குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௬௧
Qur'an Surah Taha Verse 61
ஸூரத்து தாஹா [௨௦]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ لَهُمْ مُّوْسٰى وَيْلَكُمْ لَا تَفْتَرُوْا عَلَى اللّٰهِ كَذِبًا فَيُسْحِتَكُمْ بِعَذَابٍۚ وَقَدْ خَابَ مَنِ افْتَرٰى (طه : ٢٠)
- qāla
- قَالَ
- Said
- கூறினார்
- lahum
- لَهُم
- to them
- அவர்களுக்கு
- mūsā
- مُّوسَىٰ
- Musa
- மூஸா
- waylakum
- وَيْلَكُمْ
- "Woe to you!
- உங்களுக்கு கேடுதான்
- lā taftarū
- لَا تَفْتَرُوا۟
- (Do) not invent
- கற்பனை செய்யாதீர்கள்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- against Allah
- அல்லாஹ்வின் மீது
- kadhiban
- كَذِبًا
- a lie
- பொய்யை
- fayus'ḥitakum
- فَيُسْحِتَكُم
- lest He will destroy you
- உங்களை அழித்து விடுவான்
- biʿadhābin
- بِعَذَابٍۖ
- with a punishment
- வேதனையைக் கொண்டு
- waqad
- وَقَدْ
- And verily
- திட்டமாக
- khāba mani
- خَابَ مَنِ
- he failed who
- நஷ்டமடைந்து விட்டான்/எவன்
- if'tarā
- ٱفْتَرَىٰ
- invented"
- கற்பனை செய்தான்
Transliteration:
Qaala lahum Moosaa wailakum laa taftaroo 'alal laahi kaziban fa yus hitakum bi 'azaab, wa qad khaaba manif taraa(QS. Ṭāʾ Hāʾ:61)
English Sahih International:
Moses said to them [i.e., the magicians summoned by Pharaoh], "Woe to you! Do not invent a lie against Allah or He will exterminate you with a punishment; and he has failed who invents [such falsehood]." (QS. Taha, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
மூஸா (அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி) "உங்களுக்கென்ன கேடு? அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய்யைக் கற்பனை செய்து கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால்) அவன் (தன்) வேதனையைக்கொண்டு உங்களை அழித்துவிடுவான். பொய் சொன்னவர்களெல்லாம் அழிந்தே போனார்கள்" என்று கூறினார். (ஸூரத்து தாஹா, வசனம் ௬௧)
Jan Trust Foundation
(அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு மூஸா கூறினார்: “உங்களுக்கு கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை கற்பனை செய்யாதீர்கள்! அவன் உங்களை வேதனையைக் கொண்டு அழித்து விடுவான். திட்டமாக (பொய்யை) கற்பனை செய்தவன் நஷ்டமடைந்து விட்டான்.