குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௩௦
Qur'an Surah Taha Verse 130
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا ۚوَمِنْ اٰنَاۤئِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰى (طه : ٢٠)
- fa-iṣ'bir
- فَٱصْبِرْ
- So be patient
- நீர் பொறுத்துக் கொள்வீராக
- ʿalā mā yaqūlūna
- عَلَىٰ مَا يَقُولُونَ
- over what they say
- அவர்கள் கூறுவதை
- wasabbiḥ
- وَسَبِّحْ
- and glorify
- இன்னும் தொழுவீராக
- biḥamdi
- بِحَمْدِ
- with praise
- புகழ்ந்து
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உமது இறைவனை
- qabla
- قَبْلَ
- before
- முன்னரும்
- ṭulūʿi
- طُلُوعِ
- (the) rising
- உதிக்கும்
- l-shamsi
- ٱلشَّمْسِ
- (of) the sun
- சூரியன்
- waqabla
- وَقَبْلَ
- and before
- முன்னரும்
- ghurūbihā
- غُرُوبِهَاۖ
- its setting;
- அது மறையும்
- wamin ānāi
- وَمِنْ ءَانَآئِ
- and from (the) hours
- நேரங்களிலும்
- al-layli
- ٱلَّيْلِ
- (of) the night
- இரவின்
- fasabbiḥ
- فَسَبِّحْ
- and glorify
- இன்னும் தொழுவீராக
- wa-aṭrāfa
- وَأَطْرَافَ
- (at the) ends
- ஓரங்களிலும்
- l-nahāri
- ٱلنَّهَارِ
- (of) the day
- பகலின்
- laʿallaka tarḍā
- لَعَلَّكَ تَرْضَىٰ
- so that you may be satisfied
- நீர் திருப்தி பெறுவீர்
Transliteration:
Fasbir 'alaa maa yaqooloona wa sabbih bihamdi Rabbika qabla tuloo'ish shamsi wa qabla ghuroobihaa wa min aanaaa'il laili fasbbih wa atraafan nahaari la 'allaka tardaa(QS. Ṭāʾ Hāʾ:130)
English Sahih International:
So be patient over what they say and exalt [Allah] with praise of your Lord before the rising of the sun and before its setting; and during periods of the night [exalt Him] and at the ends of the day, that you may be satisfied. (QS. Taha, Ayah ௧௩௦)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அவர்கள் (உங்களைக் குறைவுபடுத்திக்) கூறுவதைப் பற்றி நீங்கள் பொறுமையுடன் சகித்திருங்கள். சூரியன் உதயமாவதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவு காலங்களிலும், (பகல் காலங்களிலும்) உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டிருங்கள். இவ்வாறே பகலின் இருமுனைகளிலும் (இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டு இருங்கள். இதனால்) நீங்கள் திருப்தி அடையலாம். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௩௦)
Jan Trust Foundation
ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக; இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக; மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக; இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தி பெறலாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறுவதை நீர் பொறுத்துக் கொள்வீராக! சூரியன் உதிக்கும் முன்னரும் அது மறையும் முன்னரும் இரவின் நேரங்களிலும் பகலின் ஓரங்களிலும் உமது இறைவனை புகழ்ந்து தொழுவீராக! (இதன் மூலம் இறைவனின் அருள் கிடைக்கப் பெற்று) நீர் திருப்தி பெறுவீர்!