Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௧௪

Qur'an Surah Taha Verse 114

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَقُّۚ وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضٰٓى اِلَيْكَ وَحْيُهٗ ۖوَقُلْ رَّبِّ زِدْنِيْ عِلْمًا (طه : ٢٠)

fataʿālā
فَتَعَٰلَى
So high (above all)
மிக உயர்ந்தவன்
l-lahu
ٱللَّهُ
(is) Allah
அல்லாஹ்
l-maliku
ٱلْمَلِكُ
the King
அரசனாகிய
l-ḥaqu
ٱلْحَقُّۗ
the True
உண்மையாளனாகிய
walā taʿjal
وَلَا تَعْجَلْ
And (do) not hasten
அவசரப்படாதீர்
bil-qur'āni
بِٱلْقُرْءَانِ
with the Quran
குர்ஆனில்
min qabli
مِن قَبْلِ
before before
முன்னர்
an yuq'ḍā
أَن يُقْضَىٰٓ
[that] is completed
முழுமையாக அறிவிக்கப்படுவதற்கு
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
waḥyuhu
وَحْيُهُۥۖ
its revelation
அதனுடைய வஹீ
waqul
وَقُل
and say
இன்னும் கூறுவீராக
rabbi
رَّبِّ
"My Lord!
என் இறைவா
zid'nī
زِدْنِى
Increase me
எனக்குஅதிகப்படுத்து
ʿil'man
عِلْمًا
(in) knowledge"
ஞானத்தை

Transliteration:

Fata'aalal laahul Malikul Haqq; wa laa ta'jal bil Quraani min qabli ai yuqdaaa ilaika wahyuhoo wa qur Rabbi zidnee 'ilmaa (QS. Ṭāʾ Hāʾ:114)

English Sahih International:

So high [above all] is Allah, the Sovereign, the Truth. And, [O Muhammad], do not hasten with [recitation of] the Quran before its revelation is completed to you, and say, "My Lord, increase me in knowledge." (QS. Taha, Ayah ௧௧௪)

Abdul Hameed Baqavi:

உண்மையான அரசனாகிய அல்லாஹ்தான் மிக்க உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனைப் பற்றி உங்களுக்கு வஹீ அறிவித்து முடிவதற்கு முன்னதாகவே (அதனை ஓத) நீங்கள் அவசரப்படாதீர்கள். எனினும் "என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௧௪)

Jan Trust Foundation

ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உண்மையாளனாகிய அரசனாகிய அல்லாஹ் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனில் (அதை பிறருக்கு ஓதிக்காட்டுவதில்) அவசரப்படாதீர், அதனுடைய வஹ்யி (அது சம்பந்தப்பட்ட விளக்கம்) உமக்கு முழுமையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர். இன்னும் கூறுவீராக! “என் இறைவா எனக்கு ஞானத்தை அதிகப்படுத்து!”