Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Page: 7

Taha

(Ṭāʾ Hāʾ)

௬௧

قَالَ لَهُمْ مُّوْسٰى وَيْلَكُمْ لَا تَفْتَرُوْا عَلَى اللّٰهِ كَذِبًا فَيُسْحِتَكُمْ بِعَذَابٍۚ وَقَدْ خَابَ مَنِ افْتَرٰى ٦١

qāla
قَالَ
கூறினார்
lahum
لَهُم
அவர்களுக்கு
mūsā
مُّوسَىٰ
மூஸா
waylakum
وَيْلَكُمْ
உங்களுக்கு கேடுதான்
lā taftarū
لَا تَفْتَرُوا۟
கற்பனை செய்யாதீர்கள்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
kadhiban
كَذِبًا
பொய்யை
fayus'ḥitakum
فَيُسْحِتَكُم
உங்களை அழித்து விடுவான்
biʿadhābin
بِعَذَابٍۖ
வேதனையைக் கொண்டு
waqad
وَقَدْ
திட்டமாக
khāba mani
خَابَ مَنِ
நஷ்டமடைந்து விட்டான்/எவன்
if'tarā
ٱفْتَرَىٰ
கற்பனை செய்தான்
மூஸா (அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி) "உங்களுக்கென்ன கேடு? அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய்யைக் கற்பனை செய்து கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால்) அவன் (தன்) வேதனையைக்கொண்டு உங்களை அழித்துவிடுவான். பொய் சொன்னவர்களெல்லாம் அழிந்தே போனார்கள்" என்று கூறினார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௬௧)
Tafseer
௬௨

فَتَنَازَعُوْٓا اَمْرَهُمْ بَيْنَهُمْ وَاَسَرُّوا النَّجْوٰى ٦٢

fatanāzaʿū
فَتَنَٰزَعُوٓا۟
அவர்கள் தர்க்கித்துக் கொண்டனர்
amrahum
أَمْرَهُم
காரியத்தில் தங்கள்
baynahum
بَيْنَهُمْ
தங்களுக்கு மத்தியில்
wa-asarrū
وَأَسَرُّوا۟
இன்னும் அவர்கள் இரகசியமாக ஆக்கிக் கொண்டனர்
l-najwā
ٱلنَّجْوَىٰ
அந்த பேச்சை
(இதைக் கேட்ட) அவர்கள் தங்களுக்குள் இதைப் பற்றித்தர்க்கித்துக் கொண்டு இரகசியமாகவும் ஆலோசனை செய்து (ஒரு முடிவு கட்டிக்) கொண்டனர். ([௨௦] ஸூரத்து தாஹா: ௬௨)
Tafseer
௬௩

قَالُوْٓا اِنْ هٰذٰنِ لَسٰحِرَانِ يُرِيْدَانِ اَنْ يُّخْرِجٰكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهِمَا وَيَذْهَبَا بِطَرِيْقَتِكُمُ الْمُثْلٰى ٦٣

qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறினார்கள்
in hādhāni
إِنْ هَٰذَٰنِ
நிச்சயமாக இந்த இருவரும்
lasāḥirāni
لَسَٰحِرَٰنِ
சூனியக்காரர்கள்
yurīdāni
يُرِيدَانِ
அவ்விருவரும் நாடுகின்றனர்
an yukh'rijākum
أَن يُخْرِجَاكُم
உங்களை வெளியேற்றுவதற்கு(ம்)
min arḍikum
مِّنْ أَرْضِكُم
உங்கள் பூமியிலிருந்து
bisiḥ'rihimā
بِسِحْرِهِمَا
தங்கள் சூனியத்தைக் கொண்டு
wayadhhabā
وَيَذْهَبَا
இன்னும் அவ்விருவரும் மிகைத்து விடுவதற்கு
biṭarīqatikumu
بِطَرِيقَتِكُمُ
உங்கள்தலைவர்களை
l-muth'lā
ٱلْمُثْلَىٰ
சிறந்த
அவர்கள் (மக்களை நோக்கி) "நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தங்களுடைய சூனியத்தின் மூலம் உங்களை உங்களுடைய இவ்வூரை விட்டு வெளியேற்றி விடவும், உங்களுடைய மேலான மார்க்கத்தை அழித்து விடவும் விரும்புகிறார்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௬௩)
Tafseer
௬௪

فَاَجْمِعُوْا كَيْدَكُمْ ثُمَّ ائْتُوْا صَفًّاۚ وَقَدْ اَفْلَحَ الْيَوْمَ مَنِ اسْتَعْلٰى ٦٤

fa-ajmiʿū
فَأَجْمِعُوا۟
ஆகவே உறுதிப்படுத்துங்கள்
kaydakum
كَيْدَكُمْ
சூழ்ச்சிகளை உங்கள்
thumma
ثُمَّ
பின்பு
i'tū
ٱئْتُوا۟
வாருங்கள்
ṣaffan
صَفًّاۚ
ஓர் அணியாக
waqad
وَقَدْ
திட்டமாக
aflaḥa
أَفْلَحَ
வெற்றி அடைந்து விட்டார்
l-yawma
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
mani is'taʿlā
مَنِ ٱسْتَعْلَىٰ
மிகைத்தவர்
ஆதலால் உங்கள் சூனியங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு பின்பு (அவரை எதிர்க்க) அணியணியாக வாருங்கள். இன்றைய தினம் எவருடைய காரியம் மேலோங்கியதோ அவரே நிச்சயமாக வெற்றி பெறுவார்" என்று கூறினார்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௬௪)
Tafseer
௬௫

قَالُوْا يٰمُوْسٰٓى اِمَّآ اَنْ تُلْقِيَ وَاِمَّآ اَنْ نَّكُوْنَ اَوَّلَ مَنْ اَلْقٰى ٦٥

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
yāmūsā
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
immā an tul'qiya
إِمَّآ أَن تُلْقِىَ
ஒன்று நீர் எறிவீராக
wa-immā an nakūna
وَإِمَّآ أَن نَّكُونَ
அவர்கள் நாங்கள் இருப்போம்
awwala
أَوَّلَ
முதலாவதாக
man alqā
مَنْ أَلْقَىٰ
எறிபவர்களில்
பின்னர் (சூனியம் செய்ய வந்த) அவர்கள் (மூஸாவை நோக்கி) "மூஸாவே! (சூனியத்தை) நீங்கள் எறிகின்றீர்களா? அல்லது முதலாவதாக நாங்கள் எறியவா?" என்று கேட்டார்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௬௫)
Tafseer
௬௬

قَالَ بَلْ اَلْقُوْاۚ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى ٦٦

qāla
قَالَ
அவர் கூறினார்
bal
بَلْ
மாறாக
alqū
أَلْقُوا۟ۖ
நீங்கள் எறியுங்கள்
fa-idhā
فَإِذَا
ஆக, அப்போது
ḥibāluhum
حِبَالُهُمْ
அவர்களுடைய கயிர்களும்
waʿiṣiyyuhum
وَعِصِيُّهُمْ
அவர்களுடைய தடிகளும்
yukhayyalu
يُخَيَّلُ
தோற்றமளிக்கப்பட்டது
ilayhi
إِلَيْهِ
அவருக்கு
min siḥ'rihim
مِن سِحْرِهِمْ
அவர்களுடைய சூனியத்தால்
annahā
أَنَّهَا
அவை
tasʿā
تَسْعَىٰ
ஓடுவதாக
அதற்கவர் "நீங்களே (முதலாவதாக) எறியுங்கள்" என்று கூறினார். (அவர்கள் எறியவே எறிந்த) அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவது போல் இவருக்குத் தோன்றின. ([௨௦] ஸூரத்து தாஹா: ௬௬)
Tafseer
௬௭

فَاَوْجَسَ فِيْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى ٦٧

fa-awjasa
فَأَوْجَسَ
அவர் உணர்ந்தார்
fī nafsihi
فِى نَفْسِهِۦ
தனது உள்ளத்தில்
khīfatan
خِيفَةً
பயத்தை
mūsā
مُّوسَىٰ
மூஸா
ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௬௭)
Tafseer
௬௮

قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰى ٦٨

qul'nā
قُلْنَا
நாம் கூறினோம்
lā takhaf
لَا تَخَفْ
பயப்படாதீர்
innaka anta
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
l-aʿlā
ٱلْأَعْلَىٰ
மிகைத்தவர்
(அச்சமயம் நாம் அவரை நோக்கி) "நீங்கள் பயப்படாதீர்கள்! நிச்சயமாக நீங்கள்தான் உயர்ந்தவர்" என்று கூறினோம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௬௮)
Tafseer
௬௯

وَاَلْقِ مَا فِيْ يَمِيْنِكَ تَلْقَفْ مَا صَنَعُوْاۗ اِنَّمَا صَنَعُوْا كَيْدُ سٰحِرٍۗ وَلَا يُفْلِحُ السّٰحِرُ حَيْثُ اَتٰى ٦٩

wa-alqi
وَأَلْقِ
இன்னும் எறிவீராக
mā fī yamīnika
مَا فِى يَمِينِكَ
உமது கையில் உள்ளதை
talqaf
تَلْقَفْ
விழுங்கி விடும்
mā ṣanaʿū
مَا صَنَعُوٓا۟ۖ
அவர்கள் செய்ததை
innamā ṣanaʿū
إِنَّمَا صَنَعُوا۟
அவர்கள் செய்ததெல்லாம்
kaydu
كَيْدُ
சூழ்ச்சிதான்
sāḥirin
سَٰحِرٍۖ
ஒரு சூனியக்காரனின்
walā yuf'liḥu
وَلَا يُفْلِحُ
வெற்றிபெற மாட்டான்
l-sāḥiru
ٱلسَّاحِرُ
சூனியக்காரன்
ḥaythu atā
حَيْثُ أَتَىٰ
எங்கிருந்து வந்தாலும்
அன்றி, உங்களது வலது கையில் இருப்பதை நீங்கள் எறியுங்கள்! அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரர்களின் (வெறும்) சூழ்ச்சியே(யன்றி உண்மையல்ல). சூனியக்காரர்கள் எங்கிருந்து வந்தபோதிலும் வெற்றி பெறவே மாட்டார்கள்" (என்றும் கூறினோம்). ([௨௦] ஸூரத்து தாஹா: ௬௯)
Tafseer
௭௦

فَاُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْٓا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰى ٧٠

fa-ul'qiya
فَأُلْقِىَ
ஆக, விழுந்தனர்
l-saḥaratu
ٱلسَّحَرَةُ
சூனியக்காரர்கள்
sujjadan
سُجَّدًا
சிரம்பணிந்தவர்களாக
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
birabbi
بِرَبِّ
இறைவனைக்கொண்டு
hārūna
هَٰرُونَ
ஹாரூன்
wamūsā
وَمُوسَىٰ
இன்னும் மூஸாவுடைய
(மூஸா தன் தடியை எறியவே அது பெரியதொரு பாம்பாகி, அவர்கள் செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்கி விட்டது. இதனைக் கண்ணுற்ற) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக வீழ்த்தப்பட்டு "நாங்களும் மூஸா, ஹாரூன் (ஆகிய இவ்விருவருடைய) இறைவனை நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினார்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௭௦)
Tafseer