Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Page: 6

Taha

(Ṭāʾ Hāʾ)

௫௧

قَالَ فَمَا بَالُ الْقُرُوْنِ الْاُوْلٰى ٥١

qāla
قَالَ
அவன் கூறினான்
famā bālu
فَمَا بَالُ
நிலை என்னவாகும்
l-qurūni
ٱلْقُرُونِ
தலைமுறையினர்கள்
l-ūlā
ٱلْأُولَىٰ
முந்திய
அதற்கவன் "முன்னர் சென்றுபோன (சிலை வணக்கம் செய்து கொண்டிருந்த)வர்களின் கதி என்னாகும்?" என்று கேட்டான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௫௧)
Tafseer
௫௨

قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّيْ فِيْ كِتٰبٍۚ لَا يَضِلُّ رَبِّيْ وَلَا يَنْسَىۖ ٥٢

qāla
قَالَ
அவர் கூறினார்
ʿil'muhā
عِلْمُهَا
அவர்களைப் பற்றிய ஞானம்
ʿinda rabbī
عِندَ رَبِّى
என் இறைவனிடம்
fī kitābin
فِى كِتَٰبٍۖ
பதிவுப் புத்தகத்தில்
lā yaḍillu
لَّا يَضِلُّ
தவறு செய்துவிட மாட்டான்
rabbī
رَبِّى
என் இறைவன்
walā yansā
وَلَا يَنسَى
இன்னும் மறக்கமாட்டான்
அதற்கவர் கூறினார்: "அதைப்பற்றிய ஞானம் என் இறைவனிடமிருக்கும் பதிவுப்புத்தகத்தில் இருக்கின்றது. அவன் (அவர்கள் செய்துகொண்டு இருந்ததில் யாதொன்றையும்) தவற விட்டுவிடவும் மாட்டான்; மறந்துவிடவும் மாட்டான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௫௨)
Tafseer
௫௩

الَّذِيْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَكُمْ فِيْهَا سُبُلًا وَّاَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءًۗ فَاَخْرَجْنَا بِهٖٓ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰى ٥٣

alladhī jaʿala
ٱلَّذِى جَعَلَ
எவன்/ஆக்கினான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
mahdan
مَهْدًا
விரிப்பாக
wasalaka
وَسَلَكَ
இன்னும் ஏற்படுத்தினான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
fīhā
فِيهَا
அதில்
subulan
سُبُلًا
பாதைகளை
wa-anzala
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
māan
مَآءً
மழையை
fa-akhrajnā
فَأَخْرَجْنَا
உற்பத்தி செய்கிறோம்
bihi
بِهِۦٓ
அதன்மூலம்
azwājan
أَزْوَٰجًا
பல வகைகளை
min nabātin
مِّن نَّبَاتٍ
தாவரங்களிலிருந்து
shattā
شَتَّىٰ
பலதரப்பட்ட
அவன்தான் பூமியை உங்களுக்கு இருப்பிடமாக அமைத்து (நீங்கள் செல்லக்கூடிய) வழிகளையும் அதில் ஏற்படுத்தி மேகத்தில் இருந்து மழையையும் பொழியச் செய்கிறான்." (மேலும் என் இறைவன் கூறுகிறான்:) "நாம் இறக்கி வைக்கும் (ஒரே வித) மழை நீரைக் கொண்டு (குணத்திலும், ரசனையிலும்) பற்பல விதமான புற்பூண்டுகளை (ஆண், பெண்) ஜோடி ஜோடிகளாக நாம் வெளிப் படுத்துகின்றோம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௫௩)
Tafseer
௫௪

كُلُوْا وَارْعَوْا اَنْعَامَكُمْ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّاُولِى النُّهٰى ࣖ ٥٤

kulū
كُلُوا۟
சாப்பிடுங்கள்
wa-ir'ʿaw
وَٱرْعَوْا۟
இன்னும் மேய்த்துக் கொள்ளுங்கள்
anʿāmakum
أَنْعَٰمَكُمْۗ
உங்கள் கால் நடைகளை
inna
إِنَّ
நிச்சயம்
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
li-ulī l-nuhā
لِّأُو۟لِى ٱلنُّهَىٰ
அறிவுடையவர்களுக்கு
(ஆகவே, அவைகளை) நீங்களும் புசியுங்கள்; உங்கள் (ஆடு மாடு போன்ற) கால்நடைகளையும் மேயவிடுங்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௨௦] ஸூரத்து தாஹா: ௫௪)
Tafseer
௫௫

۞ مِنْهَا خَلَقْنٰكُمْ وَفِيْهَا نُعِيْدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرٰى ٥٥

min'hā
مِنْهَا
அதிலிருந்துதான்
khalaqnākum
خَلَقْنَٰكُمْ
உங்களைப் படைத்தோம்
wafīhā
وَفِيهَا
இன்னும் அதில்தான்
nuʿīdukum
نُعِيدُكُمْ
மீட்டுக் கொண்டுவருவோம் உங்களை
wamin'hā
وَمِنْهَا
இன்னும் அதிலிருந்துதான்
nukh'rijukum
نُخْرِجُكُمْ
வெளியேற்றுவோம்
tāratan
تَارَةً
முறை
ukh'rā
أُخْرَىٰ
மற்றொரு
பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர், அதிலேயே நாம் உங்களைச் சேர்த்துவிடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே நாம் உங்களை வெளிப்படுத்துவோம்." (இவ்வாறு ஃபிர்அவ்னிடம் மூஸா கூறினார்.) ([௨௦] ஸூரத்து தாஹா: ௫௫)
Tafseer
௫௬

وَلَقَدْ اَرَيْنٰهُ اٰيٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَاَبٰى ٥٦

walaqad araynāhu
وَلَقَدْ أَرَيْنَٰهُ
திட்டமாக அவனுக்கு நாம் காண்பித்தோம்
āyātinā
ءَايَٰتِنَا
நமது அத்தாட்சிகள்
kullahā
كُلَّهَا
அனைத்தும்
fakadhaba
فَكَذَّبَ
எனினும் அவன் பொய்ப்பித்தான்
wa-abā
وَأَبَىٰ
இன்னும் ஏற்க மறுத்தான்
நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் அவனுக்குக் காண்பித்தோம். எனினும், அவனோ (இவை யாவும்) பொய்யெனக் கூறி (நம்பிக்கை கொள்ளாது) விலகிக்கொண்டான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௫௬)
Tafseer
௫௭

قَالَ اَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ اَرْضِنَا بِسِحْرِكَ يٰمُوْسٰى ٥٧

qāla
قَالَ
அவன் கூறினான்
aji'tanā
أَجِئْتَنَا
எங்களிடம் வந்தீரா?
litukh'rijanā
لِتُخْرِجَنَا
எங்களை நீர் வெளியேற்றுவதற்காக
min arḍinā
مِنْ أَرْضِنَا
எங்கள் பூமியிலிருந்து
bisiḥ'rika
بِسِحْرِكَ
உமது சூனியத்தால்
yāmūsā
يَٰمُوسَىٰ
மூஸாவே!
(அன்றி) "மூஸாவே! நீங்கள் உங்களுடைய சூனியத்தின் மூலம் எங்களை, எங்களின் ஊரைவிட்டு வெளியேற்றவா எங்களிடம் வந்தீர்கள்? ([௨௦] ஸூரத்து தாஹா: ௫௭)
Tafseer
௫௮

فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِّثْلِهٖ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَّا نُخْلِفُهٗ نَحْنُ وَلَآ اَنْتَ مَكَانًا سُوًى ٥٨

falanatiyannaka
فَلَنَأْتِيَنَّكَ
நிச்சயமாக உம்மிடம் கொண்டு வருவோம்
bisiḥ'rin
بِسِحْرٍ
ஒரு சூனியத்தை
mith'lihi
مِّثْلِهِۦ
அதுபோன்ற
fa-ij'ʿal
فَٱجْعَلْ
ஆகவே, ஏற்படுத்து
baynanā
بَيْنَنَا
எங்களுக்கு மத்தியிலும்
wabaynaka
وَبَيْنَكَ
உங்களுக்கு மத்தியிலும்
mawʿidan
مَوْعِدًا
குறிப்பிட்ட நேரத்தை
lā nukh'lifuhu
لَّا نُخْلِفُهُۥ
அதற்கு மாறுசெய்ய மாட்டோம்
naḥnu
نَحْنُ
நாமும்
walā anta
وَلَآ أَنتَ
நீயும் (அதற்கு மாறுசெய்யக் கூடாது)
makānan
مَكَانًا
ஓர் இடத்தில்
suwan
سُوًى
சமமான
இதைப்போன்ற சூனியத்தை நாங்களும் உங்களுக்குச் செய்து காண்பிப்போம். நாங்களோ அல்லது நீங்களோ தவறிவிடாது இருக்கக் கூடியவாறு ஒரு சமமான பூமியில் செய்து காண்பிக்க எங்களுக்கும் உங்களுக்குமிடையில் ஒரு தவணையைக் குறிப்பிடுங்கள்" என்று கூறினான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௫௮)
Tafseer
௫௯

قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِّيْنَةِ وَاَنْ يُّحْشَرَ النَّاسُ ضُحًى ٥٩

qāla
قَالَ
அவர் கூறினார்
mawʿidukum
مَوْعِدُكُمْ
வாக்களிக்கப் பட்ட நேரம் உங்களுக்கு
yawmu l-zīnati
يَوْمُ ٱلزِّينَةِ
யவ்முஸ் ஸீனா
wa-an yuḥ'shara
وَأَن يُحْشَرَ
இன்னும் ஒன்றுதிரட்டப்படுவது
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
ḍuḥan
ضُحًى
முற்பகலில்
அதற்கு மூஸா "உங்கள் பண்டிகை நாளே உங்களுக்குத் தவணையாகும். ஆனால், மக்கள் அனைவரும் முற்பகலிலேயே கூடிவிடவேண்டும்" என்று கூறினார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௫௯)
Tafseer
௬௦

فَتَوَلّٰى فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهٗ ثُمَّ اَتٰى ٦٠

fatawallā
فَتَوَلَّىٰ
திரும்பிச் சென்றான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
fajamaʿa
فَجَمَعَ
ஒன்றிணைத்தான்
kaydahu
كَيْدَهُۥ
தனது சூழ்ச்சியை
thumma
ثُمَّ
பிறகு
atā
أَتَىٰ
வந்தான்
பின்னர், ஃபிர்அவ்ன் அவரைவிட்டு விலகி (தன் இருப்பிடம் சென்று சூனியத்திற்குரிய) தன்னுடைய எல்லா சூழ்ச்சிகளையும் சேகரித்துக் கொண்டு பின்பு (குறித்த நாளில், குறித்த இடத்திற்கு) வந்தான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௬௦)
Tafseer