Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௩௩

Qur'an Surah Taha Verse 133

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا لَوْلَا يَأْتِيْنَا بِاٰيَةٍ مِّنْ رَّبِّهٖۗ اَوَلَمْ تَأْتِهِمْ بَيِّنَةُ مَا فِى الصُّحُفِ الْاُولٰى (طه : ٢٠)

waqālū
وَقَالُوا۟
And they say
இவர்கள் கூறினார்கள்
lawlā yatīnā
لَوْلَا يَأْتِينَا
"Why not he brings us
நம்மிடம் கொண்டு வரமாட்டாரா
biāyatin
بِـَٔايَةٍ
a sign
ஓர் அத்தாட்சியை
min rabbihi
مِّن رَّبِّهِۦٓۚ
from his Lord?"
தன் இறைவனிடமிருந்து
awalam tatihim
أَوَلَمْ تَأْتِهِم
Has not come to them
அவர்களிடம் வரவில்லையா
bayyinatu
بَيِّنَةُ
evidence
தெளிவான சான்று
mā fī l-ṣuḥufi
مَا فِى ٱلصُّحُفِ
(of) what (was) in the Scriptures
வேதங்களில் உள்ள
l-ūlā
ٱلْأُولَىٰ
the former?
முந்திய

Transliteration:

Wa qaaloo law laa yaateenaa bi Aayatim mmir Rabbih; awalam taatihim baiyinatu maa fis suhufil oolaa (QS. Ṭāʾ Hāʾ:133)

English Sahih International:

And they say, "Why does he not bring us a sign from his Lord?" Has there not come to them evidence of what was in the former scriptures? (QS. Taha, Ayah ௧௩௩)

Abdul Hameed Baqavi:

("இறைவனின் தூதராகிய) அவர் தன் இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். முந்திய வேதங்களிலுள்ள தெளிவான முன்னறிக்கை அவர்களிடம் வரவில்லையா? (வந்தே இருக்கிறது.) (ஸூரத்து தாஹா, வசனம் ௧௩௩)

Jan Trust Foundation

“தம் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை ஏன் அவர் நம்மிடம் கொண்டு வரவில்லை?” என்று (நிராகரிப்போர்) கேட்கின்றனர்; முந்தைய வேதங்களில் உள்ள தெளிவான அத்தாட்சிகள் அவர்களுக்கு வரவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்கள் கூறினார்கள்: “இவர் (-முஹம்மது நபி) தன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரமாட்டாரா? என்று முந்திய வேதங்களில் உள்ள தெளிவான சான்று(கள்) அவர்களிடம் வரவில்லையா?