Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௩௧

Qur'an Surah Taha Verse 131

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖٓ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ەۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ ۗوَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى (طه : ٢٠)

walā tamuddanna
وَلَا تَمُدَّنَّ
And (do) not extend
நீர் திருப்பாதீர்
ʿaynayka
عَيْنَيْكَ
your eyes
உமது கண்களை
ilā mā mattaʿnā
إِلَىٰ مَا مَتَّعْنَا
towards what We have given for enjoyment
எவற்றின் பக்கம் இன்பமளித்தோம்
bihi
بِهِۦٓ
[with it]
அதன் மூலம்
azwājan
أَزْوَٰجًا
pairs
போன்றவர்கள்
min'hum
مِّنْهُمْ
of them
இவர்களை
zahrata
زَهْرَةَ
(the) splendor
அலங்காரமாக
l-ḥayati l-dun'yā
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا
(of) the life (of) the world
உலக வாழ்க்கையின்
linaftinahum
لِنَفْتِنَهُمْ
that We may test them
அவர்களை நாம் சோதிப்பதற்காக
fīhi
فِيهِۚ
in it
அதில்
wariz'qu
وَرِزْقُ
And (the) provision
அருட்கொடை
rabbika
رَبِّكَ
(of) your Lord
உமது இறைவனின்
khayrun
خَيْرٌ
(is) better
சிறந்தது
wa-abqā
وَأَبْقَىٰ
and more lasting
நிலையானது

Transliteration:

Wa laa tamuddanna 'ainaika ilaa ma matta'na biheee azwajam minhum zahratal hayaatid dunya linaftinahum feeh; wa rizqu Rabbika khairunw wa abqaa (QS. Ṭāʾ Hāʾ:131)

English Sahih International:

And do not extend your eyes toward that by which We have given enjoyment to [some] categories of them, [its being but] the splendor of worldly life by which We test them. And the provision of your Lord is better and more enduring. (QS. Taha, Ayah ௧௩௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்களில் சிலருக்கு சுகமனுபவிக்க நாம் கொடுத்து இருப்பவற்றின் பக்கம் நீங்கள் உங்களுடைய பார்வையைச் செலுத்தாதீர்கள். இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களே! அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் இவைகளை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.) ஆனால், உங்கள் இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதோ மிக்க மேலானதும் நிலையானதுமாகும். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௩௧)

Jan Trust Foundation

இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவை யெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களைப் போன்றவர்களுக்கு உலக வாழ்க்கையின் அலங்காரமாக நாம் இன்பமளித்தவற்றின் பக்கம் உமது கண்களை நீர் திருப்பாதீர். அதில் (-அந்த இன்பத்தில்) அவர்களை நாம் சோதிப்பதற்காக (அதைக் கொடுத்தோம்). உமது இறைவனின் அருட்கொடையே (உமக்கு) சிறந்ததும் நிலையானதும் ஆகும்.