Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௩௫

Qur'an Surah Taha Verse 135

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ كُلٌّ مُّتَرَبِّصٌ فَتَرَبَّصُوْاۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ اَصْحٰبُ الصِّرَاطِ السَّوِيِّ وَمَنِ اهْتَدٰى ࣖ ۔ (طه : ٢٠)

qul
قُلْ
Say
கூறுவீராக
kullun
كُلٌّ
"Each
ஒவ்வொருவரும்
mutarabbiṣun
مُّتَرَبِّصٌ
(is) waiting;
எதிர்பார்ப்பவர்களே
fatarabbaṣū
فَتَرَبَّصُوا۟ۖ
so await
ஆகவே எதிர்பாருங்கள்
fasataʿlamūna
فَسَتَعْلَمُونَ
Then you will know
நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
man
مَنْ
who
யார்
aṣḥābu l-ṣirāṭi
أَصْحَٰبُ ٱلصِّرَٰطِ
(are the) companions (of) the way
பாதையுடையவர்கள்
l-sawiyi
ٱلسَّوِىِّ
[the] even
நேரான
wamani
وَمَنِ
and who
யார்
ih'tadā
ٱهْتَدَىٰ
is guided"
நேர்வழி பெற்றவர்

Transliteration:

Qul kullum mutarabbisun fatarabbasoo fasta'lamoona man Ashaabus Siraatis Sawiyyi wa manih tadaa (QS. Ṭāʾ Hāʾ:135)

English Sahih International:

Say, "Each [of us] is waiting; so wait. For you will know who are the companions of the sound path and who is guided." (QS. Taha, Ayah ௧௩௫)

Abdul Hameed Baqavi:

(நபியே! நீங்கள்) கூறுங்கள்: "ஒவ்வொருவரும் (தங்களுக்கு வர வேண்டியதை) எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே, நீங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருங்கள். நேரான வழியில் இருப்பவர் யார்? (தவறான வழியில் இருப்பவர் யார்?) நேரான வழியை அடைந்துவிட்டவர்கள் யார்? என்பதைப் பின்னர் நீங்கள் நிச்சயமாக நன்கறிந்து கொள்வீர்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௩௫)

Jan Trust Foundation

(நபியே! “இறுதி நாளை) அனைவரும் எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள், நேரான வழியை உடையவர் யார்? நேர் வழி அடைந்து விட்டவர்கள் யார்? என்பதையும் திடமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! (நீங்கள்) ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பவர்களே! ஆகவே, எதிர்பாருங்கள். நேரான பாதையுடையவர்கள் யார்? நேர்வழி பெற்றவர் யார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...