குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௨௬
Qur'an Surah Taha Verse 126
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ كَذٰلِكَ اَتَتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَاۚ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى (طه : ٢٠)
- qāla
- قَالَ
- He will say
- அவன் கூறுவான்
- kadhālika
- كَذَٰلِكَ
- "Thus
- அவ்வாறுதான்
- atatka
- أَتَتْكَ
- came to you
- உன்னிடம் வந்தன
- āyātunā
- ءَايَٰتُنَا
- Our Signs
- எனது வசனங்கள்
- fanasītahā
- فَنَسِيتَهَاۖ
- but you forgot them
- ஆனால், நீ அவற்றை மறந்தாய்
- wakadhālika l-yawma
- وَكَذَٰلِكَ ٱلْيَوْمَ
- and thus today
- அவ்வாறே/இன்று
- tunsā
- تُنسَىٰ
- you will be forgotten"
- நீ மறக்கப்படுவாய்
Transliteration:
Qaala kazaalika atatka Aayaatunaa fanaseetahaa wa kazaalikal Yawma tunsaa(QS. Ṭāʾ Hāʾ:126)
English Sahih International:
[Allah] will say, "Thus did Our signs come to you, and you forgot [i.e., disregarded] them; and thus will you this Day be forgotten." (QS. Taha, Ayah ௧௨௬)
Abdul Hameed Baqavi:
அதற்கு (இறைவன்) "இவ்வாறே (குருடனைப் போன்ற உன் காரியங்கள் இருந்தன) நம் வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவைகளை(க் கவனத்தில் வைக்காது) மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் (கவனிக்கப்படாது) மறக்கப்பட்டுவிட்டாய்" என்று கூறுவான். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௨௬)
Jan Trust Foundation
(அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் (அல்லாஹ்) கூறுவான்: “அவ்வாறுதான் எனது வசனங்கள் உன்னிடம் வந்தன. ஆனால் நீ அவற்றை மறந்தாய். அவ்வாறே இன்றும் நீ மறக்கப்படுவாய்.