Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௨௧

Qur'an Surah Taha Verse 121

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِۚ وَعَصٰٓى اٰدَمُ رَبَّهٗ فَغَوٰى ۖ (طه : ٢٠)

fa-akalā
فَأَكَلَا
Then they both ate
ஆக, அவ்விருவரும் சாப்பிட்டனர்
min'hā
مِنْهَا
from it
அதிலிருந்து
fabadat
فَبَدَتْ
so became apparent
ஆகவே தெரியவந்தன
lahumā
لَهُمَا
to them
அவ்விருவருக்கும்
sawātuhumā
سَوْءَٰتُهُمَا
their shame
அவ்விருவரின் மறைவிடங்கள்
waṭafiqā
وَطَفِقَا
and they began
இன்னும் முற்பட்டனர்
yakhṣifāni
يَخْصِفَانِ
(to) fasten
அவ்விருவரும் கட்டிக்கொள்வதற்கு
ʿalayhimā
عَلَيْهِمَا
on themselves
தங்கள் இருவர் மீது
min waraqi
مِن وَرَقِ
from (the) leaves
இலைகளை
l-janati
ٱلْجَنَّةِۚ
(of) Paradise
சொர்க்கத்தின்
waʿaṣā
وَعَصَىٰٓ
And Adam disobeyed
இன்னும் மாறுசெய்தார்
ādamu
ءَادَمُ
And Adam disobeyed
ஆதம்
rabbahu
رَبَّهُۥ
his Lord
தன் இறைவனுக்கு
faghawā
فَغَوَىٰ
and erred
ஆகவே வழி தவறி விட்டார்

Transliteration:

Fa akalaa minhaa fabadat lahumaa saw aatuhumaa wa tafiqaa yakhsifaani 'alaihimaa minw waraqil jannah; wa 'asaaa Aadamu Rabbahoo faghawaa (QS. Ṭāʾ Hāʾ:121)

English Sahih International:

And they [i.e., Adam and his wife] ate of it, and their private parts became apparent to them, and they began to fasten over themselves from the leaves of Paradise. And Adam disobeyed his Lord and erred. (QS. Taha, Ayah ௧௨௧)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதனைப் புசித்து விட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானமும் வெளியாகவே, அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக்கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்கு மாறு செய்து வழி தவறிவிட்டார். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௨௧)

Jan Trust Foundation

பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அவ்விருவரும் அதிலிருந்து (அம்மரத்திலிருந்து) சாப்பிட்டனர். ஆகவே, அவ்விருவருக்கும் அவ்விருவரின் மறைவிடங்கள் தெரியவந்தன. சொர்க்கத்தின் இலைகளை அவ்விருவரும் தங்கள் இருவர் மீது கட்டிக் கொள்வதற்கு முற்பட்டனர். ஆதம் தன் இறைவனுக்கு மாறுசெய்தார். (அவனது கட்டளையை மீறினார்.) ஆகவே, வழி தவறிவிட்டார்.