Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௩௯

Qur'an Surah Taha Verse 39

ஸூரத்து தாஹா [௨௦]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَنِ اقْذِفِيْهِ فِى التَّابُوْتِ فَاقْذِفِيْهِ فِى الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّ لِّيْ وَعَدُوٌّ لَّهٗ ۗوَاَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّيْ ەۚ وَلِتُصْنَعَ عَلٰى عَيْنِيْ ۘ (طه : ٢٠)

ani iq'dhifīhi
أَنِ ٱقْذِفِيهِ
"That cast him
அதாவது அவரை போடுவீராக
fī l-tābūti
فِى ٱلتَّابُوتِ
in the chest
பேழையில்
fa-iq'dhifīhi
فَٱقْذِفِيهِ
then cast it
அதை போடுவீராக
fī l-yami
فِى ٱلْيَمِّ
in the river
கடலில்
falyul'qihi
فَلْيُلْقِهِ
then let cast it
அதை எறியும்
l-yamu
ٱلْيَمُّ
the river
கடல்
bil-sāḥili
بِٱلسَّاحِلِ
on the bank;
கரையில்
yakhudh'hu
يَأْخُذْهُ
will take him
அதை எடுப்பான்
ʿaduwwun
عَدُوٌّ
an enemy
எதிரி
لِّى
to Me
எனது
waʿaduwwun
وَعَدُوٌّ
and an enemy
இன்னும் எதிரி
lahu
لَّهُۥۚ
to him'"
அவரது
wa-alqaytu
وَأَلْقَيْتُ
And I cast
இன்னும் ஏற்படுத்தினேன்
ʿalayka
عَلَيْكَ
over you
உம்மீது
maḥabbatan
مَحَبَّةً
love
அன்பை
minnī
مِّنِّى
from Me
என் புறத்திலிருந்து
walituṣ'naʿa
وَلِتُصْنَعَ
and that you may be brought up
இன்னும் நீ பராமரிக்கப்படுவதற்காக
ʿalā ʿaynī
عَلَىٰ عَيْنِىٓ
under My Eye
என் கண்பார்வையில்

Transliteration:

Aniqzifeehi fit Taabooti faqzifeehi fil yammi fal yul qihil yammu bis saahili yaakhuzhu 'aduwwul lee wa 'aduwwul lah; wa alqaitu 'alaika mahabbatam minnee wa litusna'a 'alaa 'ainee (QS. Ṭāʾ Hāʾ:39)

English Sahih International:

[Saying], 'Cast him into the chest and cast it into the river, and the river will throw it onto the bank; there will take him an enemy to Me and an enemy to him.' And I bestowed upon you love from Me that you would be brought up under My eye [i.e., observation and care]. (QS. Taha, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

"(உங்களது இனத்தாரின் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். உங்களைப் பற்றி உங்கள் தாய் கவலை கொண்டாள். ஆகவே, உங்கள் தாயை நோக்கி) "உங்களைப் பேழையில் வைத்து கடலில் எறிந்துவிடுங்கள். அக்கடல் அதனைக் கரையில் சேர்த்துவிடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதனை எடுத்துக்கொள்வான் என்று (உங்கள் தாய்க்கு அறிவித்தோ)ம். நீங்கள் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு) உங்கள்மீது என் அன்பை சொரிந்(து உங்களைப் பார்ப்பவர்கள் விரும்பும்படிச் செய்)தோம். (ஸூரத்து தாஹா, வசனம் ௩௯)

Jan Trust Foundation

அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும்; அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்). மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதாவது, அவரை (-உமது மகனை) பேழையில் போடுவீராக! பிறகு அதை (நைல்) கடலில் போடுவீராக! கடல் அதை கரையில் எறியும். எனக்கும் எதிரியானவன், இன்னும் அவருக்கும் எதிரியானவன் அதை எடுப்பான். இன்னும், உம்மீது அன்பை என் புறத்திலிருந்து ஏற்படுத்தினேன். இன்னும் என் கண்பார்வையில் நீ பராமரிக்கப்படுவதற்காக (உன் மீது பிறர் உள்ளத்தில் அன்பை ஏற்படுத்தினேன்).