Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௪௦

Qur'an Surah Taha Verse 40

ஸூரத்து தாஹா [௨௦]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ تَمْشِيْٓ اُخْتُكَ فَتَقُوْلُ هَلْ اَدُلُّكُمْ عَلٰى مَنْ يَّكْفُلُهٗ ۗفَرَجَعْنٰكَ اِلٰٓى اُمِّكَ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ەۗ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنٰكَ مِنَ الْغَمِّ وَفَتَنّٰكَ فُتُوْنًا ەۗ فَلَبِثْتَ سِنِيْنَ فِيْٓ اَهْلِ مَدْيَنَ ەۙ ثُمَّ جِئْتَ عَلٰى قَدَرٍ يّٰمُوْسٰى (طه : ٢٠)

idh tamshī
إِذْ تَمْشِىٓ
When was going
நடந்து சென்றபோது
ukh'tuka
أُخْتُكَ
your sister
உமது சகோதரி
fataqūlu
فَتَقُولُ
and she said
கூறினாள்
hal adullukum
هَلْ أَدُلُّكُمْ
"Shall I show you
நான் உங்களுக்கு அறிவிக்கவா?
ʿalā man yakfuluhu
عَلَىٰ مَن يَكْفُلُهُۥۖ
[to] (one) who will nurse and rear him'?"
அவரை பொறுப்பேற்பவரை
farajaʿnāka
فَرَجَعْنَٰكَ
So We returned you
உம்மை திரும்பக் கொண்டு வந்தோம்
ilā ummika
إِلَىٰٓ أُمِّكَ
to your mother
உமது தாயிடமே
kay taqarra
كَىْ تَقَرَّ
that may be cooled
குளிர்வதற்காக
ʿaynuhā
عَيْنُهَا
her eyes
அவளது கண்
walā taḥzana
وَلَا تَحْزَنَۚ
and not she grieves
இன்னும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காக
waqatalta
وَقَتَلْتَ
And you killed
நீர் கொன்று விட்டீர்
nafsan
نَفْسًا
a man
ஓர் உயிரை
fanajjaynāka
فَنَجَّيْنَٰكَ
but We saved you
உம்மை நாம் பாதுகாத்தோம்
mina l-ghami
مِنَ ٱلْغَمِّ
from the distress
அந்த துக்கத்திலிருந்து
wafatannāka
وَفَتَنَّٰكَ
and We tried you
இன்னும் உம்மை நாம் சோதித்தோம்
futūnan
فُتُونًاۚ
(with) a trial
பல சோதனைகளில்
falabith'ta
فَلَبِثْتَ
Then you remained
ஆக, நீர் தங்கினீர்
sinīna
سِنِينَ
(some) years
பல ஆண்டுகள்
fī ahli
فِىٓ أَهْلِ
with (the) people
வாசிகளிடம்
madyana
مَدْيَنَ
(of) Madyan
மத்யன்
thumma
ثُمَّ
Then
பிறகு
ji'ta
جِئْتَ
you came
நீர் அடைந்தீர்
ʿalā qadarin
عَلَىٰ قَدَرٍ
at the decreed (time)
ஒரு குறிப்பிட்ட நேரத்தை
yāmūsā
يَٰمُوسَىٰ
O Musa!
மூஸாவே!

Transliteration:

Iz tamsheee ukhtuka fataqoolu hal adullukum 'alaa mai yakfuluhoo faraja 'naaka ilaaa ummika kai taqarra 'ainuhaa wa laa tahzan; wa qatalta nafsan fanajjainaaka minal ghammi wa fatannaaka futoonaa; falabista sineena feee ahli Madyana summa ji'ta 'alaa qadariny yaa Moosa (QS. Ṭāʾ Hāʾ:40)

English Sahih International:

[And We favored you] when your sister went and said, 'Shall I direct you to someone who will be responsible for him?' So We restored you to your mother that she might be content and not grieve. And you killed someone, but We saved you from retaliation and tried you with a [severe] trial. And you remained [some] years among the people of Madyan. Then you came [here] at the decreed time, O Moses. (QS. Taha, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

உங்களுடைய சகோதரி சென்று (உங்களை எடுத்தவர் களிடம்) "இக்குழந்தைக்கு(ப் பால் கொடுக்கும்) பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடியவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று கூறும்படிச் செய்து, உங்கள் தாய் கவலைப்படாது அவளின் கண் குளிர்ந்திருக்கும் பொருட்டு, உங்கள் தாயிடமே உங்களைக் கொண்டு வந்(து சேர்த்)தோம். பின்னர், நீங்கள் ஓர் மனிதரைக் கொலை செய்துவிட்டு (அதற்காக) நீங்கள் கொண்ட கவலையில் இருந்து உங்களைக் காப்பாற்றினோம். (இவ்வாறு) உங்களைப் பல வகைகளிலும் சோதித்த பின்னர், மதியன்வாசிகளிடமும் நீங்கள் பல வருடங்கள் தங்கியிருந்தீர்கள். மூஸாவே! இதற்குப் பின்னர்தான் நீங்கள் (நம் தூதுக்குரிய) தக்க பக்குவமடைந்தீர்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௪௦)

Jan Trust Foundation

(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டாள்; ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும்; அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம்; பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமது சகோதரி நடந்துசென்றபோது, “அவரை பொறுப்பேற்பவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று கூறினாள். உம்மை உமது தாயிடமே நாம் திரும்பக் கொண்டு வந்தோம், அவளது கண் குளிர்வதற்காகவும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும். நீர் ஓர் உயிரை கொன்று விட்டீர். அந்த துக்கத்திலிருந்து உம்மை நாம் பாதுகாத்தோம். பல சோதனைகளில் நாம் உம்மை சோதித்தோம். ஆக, மத்யன் வாசிகளிடம் பல ஆண்டுகள் நீர் தங்கினீர். பிறகு (உம்மை தூதராக அனுப்புவதற்குரிய) ஒரு குறிப்பிட்ட நேரத்தை மூஸாவே! நீர் அடைந்தீர்.