Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௬௬

Qur'an Surah Taha Verse 66

ஸூரத்து தாஹா [௨௦]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ بَلْ اَلْقُوْاۚ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى (طه : ٢٠)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
bal
بَلْ
"Nay
மாறாக
alqū
أَلْقُوا۟ۖ
you throw"
நீங்கள் எறியுங்கள்
fa-idhā
فَإِذَا
Then behold!
ஆக, அப்போது
ḥibāluhum
حِبَالُهُمْ
Their ropes
அவர்களுடைய கயிர்களும்
waʿiṣiyyuhum
وَعِصِيُّهُمْ
and their staffs
அவர்களுடைய தடிகளும்
yukhayyalu
يُخَيَّلُ
seemed
தோற்றமளிக்கப்பட்டது
ilayhi
إِلَيْهِ
to him
அவருக்கு
min siḥ'rihim
مِن سِحْرِهِمْ
by their magic
அவர்களுடைய சூனியத்தால்
annahā
أَنَّهَا
that they
அவை
tasʿā
تَسْعَىٰ
(were) moving
ஓடுவதாக

Transliteration:

Qaala bal alqoo fa izaa hibaaluhum wa 'isiyyuhum yuhaiyalu ilaihi min sihrihim annahaa tas'aa (QS. Ṭāʾ Hāʾ:66)

English Sahih International:

He said, "Rather, you throw." And suddenly their ropes and staffs seemed to him from their magic that they were moving [like snakes]. (QS. Taha, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "நீங்களே (முதலாவதாக) எறியுங்கள்" என்று கூறினார். (அவர்கள் எறியவே எறிந்த) அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவது போல் இவருக்குத் தோன்றின. (ஸூரத்து தாஹா, வசனம் ௬௬)

Jan Trust Foundation

அதற்கவர்| “அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: “மாறாக நீங்கள் எறியுங்கள். ஆக, (அவர்கள் எறிந்த)அப்போது அவர்களுடைய கயிர்களும் அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தால் அவருக்கு (-மூஸாவுக்கு) அவை ஓடுவதாக தோற்றமளிக்கப்பட்டது.