرَكَ عَلٰى مَا جَاۤءَنَا مِنَ الْبَيِّنٰتِ وَالَّذِيْ فَطَرَنَا فَاقْضِ مَآ اَنْتَ قَاضٍۗ اِنَّمَا تَقْضِيْ هٰذِهِ الْحَيٰوةَ الدُّنْيَا ۗ (طه : ٢٠)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
lan nu'thiraka
لَن نُّؤْثِرَكَ
"Never we will prefer you
நாம் உம்மை தேர்ந்தெடுக்க மாட்டோம்
ʿalā mā jāanā
عَلَىٰ مَا جَآءَنَا
over what has come to us
எங்களிடம் வந்ததை விட
mina l-bayināti
مِنَ ٱلْبَيِّنَٰتِ
of the clear proofs
தெளிவான அத்தாட்சிகளில் இருந்து
wa-alladhī faṭaranā
وَٱلَّذِى فَطَرَنَاۖ
and the One Who created us
எங்களைப் படைத்தவனை விட
fa-iq'ḍi
فَٱقْضِ
So decree
ஆகவே நீ செய்
mā anta
مَآ أَنتَ
whatever you
எதை/நீ
qāḍin
قَاضٍۖ
(are) decreeing
செய்பவனாக இருக்கிறாயோ
innamā taqḍī
إِنَّمَا تَقْضِى
Only you can decree
நீ செய்வதெல்லாம்
hādhihi
هَٰذِهِ
(for) this
இந்த
l-ḥayata l-dun'yā
ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَآ
life (of) the world
உலக வாழ்க்கையில்தான்

Transliteration:

Qaaloo lan nu'siraka 'alaa maa jaaa'anaa minal baiyinaati wallazee fataranaa faqdi maaa anta qaad; innamaa taqdee haazihil hayaatad dunyaa (QS. Ṭāʾ Hāʾ:72)

English Sahih International:

They said, "Never will we prefer you over what has come to us of clear proofs and [over] He who created us. So decree whatever you are to decree. You can only decree for this worldly life. (QS. Taha, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ செய்துகொள். நீ செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான். (ஸூரத்து தாஹா, வசனம் ௭௨)

Jan Trust Foundation

(மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) “எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்; ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்துகொள்; நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினார்கள்: உம்மை நாம் அறவே தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே, நீ எதை செய்பவனாக இருக்கிறாயோ அதை நீ செய்! நீ செய்வதெல்லாம் இந்த உலக வாழ்க்கையில் தான். (எங்களது மறுமையை நீ ஒன்றும் செய்துவிட முடியாது.)