Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௭௧

Qur'an Surah Taha Verse 71

ஸூரத்து தாஹா [௨௦]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْۗ اِنَّهٗ لَكَبِيْرُكُمُ الَّذِيْ عَلَّمَكُمُ السِّحْرَۚ فَلَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَنَّكُمْ فِيْ جُذُوْعِ النَّخْلِۖ وَلَتَعْلَمُنَّ اَيُّنَآ اَشَدُّ عَذَابًا وَّاَبْقٰى (طه : ٢٠)

qāla
قَالَ
He said
கூறினான்
āmantum
ءَامَنتُمْ
"You believe
நம்பிக்கை கொண்டீர்களா?
lahu
لَهُۥ
[to] him
அவரை
qabla
قَبْلَ
before
முன்னர்
an ādhana
أَنْ ءَاذَنَ
[that] I gave permission
நான் அனுமதியளிப்பதற்கு
lakum
لَكُمْۖ
to you
உங்களுக்கு
innahu
إِنَّهُۥ
Indeed he
நிச்சயமாக அவர்
lakabīrukumu
لَكَبِيرُكُمُ
(is) your chief
உங்கள் பெரியவர்
alladhī ʿallamakumu
ٱلَّذِى عَلَّمَكُمُ
the one who taught you
அவர் உங்களுக்கு கற்றுக்கொடுத்தார்
l-siḥ'ra
ٱلسِّحْرَۖ
the magic
சூனியத்தை
fala-uqaṭṭiʿanna
فَلَأُقَطِّعَنَّ
So surely I will cut off
ஆகவே, நிச்சயமாக வெட்டுவேன்
aydiyakum
أَيْدِيَكُمْ
your hands
உங்கள் கைகளை
wa-arjulakum
وَأَرْجُلَكُم
and your feet
உங்கள் கால்களை
min khilāfin
مِّنْ خِلَٰفٍ
of opposite sides
மாற்றமாக
wala-uṣallibannakum
وَلَأُصَلِّبَنَّكُمْ
and surely I will crucify you
உங்களை நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன்
fī judhūʿi
فِى جُذُوعِ
on (the) trunks
பலகைகளில்
l-nakhli
ٱلنَّخْلِ
(of) date-palms
பேரித்த மரத்தின்
walataʿlamunna
وَلَتَعْلَمُنَّ
and surely you will know
நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
ayyunā
أَيُّنَآ
which of us
எங்களில் யார்
ashaddu
أَشَدُّ
(is) more severe
கடினமானவர்
ʿadhāban
عَذَابًا
(in) punishment
வேதனை செய்வதில்
wa-abqā
وَأَبْقَىٰ
and more lasting"
நிரந்தரமானவர்

Transliteration:

Qaala aamantum lahoo qabla an aazana lakum; innahoo lakabeerukumul lazee 'allama kumus sihra fala uqatti'anna aidiyakum wa arjulakum min khilaafinw wa la usallibannakum fee juzoo'in nakhli wa lata'lamunna aiyunaaa ashaddu 'azaabanw wa abqaa (QS. Ṭāʾ Hāʾ:71)

English Sahih International:

[Pharaoh] said, "You believed him [i.e., Moses] before I gave you permission. Indeed, he is your leader who has taught you magic. So I will surely cut off your hands and your feet on opposite sides, and I will crucify you on the trunks of palm trees, and you will surely know which of us is more severe in [giving] punishment and more enduring." (QS. Taha, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

(இதனைக் கண்ட ஃபிர்அவ்ன்) "நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தாம் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களுடைய தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களுடைய மாறு கை, மாறு காலை வெட்டிப் பேரீச்ச மரத்தின் வேர்களில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி விடுவேன். நிலையான வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார் என்பதையும் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று கூறினான். (ஸூரத்து தாஹா, வசனம் ௭௧)

Jan Trust Foundation

“நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார், அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(ஃபிர்அவ்ன்) கூறினான்: நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னர் அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்கள் பெரியவர் ஆவார். ஆகவே, நிச்சயமாக உங்களை மாறுகை மாறுகால் வெட்டி பேரித்த மரத்தின் பலகைகளில் உங்களை நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன். எங்களில் யார் வேதனை செய்வதில் கடினமானவர், (அதில்) நிரந்தரமானவர் (யாருடைய வேதனை கடினமானது, நிரந்தரமானது) என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.