Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௦௮

Qur'an Surah Taha Verse 108

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَىِٕذٍ يَّتَّبِعُوْنَ الدَّاعِيَ لَا عِوَجَ لَهٗ ۚوَخَشَعَتِ الْاَصْوَاتُ لِلرَّحْمٰنِ فَلَا تَسْمَعُ اِلَّا هَمْسًا (طه : ٢٠)

yawma-idhin
يَوْمَئِذٍ
On that Day
அந்நாளில்
yattabiʿūna
يَتَّبِعُونَ
they will follow
பின் தொடர்வார்கள்
l-dāʿiya
ٱلدَّاعِىَ
the caller
அழைப்பாளரை
lā ʿiwaja
لَا عِوَجَ
no deviation
திரும்ப முடியாது
lahu
لَهُۥۖ
from it
அவரை விட்டு
wakhashaʿati
وَخَشَعَتِ
And (will be) humbled
இன்னும் அமைதியாகிவிடும்
l-aṣwātu
ٱلْأَصْوَاتُ
the voices
சப்தங்கள் எல்லாம்
lilrraḥmāni
لِلرَّحْمَٰنِ
for the Most Gracious
ரஹ்மானுக்கு முன்
falā tasmaʿu
فَلَا تَسْمَعُ
so not you will hear
செவிமடுக்க மாட்டீர்
illā
إِلَّا
except
தவிர
hamsan
هَمْسًا
a faint sound
மென்மையான சப்தத்தைத்

Transliteration:

Yawma iziny yattabi'oonad daa'iya laa 'iwaja lahoo wa khasha'atil aswaatu lir Rahmaani falaa tasma'u illaa hamsaa (QS. Ṭāʾ Hāʾ:108)

English Sahih International:

That Day, they [i.e., everyone] will follow [the call of] the Caller [with] no deviation therefrom, and [all] voices will be stilled before the Most Merciful, so you will not hear except a whisper [of footsteps]. (QS. Taha, Ayah ௧௦௮)

Abdul Hameed Baqavi:

அந்நாளில் (அனைவரும் எக்காள மூலம்) அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றிச் செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப் பயந்து எல்லாச் சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான) காலடி சப்தத்தைத் தவிர (வேறு எதனையும்) நீங்கள் கேட்கமாட்டீர்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௦௮)

Jan Trust Foundation

அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச் சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில் அவர்கள் அழைப்பாளரை பின் தொடர்வார்கள். அவரை விட்டு (அவர்கள் எங்கும்) திரும்ப முடியாது. சப்தங்கள் எல்லாம் ரஹ்மானுக்கு முன் அமைதியாகிவிடும். நீர் (அங்கு பாதங்களின்) மென்மையான சப்தத்தைத் தவிர (வேறு சப்தத்தை) செவிமடுக்க மாட்டீர்.