குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௧௫
Qur'an Surah Taha Verse 115
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ عَهِدْنَآ اِلٰٓى اٰدَمَ مِنْ قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهٗ عَزْمًا ࣖ (طه : ٢٠)
- walaqad ʿahid'nā
- وَلَقَدْ عَهِدْنَآ
- And verily We made a covenant
- திட்டவட்டமாக நாம் கட்டளையிட்டோம்
- ilā ādama
- إِلَىٰٓ ءَادَمَ
- with Adam
- ஆதமுக்கு
- min qablu
- مِن قَبْلُ
- before before
- இதற்கு முன்னர்
- fanasiya
- فَنَسِىَ
- but he forgot
- மறந்து விட்டார்
- walam najid
- وَلَمْ نَجِدْ
- and not We found
- நாம் காணவில்லை
- lahu
- لَهُۥ
- in him
- அவரிடம்
- ʿazman
- عَزْمًا
- determination
- உறுதியை
Transliteration:
Wa laqad 'ahidnaaa ilaaa Aadama min qablu fanasiya wa lam najid lahoo 'azmaa(QS. Ṭāʾ Hāʾ:115)
English Sahih International:
And We had already taken a promise from Adam before, but he forgot; and We found not in him determination. (QS. Taha, Ayah ௧௧௫)
Abdul Hameed Baqavi:
இதற்கு முன்னர் ஆதமிடம் நிச்சயமாக நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். எனினும், (அதனை) அவர் மறந்துவிட்டார். ஆனால், (மனமுரண்டாக) அதற்கு மாறு செய்யும் எண்ணத்தை நாம் அவரிடம் காணவில்லை. (ஸூரத்து தாஹா, வசனம் ௧௧௫)
Jan Trust Foundation
முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக இதற்கு முன்னர் ஆதமுக்கு நாம் கட்டளையிட்டோம். அவர் (அதை) மறந்து விட்டார். அவரிடம் நாம் (நமது கட்டளையை நிறைவேற்றுவதிலும் அதில் பொறுமையாக இருப்பதிலும்) உறுதியைக் காணவில்லை.