Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Page: 4

Taha

(Ṭāʾ Hāʾ)

௩௧

اشْدُدْ بِهٖٓ اَزْرِيْ ۙ ٣١

ush'dud
ٱشْدُدْ
பலப்படுத்து
bihi
بِهِۦٓ
அதன் மூலம்
azrī
أَزْرِى
எனது முதுகை
அவரைக் கொண்டு என் ஆற்றலை உறுதிப்படுத்தி வை. ([௨௦] ஸூரத்து தாஹா: ௩௧)
Tafseer
௩௨

وَاَشْرِكْهُ فِيْٓ اَمْرِيْ ۙ ٣٢

wa-ashrik'hu
وَأَشْرِكْهُ
அவரை இணைத்துவிடு
fī amrī
فِىٓ أَمْرِى
எனது காரியத்தில்
என் காரியங்களில் அவரையும் கூட்டாளியாக்கி வை. ([௨௦] ஸூரத்து தாஹா: ௩௨)
Tafseer
௩௩

كَيْ نُسَبِّحَكَ كَثِيْرًا ۙ ٣٣

kay nusabbiḥaka
كَىْ نُسَبِّحَكَ
நாங்கள் உன்னை துதிப்பதற்காக
kathīran
كَثِيرًا
அதிகம்
நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் புகழ்வோம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௩௩)
Tafseer
௩௪

وَّنَذْكُرَكَ كَثِيْرًا ۗ ٣٤

wanadhkuraka
وَنَذْكُرَكَ
இன்னும் நாங்கள் உன்னை நினைவு கூருவதற்காக
kathīran
كَثِيرًا
அதிகம்
(பின்னும்) உன்னை அதிகமாகவே நினைவு கூர்வோம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௩௪)
Tafseer
௩௫

اِنَّكَ كُنْتَ بِنَا بَصِيْرًا ٣٥

innaka
إِنَّكَ
நிச்சயமாக நீ
kunta binā
كُنتَ بِنَا
இருக்கின்றாய்/ எங்களை
baṣīran
بَصِيرًا
உற்று நோக்கியவனாக
எங்கள் இறைவனே! நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கிறாய்" என்று (மூஸா) பிரார்த்தனை செய்தார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௩௫)
Tafseer
௩௬

قَالَ قَدْ اُوْتِيْتَ سُؤْلَكَ يٰمُوْسٰى ٣٦

qāla
قَالَ
அவன் கூறினான்
qad ūtīta
قَدْ أُوتِيتَ
திட்டமாக கொடுக்கப்பட்டீர்
su'laka
سُؤْلَكَ
உமது கோரிக்கையை
yāmūsā
يَٰمُوسَىٰ
மூஸாவே!
அதற்கு (இறைவன்) கூறினான், "மூஸாவே! நீங்கள் கேட்ட யாவும் நிச்சயமாக உங்களுக்குக் கொடுக்கப்பட்டன, ([௨௦] ஸூரத்து தாஹா: ௩௬)
Tafseer
௩௭

وَلَقَدْ مَنَنَّا عَلَيْكَ مَرَّةً اُخْرٰىٓ ۙ ٣٧

walaqad
وَلَقَدْ
திட்டமாக
manannā
مَنَنَّا
அருள் புரிந்திருக்கின்றேன்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
marratan
مَرَّةً
முறை
ukh'rā
أُخْرَىٰٓ
மற்றொரு
(இதற்கு) முன்னரும் ஒருமுறை நிச்சயமாக நாம் உங்களுக்குப் பேரருள் புரிந்திருக்கிறோம்." (அதாவது:) ([௨௦] ஸூரத்து தாஹா: ௩௭)
Tafseer
௩௮

اِذْ اَوْحَيْنَآ اِلٰٓى اُمِّكَ مَا يُوْحٰىٓ ۙ ٣٨

idh awḥaynā
إِذْ أَوْحَيْنَآ
நாம் அறிவித்தபோது
ilā ummika
إِلَىٰٓ أُمِّكَ
உமது தாய்க்கு
mā yūḥā
مَا يُوحَىٰٓ
அறிவிக்கப்பட வேண்டியவற்றை
உங்கள் தாய்க்கு வஹீ மூலமாக நாம் அறிவித்த சமயம், ([௨௦] ஸூரத்து தாஹா: ௩௮)
Tafseer
௩௯

اَنِ اقْذِفِيْهِ فِى التَّابُوْتِ فَاقْذِفِيْهِ فِى الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّ لِّيْ وَعَدُوٌّ لَّهٗ ۗوَاَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّيْ ەۚ وَلِتُصْنَعَ عَلٰى عَيْنِيْ ۘ ٣٩

ani iq'dhifīhi
أَنِ ٱقْذِفِيهِ
அதாவது அவரை போடுவீராக
fī l-tābūti
فِى ٱلتَّابُوتِ
பேழையில்
fa-iq'dhifīhi
فَٱقْذِفِيهِ
அதை போடுவீராக
fī l-yami
فِى ٱلْيَمِّ
கடலில்
falyul'qihi
فَلْيُلْقِهِ
அதை எறியும்
l-yamu
ٱلْيَمُّ
கடல்
bil-sāḥili
بِٱلسَّاحِلِ
கரையில்
yakhudh'hu
يَأْخُذْهُ
அதை எடுப்பான்
ʿaduwwun
عَدُوٌّ
எதிரி
لِّى
எனது
waʿaduwwun
وَعَدُوٌّ
இன்னும் எதிரி
lahu
لَّهُۥۚ
அவரது
wa-alqaytu
وَأَلْقَيْتُ
இன்னும் ஏற்படுத்தினேன்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
maḥabbatan
مَحَبَّةً
அன்பை
minnī
مِّنِّى
என் புறத்திலிருந்து
walituṣ'naʿa
وَلِتُصْنَعَ
இன்னும் நீ பராமரிக்கப்படுவதற்காக
ʿalā ʿaynī
عَلَىٰ عَيْنِىٓ
என் கண்பார்வையில்
"(உங்களது இனத்தாரின் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். உங்களைப் பற்றி உங்கள் தாய் கவலை கொண்டாள். ஆகவே, உங்கள் தாயை நோக்கி) "உங்களைப் பேழையில் வைத்து கடலில் எறிந்துவிடுங்கள். அக்கடல் அதனைக் கரையில் சேர்த்துவிடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதனை எடுத்துக்கொள்வான் என்று (உங்கள் தாய்க்கு அறிவித்தோ)ம். நீங்கள் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு) உங்கள்மீது என் அன்பை சொரிந்(து உங்களைப் பார்ப்பவர்கள் விரும்பும்படிச் செய்)தோம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௩௯)
Tafseer
௪௦

اِذْ تَمْشِيْٓ اُخْتُكَ فَتَقُوْلُ هَلْ اَدُلُّكُمْ عَلٰى مَنْ يَّكْفُلُهٗ ۗفَرَجَعْنٰكَ اِلٰٓى اُمِّكَ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ەۗ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنٰكَ مِنَ الْغَمِّ وَفَتَنّٰكَ فُتُوْنًا ەۗ فَلَبِثْتَ سِنِيْنَ فِيْٓ اَهْلِ مَدْيَنَ ەۙ ثُمَّ جِئْتَ عَلٰى قَدَرٍ يّٰمُوْسٰى ٤٠

idh tamshī
إِذْ تَمْشِىٓ
நடந்து சென்றபோது
ukh'tuka
أُخْتُكَ
உமது சகோதரி
fataqūlu
فَتَقُولُ
கூறினாள்
hal adullukum
هَلْ أَدُلُّكُمْ
நான் உங்களுக்கு அறிவிக்கவா?
ʿalā man yakfuluhu
عَلَىٰ مَن يَكْفُلُهُۥۖ
அவரை பொறுப்பேற்பவரை
farajaʿnāka
فَرَجَعْنَٰكَ
உம்மை திரும்பக் கொண்டு வந்தோம்
ilā ummika
إِلَىٰٓ أُمِّكَ
உமது தாயிடமே
kay taqarra
كَىْ تَقَرَّ
குளிர்வதற்காக
ʿaynuhā
عَيْنُهَا
அவளது கண்
walā taḥzana
وَلَا تَحْزَنَۚ
இன்னும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காக
waqatalta
وَقَتَلْتَ
நீர் கொன்று விட்டீர்
nafsan
نَفْسًا
ஓர் உயிரை
fanajjaynāka
فَنَجَّيْنَٰكَ
உம்மை நாம் பாதுகாத்தோம்
mina l-ghami
مِنَ ٱلْغَمِّ
அந்த துக்கத்திலிருந்து
wafatannāka
وَفَتَنَّٰكَ
இன்னும் உம்மை நாம் சோதித்தோம்
futūnan
فُتُونًاۚ
பல சோதனைகளில்
falabith'ta
فَلَبِثْتَ
ஆக, நீர் தங்கினீர்
sinīna
سِنِينَ
பல ஆண்டுகள்
fī ahli
فِىٓ أَهْلِ
வாசிகளிடம்
madyana
مَدْيَنَ
மத்யன்
thumma
ثُمَّ
பிறகு
ji'ta
جِئْتَ
நீர் அடைந்தீர்
ʿalā qadarin
عَلَىٰ قَدَرٍ
ஒரு குறிப்பிட்ட நேரத்தை
yāmūsā
يَٰمُوسَىٰ
மூஸாவே!
உங்களுடைய சகோதரி சென்று (உங்களை எடுத்தவர் களிடம்) "இக்குழந்தைக்கு(ப் பால் கொடுக்கும்) பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடியவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று கூறும்படிச் செய்து, உங்கள் தாய் கவலைப்படாது அவளின் கண் குளிர்ந்திருக்கும் பொருட்டு, உங்கள் தாயிடமே உங்களைக் கொண்டு வந்(து சேர்த்)தோம். பின்னர், நீங்கள் ஓர் மனிதரைக் கொலை செய்துவிட்டு (அதற்காக) நீங்கள் கொண்ட கவலையில் இருந்து உங்களைக் காப்பாற்றினோம். (இவ்வாறு) உங்களைப் பல வகைகளிலும் சோதித்த பின்னர், மதியன்வாசிகளிடமும் நீங்கள் பல வருடங்கள் தங்கியிருந்தீர்கள். மூஸாவே! இதற்குப் பின்னர்தான் நீங்கள் (நம் தூதுக்குரிய) தக்க பக்குவமடைந்தீர்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௪௦)
Tafseer