Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Page: 9

Taha

(Ṭāʾ Hāʾ)

௮௧

كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْۙ وَلَا تَطْغَوْا فِيْهِ فَيَحِلَّ عَلَيْكُمْ غَضَبِيْۚ وَمَنْ يَّحْلِلْ عَلَيْهِ غَضَبِيْ فَقَدْ هَوٰى ٨١

kulū
كُلُوا۟
புசியுங்கள்
min ṭayyibāti
مِن طَيِّبَٰتِ
நல்லவற்றிலிருந்து
mā razaqnākum
مَا رَزَقْنَٰكُمْ
நாம் உங்களுக்கு வழங்கிய
walā taṭghaw
وَلَا تَطْغَوْا۟
எல்லை மீறாதீர்கள்
fīhi
فِيهِ
அதில்
fayaḥilla
فَيَحِلَّ
இறங்கிவிடும்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ghaḍabī
غَضَبِىۖ
என் கோபம்
waman
وَمَن
எவன்
yaḥlil
يَحْلِلْ
இறங்கி விடுகிறதோ
ʿalayhi
عَلَيْهِ
மீது
ghaḍabī
غَضَبِى
என் கோபம்
faqad
فَقَدْ
திட்டமாக
hawā
هَوَىٰ
அவன் வீழ்ந்து விடுவான்
நாம் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லதைப் புசித்து வாருங்கள். அதில் நீங்கள் வரம்பு மீறிவிடாதீர்கள். (மீறினால்) உங்க மீது என் கோபம் இறங்கிவிடும். எவன்மீது என்னுடைய கோபம் இறங்குகின்றதோ அவன் நிச்சயமாக அழிந்தே விடுவான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௮௧)
Tafseer
௮௨

وَاِنِّي لَغَفَّارٌ لِّمَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدٰى ٨٢

wa-innī
وَإِنِّى
நிச்சயமாக நான்
laghaffārun
لَغَفَّارٌ
மிகவும் மன்னிக்கக்கூடியவன்
liman tāba
لِّمَن تَابَ
திருந்தியவரை
waāmana
وَءَامَنَ
இன்னும் நம்பிக்கைகொண்டார்
waʿamila ṣāliḥan
وَعَمِلَ صَٰلِحًا
நன்மை செய்தார்
thumma
ثُمَّ
பின்னர்
ih'tadā
ٱهْتَدَىٰ
நேர்வழி பெற்றார்
எவர் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து நேரான வழியில் நிலைத்தும் இருக்கின்றாரோ அவருடைய குற்றங்களை நான் மிக மிக மன்னிப்பவனாகவே இருக்கின்றேன். ([௨௦] ஸூரத்து தாஹா: ௮௨)
Tafseer
௮௩

۞ وَمَآ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ يٰمُوْسٰى ٨٣

wamā aʿjalaka
وَمَآ أَعْجَلَكَ
எது?/உம்மை அவசரமாக வரவழைத்தது
ʿan qawmika
عَن قَوْمِكَ
உமது சமுதாயத்தை விட்டு
yāmūsā
يَٰمُوسَىٰ
மூஸாவே!
(மூஸா தூர் ஸீனாய் மலைக்கு வந்த சமயத்தில் அவரை நோக்கி இறைவன்) "மூஸாவே! நீங்கள் உங்களுடைய மக்களை விட்டுப் பிரிந்து இவ்வளவு அவசரமாக ஏன் வந்தீர்கள்?" (என்று கேட்டான்). ([௨௦] ஸூரத்து தாஹா: ௮௩)
Tafseer
௮௪

قَالَ هُمْ اُولَاۤءِ عَلٰٓى اَثَرِيْ وَعَجِلْتُ اِلَيْكَ رَبِّ لِتَرْضٰى ٨٤

qāla
قَالَ
அவர் கூறினார்
hum ulāi
هُمْ أُو۟لَآءِ
அவர்கள்
ʿalā
عَلَىٰٓ
மீது
atharī
أَثَرِى
என் அடிச்சுவட்டின்
waʿajil'tu
وَعَجِلْتُ
நான் விரைந்தேன்
ilayka
إِلَيْكَ
உன் பக்கம்
rabbi
رَبِّ
என் இறைவா
litarḍā
لِتَرْضَىٰ
நீ திருப்தி கொள்வதற்காக
அதற்கவர் "அவர்கள் இதோ என்னைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். என் இறைவனே! உன்னைத் திருப்திப்படுத்துவதற்காக அவசர அவசரமாக (முன்னதாகவே) உன்னிடம் வந்தேன்" என்று கூறினார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௮௪)
Tafseer
௮௫

قَالَ فَاِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنْۢ بَعْدِكَ وَاَضَلَّهُمُ السَّامِرِيُّ ٨٥

qāla
قَالَ
கூறினான்
fa-innā
فَإِنَّا
நிச்சயமாக நாம்
qad fatannā
قَدْ فَتَنَّا
திட்டமாக சோதித்தோம்
qawmaka
قَوْمَكَ
உமது சமுதாயத்தை
min baʿdika
مِنۢ بَعْدِكَ
உமக்குப் பின்னர்
wa-aḍallahumu
وَأَضَلَّهُمُ
இன்னும் அவர்களை வழிகெடுத்தான்
l-sāmiriyu
ٱلسَّامِرِىُّ
ஸாமிரி
அதற்கு (இறைவன்) "நீங்கள் வந்த பின்னர் நாம் உங்களுடைய மக்களை ஒரு சோதனைக்குள்ளாக்கி விட்டோம். "ஸாமிரீ" என்பவன் அவர்களை வழிகெடுத்துவிட்டான்" என்று கூறினான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௮௫)
Tafseer
௮௬

فَرَجَعَ مُوْسٰٓى اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ەۚ قَالَ يٰقَوْمِ اَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ەۗ اَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ اَمْ اَرَدْتُّمْ اَنْ يَّحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِّنْ رَّبِّكُمْ فَاَخْلَفْتُمْ مَّوْعِدِيْ ٨٦

farajaʿa
فَرَجَعَ
திரும்பினார்
mūsā
مُوسَىٰٓ
மூஸா
ilā qawmihi
إِلَىٰ قَوْمِهِۦ
தனது சமுதாயத்திடம்
ghaḍbāna
غَضْبَٰنَ
கோபமானவராக
asifan
أَسِفًاۚ
கவலையடைந்தவராக
qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
alam
أَلَمْ
வாக்களிக்கவில்லையா
yaʿid'kum
يَعِدْكُمْ
வாக்களிக்கவில்லையா உங்களுக்கு
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
waʿdan ḥasanan
وَعْدًا حَسَنًاۚ
அழகிய வாக்கை
afaṭāla
أَفَطَالَ
தூரமாகிவிட்டதா
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்களுக்கு
l-ʿahdu am
ٱلْعَهْدُ أَمْ
காலம்/அல்லது
aradttum
أَرَدتُّمْ
நீங்கள் நாடுகிறீர்களா
an yaḥilla
أَن يَحِلَّ
இறங்குவதை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ghaḍabun
غَضَبٌ
கோபம்
min rabbikum
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவன் புறத்திலிருந்து
fa-akhlaftum
فَأَخْلَفْتُم
அதனால் மாறு செய்தீர்களா
mawʿidī
مَّوْعِدِى
எனது குறிப்பிட்ட நேரத்திற்கு
(உடனே) மூஸா பெரும் துக்கத்துடன் கோபம் கொண்டவராகத் தன்னுடைய மக்களிடம் திரும்பி வந்து "என்னுடைய மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு(த் தவ்றாத் என்னும் வேதத்தைத் தருவதாக) அழகான வாக்குறுதி அளிக்க வில்லையா? அவன் வாக்குறுதி அளித்து அதிக நாள்களாகி விட்டனவா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனின் கோபம் இறங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியே எனக்குச் செய்த வாக்குறுதிக்கு நீங்கள் மாறு செய்தீர்களா?" என்று கேட்டார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௮௬)
Tafseer
௮௭

قَالُوْا مَآ اَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلٰكِنَّا حُمِّلْنَآ اَوْزَارًا مِّنْ زِيْنَةِ الْقَوْمِ فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَى السَّامِرِيُّ ۙ ٨٧

qālū
قَالُوا۟
கூறினார்கள்
mā akhlafnā
مَآ أَخْلَفْنَا
நாங்கள் மாறுசெய்யவில்லை
mawʿidaka
مَوْعِدَكَ
உமது குறிப்பிட்டநேரத்திற்கு
bimalkinā
بِمَلْكِنَا
எங்கள் விருப்பப்படி
walākinnā
وَلَٰكِنَّا
என்றாலும்
ḥummil'nā
حُمِّلْنَآ
நாங்கள் சுமத்தப்பட்டோம்
awzāran
أَوْزَارًا
பலசுமைகளை
min zīnati
مِّن زِينَةِ
ஆபரணங்களில்
l-qawmi
ٱلْقَوْمِ
மக்களின்
faqadhafnāhā
فَقَذَفْنَٰهَا
ஆகவே அவற்றை நாங்கள் எறிந்தோம்
fakadhālika
فَكَذَٰلِكَ
அவ்வாறே
alqā
أَلْقَى
எறிந்தான்
l-sāmiriyu
ٱلسَّامِرِىُّ
சாமிரி
அதற்கவர்கள் "நாங்கள் உங்களுக்குச் செய்த வாக்குறுதிக்கு எங்கள் இஷ்டப்படி மாறு செய்யவில்லை. ஆனால், நாங்கள் சுமந்துகொண்டு வந்த (ஃபிர்அவ்னுடைய) மக்களின் நகைகளை (நெருப்பில் எறியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு அதில் அவைகளை) நாங்கள் எறிந்தோம். அவ்வாறே ஸாமிரீயும் (தன்னிடமிருந்த நகைகளை) எறிந்தான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௮௭)
Tafseer
௮௮

فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَآ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰى ەۙ فَنَسِيَ ۗ ٨٨

fa-akhraja
فَأَخْرَجَ
உருவாக்கினான்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿij'lan
عِجْلًا
ஒரு காளைக் கன்றை
jasadan
جَسَدًا
ஓர் உடலை
lahu
لَّهُۥ
அதற்கு
khuwārun
خُوَارٌ
மாட்டின் சப்தத்தை உடைய
faqālū
فَقَالُوا۟
கூறினர்
hādhā
هَٰذَآ
இதுதான்
ilāhukum
إِلَٰهُكُمْ
உங்களது தெய்வமும்
wa-ilāhu
وَإِلَٰهُ
தெய்வமும்
mūsā
مُوسَىٰ
மூஸாவுடைய
fanasiya
فَنَسِىَ
ஆனால் மறந்து விட்டார்
பின்னர், அவன் ஒரு காளை கன்றின் சிலையை (மக்கள் முன்) வெளியாக்கினான். அதற்கு(க் காளை மாட்டின் சப்தத்தைப் போல் அர்த்தமற்ற) சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர், இதுதான் உங்களுக்கும் மூஸாவுக்கும் இறைவனாகும். (இதனை) மறந்து விட்டு (மூஸா மலைக்குச் சென்று) விட்டார்" என்று கூறினார்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௮௮)
Tafseer
௮௯

اَفَلَا يَرَوْنَ اَلَّا يَرْجِعُ اِلَيْهِمْ قَوْلًا ەۙ وَّلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ࣖ ٨٩

afalā yarawna
أَفَلَا يَرَوْنَ
அவர்கள் பார்க்கவேண்டாமா
allā
أَلَّا
அது
yarjiʿu
يَرْجِعُ
திரும்ப
ilayhim
إِلَيْهِمْ
அவர்களுக்கு
qawlan
قَوْلًا
பேசாமல் இருப்பதை
walā yamliku
وَلَا يَمْلِكُ
இன்னும் ஆற்றல் பெறவில்லை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ḍarran
ضَرًّا
தீமை செய்வதற்கும்
walā nafʿan
وَلَا نَفْعًا
நன்மை செய்வதற்கும்
(என்ன ஆச்சரியம்!) அவர்களு(டைய கேள்விகளு)க்கு அச்சிலை யாதொரு பதில் கூறாமலிருப்பதையும், நன்மையோ தீமையோ (யாதொன்றையும்) அவர்களுக்குச் செய்ய சக்தியற்று இருப்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? ([௨௦] ஸூரத்து தாஹா: ௮௯)
Tafseer
௯௦

وَلَقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ يٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖۚ وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِيْ وَاَطِيْعُوْٓا اَمْرِيْ ٩٠

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
qāla
قَالَ
கூறினார்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
hārūnu
هَٰرُونُ
ஹாரூன்
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
innamā futintum
إِنَّمَا فُتِنتُم
நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்
bihi
بِهِۦۖ
இதைக் கொண்டு
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbakumu
رَبَّكُمُ
உங்கள் இறைவன்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன் தான்
fa-ittabiʿūnī
فَٱتَّبِعُونِى
ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள்
wa-aṭīʿū
وَأَطِيعُوٓا۟
கீழ்ப்படியுங்கள்
amrī
أَمْرِى
என் கட்டளைக்கு
இதற்கு முன்னதாகவே ஹாரூன் அவர்களை நோக்கி "என்னுடைய மக்களே! (இச்சிலையை வணங்கி) நீங்கள் வழி தவறிவிட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் (அல்லாஹ்வாகிய) ரஹ்மான்தான். (இச்சிலையன்று!) என்னைப் பின்பற்றுங்கள்; என்னுடைய கட்டளைக்கு கட்டுப்படுங்கள்" என்று கூறினார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௯௦)
Tafseer