Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௨௩

Qur'an Surah Taha Verse 123

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًاۢ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚفَاِمَّا يَأْتِيَنَّكُمْ مِّنِّيْ هُدًى ەۙ فَمَنِ اتَّبَعَ هُدٰيَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقٰى (طه : ٢٠)

qāla
قَالَ
He said
கூறினான்
ih'biṭā
ٱهْبِطَا
"Go down
நீங்கள் இறங்குங்கள்
min'hā
مِنْهَا
from it
இதிலிருந்து
jamīʿan
جَمِيعًۢاۖ
all
அனைவரும்
baʿḍukum
بَعْضُكُمْ
some of you
உங்களில் சிலர்
libaʿḍin
لِبَعْضٍ
to others
சிலருக்கு
ʿaduwwun
عَدُوٌّۖ
(as) enemy
எதிரி
fa-immā yatiyannakum
فَإِمَّا يَأْتِيَنَّكُم
Then if comes to you
உங்களுக்கு வந்தால்
minnī
مِّنِّى
from Me
என்னிடமிருந்து
hudan
هُدًى
guidance
நேர்வழியை
famani
فَمَنِ
then whoever
எவர்
ittabaʿa
ٱتَّبَعَ
follows
பின்பற்றுவாரோ
hudāya
هُدَاىَ
My guidance
எனது நேர்வழியை
falā yaḍillu
فَلَا يَضِلُّ
then not he will go astray
வழிதவற மாட்டார்
walā yashqā
وَلَا يَشْقَىٰ
and not suffer
இன்னும் சிரமப்பட மாட்டார்

Transliteration:

Qaalah bita minhaa jamee'am ba'dukum liba'din 'aduww; fa immaa yaati yannakum minnee hudan famanit taba'a hudaaya falaa yadillu wa laa yashhqaa (QS. Ṭāʾ Hāʾ:123)

English Sahih International:

[Allah] said, "Descend from it [i.e., Paradise] – all, [your descendants] being enemies to one another. And if there should come to you guidance from Me – then whoever follows My guidance will neither go astray [in the world] nor suffer [in the Hereafter]. (QS. Taha, Ayah ௧௨௩)

Abdul Hameed Baqavi:

அன்றி "நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக ஏற்பட்டு விடுவார்கள். அச்சமயம் நிச்சயமாக என்னுடைய நேர்வழி உங்களிடம் வரும். எவன் என்னுடைய நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௨௩)

Jan Trust Foundation

“இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவே யிருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்) கூறினான்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். உங்களில் சிலர் சிலருக்கு எதிரி ஆவர். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வந்தால் எவர் எனது நேர்வழியை பின்பற்றுவாரோ அவர் வழிதவற மாட்டார்; (மறுமையில்) சிரமப்பட மாட்டார்.