Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௦

Qur'an Surah Taha Verse 10

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ رَاٰ نَارًا فَقَالَ لِاَهْلِهِ امْكُثُوْٓا اِنِّيْ اٰنَسْتُ نَارًا لَّعَلِّيْٓ اٰتِيْكُمْ مِّنْهَا بِقَبَسٍ اَوْ اَجِدُ عَلَى النَّارِ هُدًى (طه : ٢٠)

idh raā
إِذْ رَءَا
When he saw
அவர் பார்த்தபோது
nāran
نَارًا
a fire
ஒரு நெருப்பை
faqāla
فَقَالَ
then he said
அவர் கூறினார்
li-ahlihi
لِأَهْلِهِ
to his family
தனது குடும்பத்தினருக்கு
um'kuthū
ٱمْكُثُوٓا۟
"Stay here;
தங்கி இருங்கள்
innī
إِنِّىٓ
indeed I
நிச்சயமாக நான்
ānastu
ءَانَسْتُ
[I] perceived
நான் காண்கின்றேன்
nāran
نَارًا
a fire;
ஒரு நெருப்பை
laʿallī ātīkum
لَّعَلِّىٓ ءَاتِيكُم
perhaps I (can) bring you
உங்களிடம் கொண்டு வரலாம்
min'hā
مِّنْهَا
therefrom
அதிலிருந்து
biqabasin
بِقَبَسٍ
a burning brand
ஒரு எரிகொல்லியை
aw
أَوْ
or
அல்லது
ajidu
أَجِدُ
I find
பெறலாம்
ʿalā l-nāri
عَلَى ٱلنَّارِ
at the fire
நெருப்பின் அருகில்
hudan
هُدًى
guidance"
வழிகாட்டுதலை

Transliteration:

Iz ra aa naaran faqaala li alhlihim kusooo inneee aanastu naaral la'alleee aateekum minhaa biqabasin aw ajidu 'alan naari hudaa (QS. Ṭāʾ Hāʾ:10)

English Sahih International:

When he saw a fire and said to his family, "Stay here; indeed, I have perceived a fire; perhaps I can bring you a torch or find at the fire some guidance." (QS. Taha, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

(அவர் தன் குடும்பத்தாருடன் சென்றபொழுது தான் செல்ல வேண்டிய வழியை அறியாத நிலையில் தூர் என்னும் மலைமீது) அவர் நெருப்பைக் கண்ட சமயத்தில் தன் குடும்பத்தாரை நோக்கி "நீங்கள் (இங்கு சிறிது) தாமதித்திருங்கள். மெய்யாகவே நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஒரு எரி கொள்ளியை எடுத்துக்கொண்டு உங்களிடம் வருகிறேன். அல்லது நெருப்பி(ன் வெளிச்சத்தி)னால் (நாம் செல்லவேண்டிய) வழியை அறிந்து கொள்வேன்" என்றார். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௦)

Jan Trust Foundation

அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ; அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்” என்று (கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் ஒரு நெருப்பைப் பார்த்தபோது, அவர் தனது குடும்பத்தினருக்குக் கூறினார்: “(இங்கே) தங்கி இருங்கள்! நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். அதிலிருந்து ஒரு (சிறிய) நெருப்பை உங்களிடம் கொண்டு வரலாம் அல்லது நெருப்பின் அருகில் ஒரு வழிகாட்டுதலை நான் பெறலாம்.