قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْۗ اِنَّهٗ لَكَبِيْرُكُمُ الَّذِيْ عَلَّمَكُمُ السِّحْرَۚ فَلَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَنَّكُمْ فِيْ جُذُوْعِ النَّخْلِۖ وَلَتَعْلَمُنَّ اَيُّنَآ اَشَدُّ عَذَابًا وَّاَبْقٰى ٧١
- qāla
- قَالَ
- கூறினான்
- āmantum
- ءَامَنتُمْ
- நம்பிக்கை கொண்டீர்களா?
- lahu
- لَهُۥ
- அவரை
- qabla
- قَبْلَ
- முன்னர்
- an ādhana
- أَنْ ءَاذَنَ
- நான் அனுமதியளிப்பதற்கு
- lakum
- لَكُمْۖ
- உங்களுக்கு
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவர்
- lakabīrukumu
- لَكَبِيرُكُمُ
- உங்கள் பெரியவர்
- alladhī ʿallamakumu
- ٱلَّذِى عَلَّمَكُمُ
- அவர் உங்களுக்கு கற்றுக்கொடுத்தார்
- l-siḥ'ra
- ٱلسِّحْرَۖ
- சூனியத்தை
- fala-uqaṭṭiʿanna
- فَلَأُقَطِّعَنَّ
- ஆகவே, நிச்சயமாக வெட்டுவேன்
- aydiyakum
- أَيْدِيَكُمْ
- உங்கள் கைகளை
- wa-arjulakum
- وَأَرْجُلَكُم
- உங்கள் கால்களை
- min khilāfin
- مِّنْ خِلَٰفٍ
- மாற்றமாக
- wala-uṣallibannakum
- وَلَأُصَلِّبَنَّكُمْ
- உங்களை நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன்
- fī judhūʿi
- فِى جُذُوعِ
- பலகைகளில்
- l-nakhli
- ٱلنَّخْلِ
- பேரித்த மரத்தின்
- walataʿlamunna
- وَلَتَعْلَمُنَّ
- நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
- ayyunā
- أَيُّنَآ
- எங்களில் யார்
- ashaddu
- أَشَدُّ
- கடினமானவர்
- ʿadhāban
- عَذَابًا
- வேதனை செய்வதில்
- wa-abqā
- وَأَبْقَىٰ
- நிரந்தரமானவர்
(இதனைக் கண்ட ஃபிர்அவ்ன்) "நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தாம் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களுடைய தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களுடைய மாறு கை, மாறு காலை வெட்டிப் பேரீச்ச மரத்தின் வேர்களில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி விடுவேன். நிலையான வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார் என்பதையும் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று கூறினான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௧)Tafseer
قَالُوْا لَنْ نُّؤْثِرَكَ عَلٰى مَا جَاۤءَنَا مِنَ الْبَيِّنٰتِ وَالَّذِيْ فَطَرَنَا فَاقْضِ مَآ اَنْتَ قَاضٍۗ اِنَّمَا تَقْضِيْ هٰذِهِ الْحَيٰوةَ الدُّنْيَا ۗ ٧٢
- qālū
- قَالُوا۟
- அவர்கள் கூறினர்
- lan nu'thiraka
- لَن نُّؤْثِرَكَ
- நாம் உம்மை தேர்ந்தெடுக்க மாட்டோம்
- ʿalā mā jāanā
- عَلَىٰ مَا جَآءَنَا
- எங்களிடம் வந்ததை விட
- mina l-bayināti
- مِنَ ٱلْبَيِّنَٰتِ
- தெளிவான அத்தாட்சிகளில் இருந்து
- wa-alladhī faṭaranā
- وَٱلَّذِى فَطَرَنَاۖ
- எங்களைப் படைத்தவனை விட
- fa-iq'ḍi
- فَٱقْضِ
- ஆகவே நீ செய்
- mā anta
- مَآ أَنتَ
- எதை/நீ
- qāḍin
- قَاضٍۖ
- செய்பவனாக இருக்கிறாயோ
- innamā taqḍī
- إِنَّمَا تَقْضِى
- நீ செய்வதெல்லாம்
- hādhihi
- هَٰذِهِ
- இந்த
- l-ḥayata l-dun'yā
- ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَآ
- உலக வாழ்க்கையில்தான்
அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ செய்துகொள். நீ செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௨)Tafseer
اِنَّآ اٰمَنَّا بِرَبِّنَا لِيَغْفِرَ لَنَا خَطٰيٰنَا وَمَآ اَكْرَهْتَنَا عَلَيْهِ مِنَ السِّحْرِۗ وَاللّٰهُ خَيْرٌ وَّاَبْقٰى ٧٣
- innā
- إِنَّآ
- நிச்சயமாக நாங்கள்
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- birabbinā
- بِرَبِّنَا
- எங்கள் இறைவனை
- liyaghfira
- لِيَغْفِرَ
- அவன் மன்னிப்பதற்காக
- lanā
- لَنَا
- எங்களுக்கு
- khaṭāyānā
- خَطَٰيَٰنَا
- எங்கள் பாவங்களை
- wamā akrahtanā
- وَمَآ أَكْرَهْتَنَا
- இன்னும் எது/நீ எங்களை நிர்ப்பந்தித்தாய்
- ʿalayhi
- عَلَيْهِ
- அதை செய்வதற்கு
- mina l-siḥ'ri
- مِنَ ٱلسِّحْرِۗ
- சூனியத்தில்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்தான்
- khayrun
- خَيْرٌ
- மிகச் சிறந்தவன்
- wa-abqā
- وَأَبْقَىٰٓ
- மிக நிரந்தரமானவன்
நிச்சயமாக நாங்கள் (மெய்யான) எங்கள் இறைவனையே நம்பிக்கை கொள்வோம். எங்களுடைய குற்றங்களையும் உன்னுடைய நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ்தான் (உன்னைவிட) மிக்க மேலானவனும், என்றும் நிலைத்திருப்பவனும் ஆவான்" என்று கூறினார்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௩)Tafseer
اِنَّهٗ مَنْ يَّأْتِ رَبَّهٗ مُجْرِمًا فَاِنَّ لَهٗ جَهَنَّمَ ۗ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰى ٧٤
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக விஷயமாவது
- man
- مَن
- எவன்
- yati
- يَأْتِ
- வருகிறானோ
- rabbahu
- رَبَّهُۥ
- தன் இறைவனிடம்
- muj'riman
- مُجْرِمًا
- பாவியாக
- fa-inna
- فَإِنَّ
- நிச்சயமாக
- lahu
- لَهُۥ
- அவனுக்கு
- jahannama
- جَهَنَّمَ
- நரகம்தான்
- lā yamūtu
- لَا يَمُوتُ
- அவன் மரணிக்க மாட்டான்
- fīhā
- فِيهَا
- அதில்
- walā yaḥyā
- وَلَا يَحْيَىٰ
- வாழவும் மாட்டான்
உண்மையாகவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகின்றானோ அவனுக்கு நிச்சயமாக நரகம்தான் கூலியாகும். அதில் அவன் சாகவும் மாட்டான்; (சுகத்துடன்) வாழவும் மாட்டான். (வேதனையை அனுபவித்துக் கொண்டு குற்றுயிராகவே கிடப்பான்.) ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௪)Tafseer
وَمَنْ يَّأْتِهٖ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصّٰلِحٰتِ فَاُولٰۤىِٕكَ لَهُمُ الدَّرَجٰتُ الْعُلٰى ۙ ٧٥
- waman
- وَمَن
- இன்னும் யார்
- yatihi
- يَأْتِهِۦ
- அவனிடம்வருவாரோ
- mu'minan
- مُؤْمِنًا
- நம்பிக்கையாளராக
- qad ʿamila
- قَدْ عَمِلَ
- திட்டமாக செய்தார்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- fa-ulāika lahumu
- فَأُو۟لَٰٓئِكَ لَهُمُ
- அவர்களுக்குத்தான்
- l-darajātu
- ٱلدَّرَجَٰتُ
- தகுதிகள் உண்டு
- l-ʿulā
- ٱلْعُلَىٰ
- மிக உயர்ந்த
எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்து (தன் இறைவனிடம்) வருகின்றாரோ அத்தகையவருக்கு மேலான பதவிகள் இருக்கின்றன. ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௫)Tafseer
جَنّٰتُ عَدْنٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ۗوَذٰلِكَ جَزٰۤؤُا مَنْ تَزَكّٰى ࣖ ٧٦
- jannātu
- جَنَّٰتُ
- சொர்க்கங்கள்
- ʿadnin
- عَدْنٍ
- அத்ன்
- tajrī
- تَجْرِى
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- அவற்றின் கீழே
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- நதிகள்
- khālidīna
- خَٰلِدِينَ
- அவர்கள் நிரந்தரமானவர்களாக
- fīhā
- فِيهَاۚ
- அதில்
- wadhālika
- وَذَٰلِكَ
- இதுதான்
- jazāu
- جَزَآءُ
- கூலியாகும்
- man tazakkā
- مَن تَزَكَّىٰ
- எவர்/பரிசுத்தமானார்
(மறுமையிலோ அவர்களுக்கு) "அத்ன்" என்ற நிலையான சுவனபதிகள் உள்ளன. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இதுதான் பரிசுத்தவான்களுடைய கூலியாகும். ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௬)Tafseer
وَلَقَدْ اَوْحَيْنَآ اِلٰى مُوْسٰٓى اَنْ اَسْرِ بِعِبَادِيْ فَاضْرِبْ لَهُمْ طَرِيْقًا فِى الْبَحْرِ يَبَسًاۙ لَّا تَخٰفُ دَرَكًا وَّلَا تَخْشٰى ٧٧
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- awḥaynā
- أَوْحَيْنَآ
- நாம் வஹீ அறிவித்தோம்
- ilā mūsā
- إِلَىٰ مُوسَىٰٓ
- மூஸாவிற்கு
- an asri
- أَنْ أَسْرِ
- இரவில் அழைத்துச் செல்வீராக
- biʿibādī
- بِعِبَادِى
- என் அடியார்களை
- fa-iḍ'rib
- فَٱضْرِبْ
- இன்னும் ஏற்படுத்துவீராக
- lahum
- لَهُمْ
- அவர்களுக்காக
- ṭarīqan
- طَرِيقًا
- ஒரு பாதையை
- fī l-baḥri
- فِى ٱلْبَحْرِ
- கடலில்
- yabasan
- يَبَسًا
- காய்ந்த
- lā takhāfu
- لَّا تَخَٰفُ
- நீர் பயப்பட மாட்டீர்
- darakan
- دَرَكًا
- பிடிக்கப்படுவதை
- walā takhshā
- وَلَا تَخْشَىٰ
- அஞ்சமாட்டீர்
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வஹீ மூலம் அறிவித்தோம். "நீங்கள் என்னுடைய அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக நடந்து (சென்று) விடுங்கள். (வழியில் குறுக்கிடும்) கடலில் (உங்களது தடியால் அடித்து) உலர்ந்த வழியை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். (உங்களை எதிரிகள்) அடைந்து விடுவார்களென்று நீங்கள் பயப்பட வேண்டாம். (அக்கடலில் உங்களுடைய மக்கள் மூழ்கி விடுவார்கள் என்றும்) நீங்கள் அஞ்சாதீர்கள்" (என்றும் அறிவித்தோம்). ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௭)Tafseer
فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُوْدِهٖ فَغَشِيَهُمْ مِّنَ الْيَمِّ مَا غَشِيَهُمْ ۗ ٧٨
- fa-atbaʿahum
- فَأَتْبَعَهُمْ
- அவர்களைப் பின்தொடர்ந்தான்
- fir'ʿawnu
- فِرْعَوْنُ
- ஃபிர்அவ்ன்
- bijunūdihi
- بِجُنُودِهِۦ
- தனது படைகளைக்கொண்டு
- faghashiyahum
- فَغَشِيَهُم
- ஆகவே, அவர்களை சூழவேண்டியது
- mina l-yami
- مِّنَ ٱلْيَمِّ
- கடலில் இருந்து
- mā ghashiyahum
- مَا غَشِيَهُمْ
- எது/ சூழ்ந்தது/அவர்களை
(அவ்வாறே மூஸா நபி இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிடவே) ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின்பற்றிச் சென்றான். (சென்ற அவன் கடலில் அவர்களைப் பின்பற்றிச் செல்லவே) கடலும் (இவர்களில் ஒருவரும் தப்பாது) இவர்களை மூழ்கடிக்க வேண்டியவாறு மூழ்கடித்து விட்டது. ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௮)Tafseer
وَاَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهٗ وَمَا هَدٰى ٧٩
- wa-aḍalla
- وَأَضَلَّ
- வழிகெடுத்தான்
- fir'ʿawnu
- فِرْعَوْنُ
- ஃபிர்அவ்ன்
- qawmahu
- قَوْمَهُۥ
- தன் சமுதாயத்தினரை
- wamā hadā
- وَمَا هَدَىٰ
- அவன் நேர்வழி காட்டவில்லை
ஃபிர்அவ்ன் தன் மக்களை நேரான வழியில் செலுத்தாமல் தவறான வழியிலேயே செலுத்தினான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௯)Tafseer
يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ قَدْ اَنْجَيْنٰكُمْ مِّنْ عَدُوِّكُمْ وَوٰعَدْنٰكُمْ جَانِبَ الطُّوْرِ الْاَيْمَنَ وَنَزَّلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰى ٨٠
- yābanī is'rāīla
- يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- இஸ்ரவேலர்களே!
- qad
- قَدْ
- திட்டமாக
- anjaynākum
- أَنجَيْنَٰكُم
- உங்களை நாம் பாதுகாத்தோம்
- min
- مِّنْ
- எதிரிகளிடமிருந்து
- ʿaduwwikum
- عَدُوِّكُمْ
- எதிரிகளிடமிருந்து உங்கள்
- wawāʿadnākum
- وَوَٰعَدْنَٰكُمْ
- இன்னும் உங்களுக்கு வாக்களித்தோம்
- jāniba
- جَانِبَ
- பகுதியை
- l-ṭūri
- ٱلطُّورِ
- தூர் மலை
- l-aymana
- ٱلْأَيْمَنَ
- வலது
- wanazzalnā
- وَنَزَّلْنَا
- இன்னும் இறக்கினோம்
- ʿalaykumu
- عَلَيْكُمُ
- உங்கள் மீது
- l-mana
- ٱلْمَنَّ
- மன்னு
- wal-salwā
- وَٱلسَّلْوَىٰ
- ஸல்வா
இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நாம் உங்களை உங்களுடைய எதிரிகளிடமிருந்து காப்பாற்றி "தூர்" என்னும் மலையின் வலது பாக(ம் வந்தால் உங்களுக்குத் தவ்றாத்)த்தை(த் தருவதாக) வாக்களித்து (உணவு கிடைக்காத பாலைவனத்தில்) உங்களுக்கு "மன்னு சல்வா"வையும் இறக்கி வைத்தோம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௮௦)Tafseer