Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Page: 5

Taha

(Ṭāʾ Hāʾ)

௪௧

وَاصْطَنَعْتُكَ لِنَفْسِيْۚ ٤١

wa-iṣ'ṭanaʿtuka
وَٱصْطَنَعْتُكَ
இன்னும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்
linafsī
لِنَفْسِى
எனக்காகவே
எனக்காக நான் உங்களைத் தெரிந்தெடுத்திருக்கின்றேன். ([௨௦] ஸூரத்து தாஹா: ௪௧)
Tafseer
௪௨

اِذْهَبْ اَنْتَ وَاَخُوْكَ بِاٰيٰتِيْ وَلَا تَنِيَا فِيْ ذِكْرِيْۚ ٤٢

idh'hab
ٱذْهَبْ
செல்வீர்களாக!
anta
أَنتَ
நீரும்
wa-akhūka
وَأَخُوكَ
உனது சகோதரரும்
biāyātī
بِـَٔايَٰتِى
என் அத்தாட்சிகளைக் கொண்டு
walā taniyā
وَلَا تَنِيَا
இன்னும் நீங்கள் இருவரும் சோர்வடையாதீர்கள்
fī dhik'rī
فِى ذِكْرِى
என்னை நினைவு கூர்வதில்
ஆகவே, நீங்கள் உங்களுடைய சகோதரருடன் என்னுடைய அத்தாட்சிகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். நீங்கள் இருவரும் என்னை நினைவு கூர்வதில் சோர்வடைந்து விடாதீர்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௪௨)
Tafseer
௪௩

اِذْهَبَآ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰىۚ ٤٣

idh'habā
ٱذْهَبَآ
நீங்கள் இருவரும் செல்வீர்களாக
ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ṭaghā
طَغَىٰ
வரம்பு மீறிவிட்டான்
நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௪௩)
Tafseer
௪௪

فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى ٤٤

faqūlā
فَقُولَا
நீங்கள் இருவரும் கூறுவீர்களாக
lahu
لَهُۥ
அவனுக்கு
qawlan
قَوْلًا
சொல்லை
layyinan
لَّيِّنًا
மென்மையான
laʿallahu yatadhakkaru
لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ
அவன் நல்லறிவு பெறுகிறானா
aw
أَوْ
அல்லது
yakhshā
يَخْشَىٰ
பயப்படுகிறானா
நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்" என்றும் கூறினோம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௪௪)
Tafseer
௪௫

قَالَا رَبَّنَآ اِنَّنَا نَخَافُ اَنْ يَّفْرُطَ عَلَيْنَآ اَوْ اَنْ يَّطْغٰى ٤٥

qālā
قَالَا
இருவரும் கூறினர்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவன்
innanā
إِنَّنَا
நிச்சயமாக நங்கள்
nakhāfu
نَخَافُ
பயப்படுகிறோம்
an yafruṭa
أَن يَفْرُطَ
அவசரப்படுவதை
ʿalaynā
عَلَيْنَآ
எங்கள் மீது
aw
أَوْ
அல்லது
an yaṭghā
أَن يَطْغَىٰ
வரம்பு மீறுவதை
அதற்கு அவ்விருவரும் "எங்கள் இறைவனே! அவன் எங்கள் மீது (வரம்பு) மீறி கொடுமை செய்வானோ அல்லது விஷமம் செய்வானோ என்று நாங்கள் பயப்படுகிறோம்" என்று கூறினார்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௪௫)
Tafseer
௪௬

قَالَ لَا تَخَافَآ اِنَّنِيْ مَعَكُمَآ اَسْمَعُ وَاَرٰى ٤٦

qāla
قَالَ
கூறினான்
lā takhāfā
لَا تَخَافَآۖ
இருவரும் பயப்படாதீர்கள்
innanī
إِنَّنِى
நிச்சயமாக நான்
maʿakumā
مَعَكُمَآ
உங்கள் இருவருடன்
asmaʿu
أَسْمَعُ
(நான்) கேட்பவனாக
wa-arā
وَأَرَىٰ
இன்னும் பார்ப்பவனாக (இருக்கிறேன்)
(அதற்கு இறைவன்) கூறினான்: "நீங்கள் பயப்படவேண்டாம். நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருப்பேன்." ([௨௦] ஸூரத்து தாஹா: ௪௬)
Tafseer
௪௭

فَأْتِيٰهُ فَقُوْلَآ اِنَّا رَسُوْلَا رَبِّكَ فَاَرْسِلْ مَعَنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ەۙ وَلَا تُعَذِّبْهُمْۗ قَدْ جِئْنٰكَ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكَ ۗوَالسَّلٰمُ عَلٰى مَنِ اتَّبَعَ الْهُدٰى ٤٧

fatiyāhu
فَأْتِيَاهُ
ஆகவே இருவரும் வாருங்கள்
faqūlā
فَقُولَآ
இன்னும் கூறுங்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
rasūlā
رَسُولَا
தூதர்கள்
rabbika
رَبِّكَ
உனது இறைவனின்
fa-arsil
فَأَرْسِلْ
ஆகவே அனுப்பி விடு
maʿanā
مَعَنَا
எங்களுடன்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை
walā tuʿadhib'hum
وَلَا تُعَذِّبْهُمْۖ
இன்னும் அவர்களை வேதனை செய்யாதே
qad ji'nāka
قَدْ جِئْنَٰكَ
திட்டமாக உன்னிடம் நாங்கள் கொண்டு வந்துள்ளோம்
biāyatin
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியை
min rabbika
مِّن رَّبِّكَۖ
உமது இறைவனிடமிருந்து
wal-salāmu
وَٱلسَّلَٰمُ
ஈடேற்றம் உண்டாகுக
ʿalā mani ittabaʿa
عَلَىٰ مَنِ ٱتَّبَعَ
பின்பற்றியவருக்கு
l-hudā
ٱلْهُدَىٰٓ
நேர்வழியை
நீங்கள் இருவரும் அவனிடத்தில் சென்று சொல்லுங்கள்: "நாங்கள் உன் இறைவனின் தூதர்கள். இஸ்ராயீலின் சந்ததிகளை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களை வேதனை செய்யாதே! மெய்யாகவே நாங்கள் உன் இறைவனுடைய அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறோம். நேரான வழியைப் பின்பற்றிய லிவர்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். ([௨௦] ஸூரத்து தாஹா: ௪௭)
Tafseer
௪௮

اِنَّا قَدْ اُوْحِيَ اِلَيْنَآ اَنَّ الْعَذَابَ عَلٰى مَنْ كَذَّبَ وَتَوَلّٰى ٤٨

innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
qad
قَدْ
திட்டமாக
ūḥiya
أُوحِىَ
வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது
ilaynā
إِلَيْنَآ
எங்களுக்கு
anna
أَنَّ
நிச்சயமாக
l-ʿadhāba
ٱلْعَذَابَ
தண்டனை
ʿalā
عَلَىٰ
மீது
man kadhaba
مَن كَذَّبَ
பொய்ப்பித்தவர்
watawallā
وَتَوَلَّىٰ
புறக்கணித்து திரும்பினார்
(எங்களை) பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றவன் மீது வேதனை இறங்குமென்று எங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டது" (என்பதை தெரிவியுங்கள்). ([௨௦] ஸூரத்து தாஹா: ௪௮)
Tafseer
௪௯

قَالَ فَمَنْ رَّبُّكُمَا يٰمُوْسٰى ٤٩

qāla
قَالَ
அவன் கூறினான்
faman
فَمَن
யார்
rabbukumā
رَّبُّكُمَا
உங்கள் இருவரின் இறைவன்
yāmūsā
يَٰمُوسَىٰ
மூஸாவே!
(அதற்கு) அவன் "மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?" என்றான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௪௯)
Tafseer
௫௦

قَالَ رَبُّنَا الَّذِيْٓ اَعْطٰى كُلَّ شَيْءٍ خَلْقَهٗ ثُمَّ هَدٰى ٥٠

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbunā
رَبُّنَا
எங்கள் இறைவன்
alladhī aʿṭā
ٱلَّذِىٓ أَعْطَىٰ
எவன்/கொடுத்தான்
kulla
كُلَّ
ஒவ்வொரு
shayin
شَىْءٍ
பொருளுக்கும்
khalqahu
خَلْقَهُۥ
அதற்குரியபடைப்பை
thumma
ثُمَّ
பிறகு
hadā
هَدَىٰ
வழிகாட்டினான்
அதற்கு மூஸா "எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இயற்கைத் தன்மையைக் கொடுத்து (அவைகளை பயன்படுத்தும்) வழியையும் (அவைகளுக்கு) அறிவித்தானோ அவன்தான் எங்கள் இறைவன்" என்றார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௫௦)
Tafseer