Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௫௫

Qur'an Surah Taha Verse 55

ஸூரத்து தாஹா [௨௦]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ مِنْهَا خَلَقْنٰكُمْ وَفِيْهَا نُعِيْدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرٰى (طه : ٢٠)

min'hā
مِنْهَا
From it
அதிலிருந்துதான்
khalaqnākum
خَلَقْنَٰكُمْ
We created you
உங்களைப் படைத்தோம்
wafīhā
وَفِيهَا
and in it
இன்னும் அதில்தான்
nuʿīdukum
نُعِيدُكُمْ
We will return you
மீட்டுக் கொண்டுவருவோம் உங்களை
wamin'hā
وَمِنْهَا
and from it
இன்னும் அதிலிருந்துதான்
nukh'rijukum
نُخْرِجُكُمْ
We will bring you out
வெளியேற்றுவோம்
tāratan
تَارَةً
time
முறை
ukh'rā
أُخْرَىٰ
another
மற்றொரு

Transliteration:

Minhaa khalaqnaakum wa feehaa nu'eedukum wa minhaa nukhrijukum taaratan ukhraa (QS. Ṭāʾ Hāʾ:55)

English Sahih International:

From it [i.e., the earth] We created you, and into it We will return you, and from it We will extract you another time. (QS. Taha, Ayah ௫௫)

Abdul Hameed Baqavi:

பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர், அதிலேயே நாம் உங்களைச் சேர்த்துவிடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே நாம் உங்களை வெளிப்படுத்துவோம்." (இவ்வாறு ஃபிர்அவ்னிடம் மூஸா கூறினார்.) (ஸூரத்து தாஹா, வசனம் ௫௫)

Jan Trust Foundation

இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதிலிருந்துதான் உங்களைப் படைத்தோம். அதில்தான் உங்களை மீட்டுக் கொண்டுவருவோம். அதிலிருந்துதான் மற்றொருமுறை உங்களை (உயிருள்ளவர்களாக) வெளியேற்றுவோம்.