Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௩௪

Qur'an Surah Taha Verse 134

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ اَنَّآ اَهْلَكْنٰهُمْ بِعَذَابٍ مِّنْ قَبْلِهٖ لَقَالُوْا رَبَّنَا لَوْلَآ اَرْسَلْتَ اِلَيْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰيٰتِكَ مِنْ قَبْلِ اَنْ نَّذِلَّ وَنَخْزٰى (طه : ٢٠)

walaw annā ahlaknāhum
وَلَوْ أَنَّآ أَهْلَكْنَٰهُم
And if We (had) destroyed them
இவர்களை நாம் அழித்திருந்தால்
biʿadhābin
بِعَذَابٍ
with a punishment
ஒரு வேதனையைக் கொண்டு
min qablihi
مِّن قَبْلِهِۦ
before him before him
இதற்கு முன்னரே
laqālū
لَقَالُوا۟
surely they (would) have said
கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
"Our Lord
எங்கள் இறைவா
lawlā arsalta
لَوْلَآ أَرْسَلْتَ
why not You sent
நீ அனுப்பி இருக்கக்கூடாதா?
ilaynā
إِلَيْنَا
to us
எங்களுக்கு
rasūlan
رَسُولًا
a Messenger
ஒரு தூதரை
fanattabiʿa
فَنَتَّبِعَ
so we (could) have followed
பின்பற்றி இருப்போமே
āyātika
ءَايَٰتِكَ
Your signs
உனது வசனங்களை
min qabli
مِن قَبْلِ
before before
முன்னர்
an nadhilla
أَن نَّذِلَّ
[that] we were humiliated
இழிவடைவதற்கும்
wanakhzā
وَنَخْزَىٰ
and disgraced"
கேவலப்படுவதற்கும்

Transliteration:

Wa law annaaa ahlaknaahum bi'azaabim min qablihee laqaaloo Rabbanaa law laaa arsalta ilainaa Rasoolan fanattabi's Aayaatika min qabli an nazilla wa nakhzaa (QS. Ṭāʾ Hāʾ:134)

English Sahih International:

And if We had destroyed them with a punishment before him, they would have said, "Our Lord, why did You not send to us a messenger so we could have followed Your verses [i.e., teachings] before we were humiliated and disgraced?" (QS. Taha, Ayah ௧௩௪)

Abdul Hameed Baqavi:

(நம்முடைய தூதராகிய) இவர் வருவதற்கு முன்னதாகவே நாம் அவர்களை வேதனை செய்தால் "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறு அனுப்பியிருந்தால்) நாங்கள் இந்த இழிவுக்கும் நிந்தனைக்கும் உள்ளாவதற்கு முன்னதாகவே உன்னுடைய வசனங்களைப் பின்பற்றியிருப்போம்" என்று கூறுவார்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௩௪)

Jan Trust Foundation

இன்னும் (நம் தூதர்) வருவதற்கு முன், நாம் இவர்களை வேதனை செய்து அழித்திருந்தால், அவர்கள், “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? அவ்வாறாயின் நாங்கள் சிறுமைப்படுவதற்கும், கேவலப்படுவதற்கும் முன் உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே” என்று கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதற்கு முன்னரே ஒரு வேதனையைக் கொண்டு இவர்களை நாம் அழித்திருந்தால், “எங்கள் இறைவா! எங்களுக்கு ஒரு தூதரை நீ அனுப்பி இருக்கக்கூடாதா? நாங்கள் இழிவடைவதற்கும் கேவலப்படுவதற்கும் முன்னர் உனது வசனங்களை பின்பற்றி இருப்போமே!” என்று கூறுவார்கள்.