குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௬௩
Qur'an Surah Taha Verse 63
ஸூரத்து தாஹா [௨௦]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْٓا اِنْ هٰذٰنِ لَسٰحِرَانِ يُرِيْدَانِ اَنْ يُّخْرِجٰكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهِمَا وَيَذْهَبَا بِطَرِيْقَتِكُمُ الْمُثْلٰى (طه : ٢٠)
- qālū
- قَالُوٓا۟
- They said
- அவர்கள் கூறினார்கள்
- in hādhāni
- إِنْ هَٰذَٰنِ
- "Indeed these two
- நிச்சயமாக இந்த இருவரும்
- lasāḥirāni
- لَسَٰحِرَٰنِ
- [two] magicians
- சூனியக்காரர்கள்
- yurīdāni
- يُرِيدَانِ
- they intend
- அவ்விருவரும் நாடுகின்றனர்
- an yukh'rijākum
- أَن يُخْرِجَاكُم
- that they drive you out
- உங்களை வெளியேற்றுவதற்கு(ம்)
- min arḍikum
- مِّنْ أَرْضِكُم
- of your land
- உங்கள் பூமியிலிருந்து
- bisiḥ'rihimā
- بِسِحْرِهِمَا
- with their magic
- தங்கள் சூனியத்தைக் கொண்டு
- wayadhhabā
- وَيَذْهَبَا
- and do away
- இன்னும் அவ்விருவரும் மிகைத்து விடுவதற்கு
- biṭarīqatikumu
- بِطَرِيقَتِكُمُ
- with your way
- உங்கள்தலைவர்களை
- l-muth'lā
- ٱلْمُثْلَىٰ
- the exemplary
- சிறந்த
Transliteration:
Qaalooo in haaazaani lasaahiraani yureedaani ai yukhrijaakum min ardikum bisihrihimaa wa yazhabaa bitareeqatikumul muslaa(QS. Ṭāʾ Hāʾ:63)
English Sahih International:
They said, "Indeed, these are two magicians who want to drive you out of your land with their magic and do away with your most exemplary way [i.e., religion or tradition]. (QS. Taha, Ayah ௬௩)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (மக்களை நோக்கி) "நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தங்களுடைய சூனியத்தின் மூலம் உங்களை உங்களுடைய இவ்வூரை விட்டு வெளியேற்றி விடவும், உங்களுடைய மேலான மார்க்கத்தை அழித்து விடவும் விரும்புகிறார்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௬௩)
Jan Trust Foundation
(சூனியக்காரர்கள் மக்களை நோக்கி|) “நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தம்மிருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்கப்) பாதையைப் போக்கிவிடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இந்த இருவரும் சூனியக்காரர்கள். உங்கள் பூமியிலிருந்து உங்களை (அவ்விருவரும்) தங்கள் சூனியத்தைக் கொண்டு வெளியேற்றுவதற்கும் உங்கள் சிறந்த தலைவர்களை அவ்விருவரும் மிகைத்து விடுவதற்கும் அவ்விருவரும் நாடுகின்றனர்.”