Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௭௦

Qur'an Surah Taha Verse 70

ஸூரத்து தாஹா [௨௦]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْٓا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰى (طه : ٢٠)

fa-ul'qiya
فَأُلْقِىَ
So were thrown down
ஆக, விழுந்தனர்
l-saḥaratu
ٱلسَّحَرَةُ
the magicians
சூனியக்காரர்கள்
sujjadan
سُجَّدًا
prostrating
சிரம்பணிந்தவர்களாக
qālū
قَالُوٓا۟
They said
கூறினார்கள்
āmannā
ءَامَنَّا
"We believe
நம்பிக்கை கொண்டோம்
birabbi
بِرَبِّ
in (the) Lord
இறைவனைக்கொண்டு
hārūna
هَٰرُونَ
(of) Harun
ஹாரூன்
wamūsā
وَمُوسَىٰ
and Musa"
இன்னும் மூஸாவுடைய

Transliteration:

Fa ulqiyas saharatu sujjadan qaalooo aamannaa bi Rabbi Haaroona wa Moosa (QS. Ṭāʾ Hāʾ:70)

English Sahih International:

So the magicians fell down in prostration. They said, "We have believed in the Lord of Aaron and Moses." (QS. Taha, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

(மூஸா தன் தடியை எறியவே அது பெரியதொரு பாம்பாகி, அவர்கள் செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்கி விட்டது. இதனைக் கண்ணுற்ற) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக வீழ்த்தப்பட்டு "நாங்களும் மூஸா, ஹாரூன் (ஆகிய இவ்விருவருடைய) இறைவனை நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினார்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௭௦)

Jan Trust Foundation

(மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, சூனியக்காரர்கள் சிரம்பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்தனர். ஹாரூன் இன்னும் மூஸாவுடைய இறைவனைக் கொண்டு நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று கூறினார்கள்.